Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அல்பேட் ஐன்ஸ்டீனின் தத்துவங்கள்

Featured Replies

ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி

முதல் தியரி – பிரவுனியன் மோஷன்

பிரவுனியன் மோஷன் என்பது ஒரு திரவத்திலோ வாயுவிலோ நுட்பமான அணுக்களும் மாலிக்யூல்களும் கால்பந்தாட்டம் போல் மோதிக் கொள்ளும் தற்செயலான இயக்கத்துக்கு வைத்த பெயர். தூசு படிந்த வீட்டில் வெயில் கற்றை சாயும் போது அல்லது பி.சி.திருராம் படங்களiல் கதவைத் திறந்தால் சின்னச் சின்ன துகள்கள் கன்னாபின்னா என்று ஒளiக்கற்றையில் அலையுமே, அது பிரவுனியன் மோஷனுக்கு உதாரணம். திரவ, வாயுப் பொருள்களiல் நிகழும் தன்னிச்சையான மாலிக்யூலர் மோதல்கள். 1827ல் ராபர்ட் பிரவுன் என்பவர்தான் இதை முதலில் கவனித்தார். இதற்கு மற்றவர்களைவிட, ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் பிரசித்தமானது.

அணு என்பது அதுவரை சந்தேகக் கேஸாக இருந்தது. கைனெட்டிக் தியரி ஆஃப் ஃப்ளுயிட்ஸ் என்னும் தியரி அடிப்படையில், மாலிக்யூல்கள் முட்டி மோதிக் கொள்வதை ஐன்ஸ்டைன் விவரித்த போது, அணு இருப்பது நிரூபிக்கப்பட்டது.

ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி

ஐன்ஸ்டைனின் இரண்டாவது கட்டுரை, ஃபோட்டோ எலெக்டிரிசிட்டிக்கு அவர் தந்த விளக்கம்:-

ஃபோட்டோ எலெக்டிரிசிட்டி என்பதை நீங்கள் சோலார் பேனல்களiல் பார்த்து இருப்பீர்கள். சிலிக்கன் மேல் டையாக்ஸைடு போன்ற பொருள்கள் விழுவதால் க்ரண்ட் பாய்கிறது. இது ஃபோட்டோ எலெக்டிரிக் விளைவால் ஏற்படுவது. ஐன்ஸ்டைனுக்கு முன், ஒளi அலை வடிவமானது என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தார்கள். ஒளi துகள்களால் ஆனது என்கிற சித்தாந்தத்தை கொண்டுவந்து ஃபோட்டோ எலெக்டிரிக் விளைவை விளக்கினார் ஐன்ஸ்டைன். இந்த ஒளiத் துகள்களுக்கு(எலெக்ட்ரான் , ப்ரோட்டான் போல) ஃபோட்டான் என்று பின்னர் பெயர் வைத்தனர். ஐன்ஸ்டைனின் விளக்கம், க்வாண்டம் இயற்பியல் என்னும் நவீன சிந்தனைக்கு வித்திட்டது.

ஐன்ஸ்டைனின் மூன்றாவது கட்டுரை, ஸ்பெஷல் ரிலேட்டிவிட்டி தியரி:-

தனிச்சார்பியல் தத்துவம்

பிரபஞ்சத்தில் மாறாதவை என மிகச் சில உள்ளன. ஓளiயும் அதன் அண்ணா, தம்பிகளான எக்ஸ்ரே, மின்காந்த அலைகளும் பரவும் வேகமும் எந்த அமைப்பிலும் மாறாதது. ஸ்திரமானது. அதை விட வேகமாகப் பயணம் செய்யவே முடியாது. அதை மிஞ்ச முடியும் என்று கொண்டால், கணக்கு உதைக்கிறது. அதனால் கால, தூர, இடைவெளiகள் எல்லோருக்கும் ஒன்று அல்ல. வேகமாகப் பயணம் செய்தால் ஒரு அடி முக்கால் அடியாகும். ஒரு செகண்ட் ரெண்டு செகண்டாகும் (ஒரு பேச்சுக்கு) இப்படி காலமும் தூரமும் அட்ஜஸ்ட் செய்து கொண்டால் தான் ஒளiயின் வேகம் மாறாமல் இருக்க முடியும் என்றார் ஐன்ஸ்டைன். மேலும் சீராகச் செல்லும் உலகுக்கும் நிற்கும் ஸ்திர உலகுக்கும் வேறுபாடே சொல்ல முடியாது என்றார். புரட்சிகரமான கருத்துகள். நவீன இயற்பியலில், நடைமுறையில் பார்ட்டிக்கிள் ஆக்ஸலரேட்டர்கள் என்னும் ராட்சத பரிசோதனைக் கருவிகளiல், ஒளiவேகத்துக்கு அருகில் துகள்களைத் துரத்தி அளந்து, ஐன்ஸ் சொன்னது சரியே என்று கண்டுபிடித்தார்கள்.

பின்னர், நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும் போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்... ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில் என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.

