Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஸ்.பி திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர்

எஸ்.பி திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் 1000 ரூபாவை அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களால் பெற்றுகொடுக்க முடியாவிட்டால் அரசாங்கத்தோடு தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தை பேசுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தயாராக இருப்பதாக தேசிய ஒருமைபாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகனேசன் தெரிவித்தார். 

நேற்று (14) பொகவந்தலாவ சென்.மேரீஸ் மத்திய கல்லூரியில் அமைச்சின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இலவச நடமாடும் சேவையில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். 

நோர்வூட் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான பா.சிவனேசன் மற்றும் பழனிவேல் கல்யானகுமார் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.டி.பி. சுமனசேகர மற்றும் பலரும் கலந்து கொண்டனர். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கூறுகிறார். தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பேச்சுவார்த்தை தொடர்பில் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவோம். பேச்சுவார்த்தையில் அரசாங்கம் இணக்கபாட்டுக்கு வாராவிட்டால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க போவதாக கூறுகிறார். 

அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்துவதை நாங்கள் பார்த்து கொள்கிறோம். ஆனால் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தாங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை எங்களுக்கு அறிவிக்க வேண்டும். அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடாத்த நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் தான் அரசாங்கம் என தெரிவித்தார். 

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தற்போதைய நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. யார் யாரோடு வேண்டுமானாலும் பேசலாம் அது ஒரு பிரச்சினை அல்ல நானும் அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினேன். அதாவது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்துவதா புதிய முறையில் நடத்துவதா தொடர்பில் கலந்துரையாடினேன். 

கடந்த காலங்களில் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று கொண்டு விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகனுடன் கலந்துறையாடினேன். அது சட்டவிரோதம் அல்ல ஏன் என்றால் நானும் கலந்துரையாடல் அமைச்சர் அதேபோன்று நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாரோடு வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காபந்து என்ற அரசாங்கம் வாராது காபந்து என்றால் ஆபத்து என்று அர்த்தம். 

ஆபத்து வரும் என்று மஹிந்த ராஜபக்ஷவோ, மைத்திபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ சொல்லவில்லை. மனோகனேசன் சொல்லவில்லை. இதனை சொல்வது எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் யார் பாராளுமன்றத்திற்கு பின்புற கதவு வழியாக தலையில் முக்காடு போட்டு கொண்டு வந்தவர்கள். 

எஸ்.பி திஸாநாயக்க என்பவர் ஒரு பொய்க்காரர் கடந்த உள்ளூராட்சி தேர்தல் காலபகுதியிலே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களை தலவாகலையில் வைத்து பொய்யான விமர்சனங்களை செய்து வந்தார். அதுமட்டும் அல்ல யானை ஊழியர் சேமலாப நிதியினை விளுங்கிவிட்டதாக தெரிவித்தார். 

ஆனால் இன்று பொகவந்தலாவையிலே இடம்பெறுகின்ற நடமாடும் சேவையில் ஊழியர் சேமலாப திணைக்களம் இருக்கிறது. அங்கு சென்று மக்களுடைய இலக்கத்தை கூறி மக்களின் ஊழியர் சேமலாப பணத்திலே எவ்வளவு நிலுவை தொகை இருக்கிறது என தெரிந்து கொள்ள முடியும். இதேவேளை மாகாணசபை தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாத காலபகுதியில் பலமுறையில் இடம்பெறும் எனவும் குறிப்பிட்டார். 

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.