Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த பிரதமரானது அரசியலமைப்பிற்கு முரணானது – ஐ.தே.க. திட்டவட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த பிரதமரானது அரசியலமைப்பிற்கு முரணானது – ஐ.தே.க. திட்டவட்டம்!

 

mangala-samaraweera-720x450.jpg

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணான விடயம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ  பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

இதையடுத்து இது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மஹிந்த-பிரதமரானது-அரசியல/

அரசியலமைப்பை சுட்டிக்காட்டி ரணில், மைத்திரிக்கு கடிதம்!

ranil-maithiri-720x450.jpg

19 ஆவது அரசியலமைப்பின் 42 இலக்கம் 4 ஆம் சரத்தின் படி தன்னை பதவி விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் அரசியலமைப்பின் பிரகாரம் பதவியேற்ற ஒரு பிரதமர் எனவும் அதற்கு அமையவே தான் அந்த பதவியில் நீடிப்பதாகவும் அவர் உறுதிப்படக் கூறினார்.

அதற்கமைய தான் பிரதமருக்குரிய உத்தியோகப்பூர்வ அலுவலகத்தில் தொடர்ந்தும் கடமையாற்றுவதாகவும் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஜனாதிபதி கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.

இதற்கு ரணில் விக்ரமசிங்க எழுதியுள்ள பதில் கடிதத்தில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DqdEh9TWsAYlP0i.jpg

 

http://athavannews.com/அரசியலமைப்பை-சுட்டிக்கா/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.