நான்காவதாக:-

மேட்டர் என்னும் பருப்பொருளுக்கும் சக்திக்கும் உள்ள தொடர்பை விளக்கும் பிரபலமான என்னும் சமன்பாடு புறப்பட்டது. அணு ஆயுதங்களுக்கெல்லாம் பின்னணியில் இருக்கும் சித்தாந்தம் இந்தச் சமன்பாடுதான். 1921ல் தான் ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசு தந்தார்கள். அதுவும் ரிலேட்டிவிட்டிக்கு அல்ல ஃபோட்டான் கண்டுபிடிப்புக்கு.

ஐன்ஸ்டைனின் பொதுச் சார்பியல் தத்தவம் கொஞ்சம் தலை சுற்றும். விண்வெளiயே வளைந்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? 1915ல் அவர் அதை நம்ப வைத்ததுமில்லாமல் 1919ல் ஒரு சூரிய கிரகணத்தின் போது அது நிரூபிக்கவும்பட்டது.

கிராவிடேஷன் என்னும் ஈர்ப்பு விசையே விண்வெளiயின் தன்மை. அதிகக் கனமுள்ள நட்சத்திரங்களுக்கு அருகில் அந்த விசை அதிகமிருந்தால், அது ஒளiக்கதிரை வளைத்து உள்ளே இழுத்துவிடும். கரும் பள்ளங்கள் உருவாகும். இதெல்லாம் எந்த வகையிலும் ரீல் அல்ல.

ஐன்ஸ்டைனின் ஜெனரல் தியரி சிந்தனைகளiன் விளைவாக. சென்ற நூற்றாண்டில் ஐன்ஸ்டைனுக்குப் பின் வந்த விஞ்ஞானிகள். பலமுறை பரிசோதித்துப் பார்த்து நிரூபித்த உண்மைகள். இவை காஸ்மாலஜி என்னும் புதிய இயலுக்கு வித்திட்டது. பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அதுவரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளiந்திருக்கிறாரா என்று தேட முடிந்தது(இன்று வரை அகப்படவில்லை.

நன்றி:- சுஜாதா மற்றும் ஆனந்த விகடன்

இதைப்போட்டு ஒரு பெரிய களத்தினையே உருவாக்கித்தந்திருக்கிரார்

  • தொடங்கியவர்

அல்பர்ட் ஐன்ஸ்டீன் ( Albert Einstein ) (மார்ச் 14- 1879 - ஏப்ரல் 18, 1955)

குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை ( Relativity theory) முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை (quantum mechanics), புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

ஒளி மின் விளைவைக் ( Photo electric effect ) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், "கோட்பாட்டு இயற்பியலில் ( Theoretical physics ) அவர் செய்த சேவை"க்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட Time ( இதழ் ), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

வாழ்க்கைக் குறிப்பு

இளமை, கல்லூரி

Time ( இதழ் ) ஐன்ஸ்டீன் ஜெர்மனியில், வுர்ட்டெம்பர்க் இலுள்ள உல்ம் என்னுமிடத்தில், 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார், ஹேர்மன் ஐன்ஸ்டீன், பிற்காலத்தில் ஒரு மின்வேதியியல் சார்ந்த தொழில் நிலையமொன்றை நடத்திவந்தார். தாயார் போலின் கோச். இவர் ஒரு கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அத்துடன் தாயாரின் வற்புறுத்தல் காரணமாக இளமையில் வயலினும் கற்றுவந்தார்.

இவர் ஐந்து வயதாக இருந்தபோது, இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுதுபோக்காகச் செய்துவந்தார். எனினும், சிறுவனாக இருந்தபோது இவருக்கு மிக மெதுவாகவே கற்கமுடிந்தது எனச் சிலர் கூறுகிறார்கள். இவர் தனது 12 ஆவது வயதிலேயே கணிதம் படிக்க ஆரம்பித்தார். இவருடைய உறவினரிருவர் அறிவியல், கணிதம் தொடர்பான புத்தகங்களையும், ஆலோசனைகளையும் கொடுத்து, அவரை ஊக்குவித்தார்களாம்.

இவரது தந்தையாருடைய தொழிலில் நட்டம் ஏற்பட்டதனால், 1894 ல், அவரது குடும்பம் மியூனிச்சிலிருந்து, இத்தாலியிலுள்ள மிலான் நகரையடுத்துள்ள பேவியா என்னுமிடத்துக்கு, இடம் பெயர்ந்தது. ஆனால் அல்பர்ட், மியூனிச்சிலேயே பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காகத் தங்கியிருந்தார். பாடசாலையில் ஒரு தவணையை முடித்துக்கொண்டு குடும்பத்துடன் இணைந்துகொள்ளப் பேவியா சென்றார். பாடசாலைப் படிப்பை முடிப்பதற்காக ஐன்ஸ்டீன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார். 1896ல் பாடசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (Eidgenössische Technische Hochschule) சேர்ந்தார். இந்தச் சமயத்தில் அவர் தனது ஜெர்மனி நாட்டு குடியுரிமையை விட்டு, நாடற்றவரானார். 1898ல் மிலேவா மாரிக் என்னும் உடன்கற்றுவந்த செர்பிய பெண்ணொருவரைக் கண்டு காதல் கொண்டார்.

1900 ல், சுவிஸ் கூட்டமைப்புப் பல்தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தல் டிப்ளோமாவைப் பெற்றுக்கொண்டார். 1901 ல், இவர் சுவிற்சர்லாந்தின் குடியுரிமையைப் பெற்றார். இவருக்கு, மிலேவாவை விவாகம் செய்துகொள்ளாமலே, அவர்மூலம், லிசேர்ள் என்னும் ஒரு மகள் 1902ல் பிறந்தார்.

வேலையும், முனைவர் பட்டமும் 1902 படிப்பு முடிந்ததும் இவருக்கு கற்பித்தல் வேலையெதுவும் கிடைக்கவில்லை. இவருடன் படித்தவரொருவரின் தந்தையார் மூலம், 1902 ல், சுவிஸ் காப்புரிமை ( patent ) அலுவலகத்தில், தொழில்நுட்ப உதவிப் பரிசோதகராக வேலை கிடைத்தது. அங்கே விளங்கிக் கொள்வதற்குப் இயற்பியல் அறிவு தேவைப்பட்ட, கருவிகளுக்கான patent விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதே அவரது வேலை.

பிரௌனியன் இயக்கம்

[1905] இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையான திரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக் கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம் தொடர்பான ஆராய்ச்சியை விபரித்தது.அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்࠮? திரவ இயக்கவியலினைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம் கொடுக்கப்படாத இப் பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கான அனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரை நிறுவியது.

அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமான புள்ளிவிபரப்பொறிமுறையின࠯?யும்(statistical mechanics) இது தெளிவுபடுத்தியது. இக்கட்டுரை வெளிவரமுன்பு அணுக்கள் என்பது ஒரு பயன்பாடான கோட்பாடாக அங்கீகரிக்கபட்டிருந்தால࠯?ம் கூட, அணுக்களின் இருக்கை தொடர்பாக பெளதீகவியலாளர்களுக்கும் இரசாயனவியலாளர்களுக்குமி࠮?ையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின் புள்ளிவிபர ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குகாட்டியினூடாக நோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப் பரிசோதனையாளர்களுக்குக் வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையுடைய ஒரு முக்கியஸ்தரான வில்கெல்ம் ஒஸ்ற்வால்ட் (Wilhelm Ostwald) என்பவர், ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம் காரணமாக, தான் அணு தொடர்பாக நம்பத்தலைப்பட்டிருந்தார࠯? எனப் பின்னாளில் ஆர்ணல்ட் ஸோமர்பெல்ட் (Arnold Sommerfeld) என்பவரிடம் கூறியிருந்தார்.

ஒளி மின் விளைவு

[அணுக்கள்] ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கில்" ("On a Heuristic Viewpoint Concerning the Production and Transformation of Light") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டு (Light quanta) (இப்போது போட்டோன் [Photon] என அழைக்கப்படுகிறது) என்ற கருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்ற விடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விபரித்தது. இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடைய (தொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோ காலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மக்ஸ் பிளாங் (Max Planck)கினால் முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்ப்பு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனிச் சக்திப் பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது. ஓளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் கிளாக் மக்ஸ்வெல்லின்(James Clerk Maxwell) மின் காந்த நடத்தைக்கான சமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையுடன் முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும் முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்ற கருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கான ஐன்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்பு விதந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள் அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும் எண்ணத் தலைப்பட்டனர். சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத்(quantum mechanics) தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்ட கருதுகோளான ஒளியின் அலைத்-துணிக்கை இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துணிக்கைத்தன்மை ஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச் சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறை விருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையான தெளிவு பெறப்பட்டது.

விசேட தொடர்பியல்

ஐன்ஸ்டீனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியலில்" ("On the Electrodynamics of Moving Bodies") என்பது 1905 ஜூன் 30 இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றி கடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்குபற்றினாரா எனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவு மற்றும் சக்தி தொடர்பான கொள்கையான விசேட தொடர்புக் கொள்கையினை அறிமுகப்படுத்தியதுடன் மின்காந்தவியலுடன்(electromagnetism) பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது. ஏனைய சில தெரிந்த அலைகளைப் போன்றல்லாது ஒளி அலை பயணம் செய்வதற்கு நீர், வளி போன்ற ஒரு ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டிய மைக்கெல்சன்-மோலே பரிசோதனையினால்(Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை விசேட தொடர்பியல் தீர்த்து வைத்தது.

இதன் மூலம் ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்ல என்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின்(Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது. இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாய࠮?ன் மைக்கல்சன்-மோலே முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல் ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட்(George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமான சமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல் போர்த்துக்கேயப் பெளதிகவியலாளரான ஹென்றிக் லோரன்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடய ஊகத்தினைக் கணித வடிவில் கூறின. அனாலும் இக் கேத்திரகணித விசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார்.

http://29d5136016c968ec2aadba29aa7 3c937.ta.ogarnij.pl/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.