Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரர்களை நினைவு கூர்வதை எவராலும் தடுக்க முடியாது – விக்கி

Featured Replies

CV-720x450.png

 

 

தமிழ்  மக்களின்  உரிமைக்களுக்காக  உயிர்நீத்த  எமது  விடுதலைவீரர்களை  நினைவுகூரும் எமதுமக்களின்  உணர்வினை  எந்த  எதிர்ப்பினாலும்  தகர்த்துவிட முடியாது என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் தொடர்பில்  சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“யுத்தத்தில்  உயிர்நீத்த  தமது  பிள்ளைகளை  தாய்,  தந்தையர்  நினைவுகூர்ந்து  அழுவதையோ, தமது  உடன் பிறப்புக்களை  சகோதரங்கள்  நினைவுகூர்ந்து  தேற்றிக் கொள்வதையோ கூட சகித்துக்கொள்ள  முடியாத  தெற்கின் மனோநிலையை  சர்வதேச  சமூகம்  புரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ்  மக்களின்  உரிமைக்களுக்காக  உயிர்நீத்த  எமது  விடுதலை  வீரர்களை  நினைவுகூரும் எமதுமக்களின்  உணர்வினை  எந்த  எதிர்ப்பினாலும்  தகர்த்து  விட  முடியாதென நான் உறுதியாக  நம்புகின்றேன்.

அவ்வாறு எதிர்ப்பவர்கள்,  எம்  மக்கள்  மனதில்  மேலும்  மேலும் உறுதியையும் சுதந்திர தாகத்தினையும் மேலெழுச் செய்கின்றார்கள்.

உயிர்நீத்த விடுதலை வீரர்களை நினைவு கூருவது அவரவர்  சார்ந்த  சமூகங்களின்  கடமையாகும். இன்றைய மனித  நாகரிகத்தின்  முக்கியமான  ஒரு  பண்பாக  இது  காணப்படுகிறது.

இதேவேளை முரண்பாடுகளுக்கான தீர்வு கோட்பாடுகளிலும் யுத்தங்களில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் நினைவுகளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், அமைதியான  வழியில்  உரிய  வழிமுறைகளை  பின்பற்றி  எமதுமக்கள்  நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்க வேண்டும்” என சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/தெற்கின்-மனோநிலையை-சர்வத/

  • தொடங்கியவர்

எழுச்சிக்கோலம் பூண்டுள்ளது தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம்!

மாவீரர் நாளினை முன்னிட்டு முல்லைத்தீவு தேவிபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளிக்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு பணிக்குழு அழைப்பு விடுக்கிறது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109824

  • தொடங்கியவர்

காவிய நாயகர்களை கைகூப்பித் தொழுவதற்கு தயாராகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்!

தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு செயலாளர் குமாரசிங்கம் அறிவித்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109826

  • தொடங்கியவர்

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்புக்கான ஏற்பாடுகள் நிறைவு

 

11-14-720x450.jpg

நடைபெறவுள்ள மாவீரர் நினைவு தின அனுஷ்டிப்பை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 மாவீர் துயிலும் இல்லங்கள் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

வாகரை கண்டலடி, தரவை, மாவடிமுன்மாரி ஆகிய 3 துயிலும் இல்லங்களில் நினைவு தின அனுஷடிப்புக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து துயிலுமில்லங்களில் சிரமதானம் மேற்கொண்டு அங்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாண்டியடி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் விசேட அதிரடிப்படை முகாம் உள்ளமையால் அங்கு நினைவேந்தல் செய்யமுடியாத நிலை காணப்படுவதால் தாண்டியடி சந்தியில் நினைவேந்தல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு பல்கலைக்கழகம், விபுலானந்த அழகியல் கற்கை நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

22-14.jpg

33-10.jpg

http://athavannews.com/மட்டக்களப்பில்-மாவீரர்-ந/

Edited by போல்

  • தொடங்கியவர்

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு மாநகர முதல்வரால் அழைப்பு!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான மாநகர முதல்வரால் பொது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமது இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் “மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு” கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இம்முறையும் யாழ்ப்பாணம், பாசையூர் கடற்கறை முன்றலில் நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமது இன்னுயிர்களை நாம் கனவு கண்ட தமிழ் தேசியத்திற்காக ஆகுதியாக்கிய எம் வீரர்களை நினைவுகூரும் நிகழ்வு கார்த்திகை 27 ஆம் நாள் நாளை (2018.11.27) 6.00 மணியளவில் பாசையூர் கடற்கரை முன்றலில் வழமை போன்று இடம்பெறும்.

எனவே மாவீரர்களை எம் தேசத்திற்களித்த மாவீரர் குடும்பங்கள் மற்றும் மாவீரர்களது உறவுகளையும், எமது மண்ணுக்காக போராடிய வீர மறவர்களையும் குறித்த நிகழ்வில் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசனங்களில் மாலை 5.00 மணிக்கு வருகை தந்து அமர்ந்து கொண்டு நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறும், இவர்களுடன் தமிழ் தேசியத்தின் பற்றாளர்களையும், தமிழ் பேசும் உறவுகளையும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

எமது தியாகப் போராட்டத்தில் எம் விடுதலைக்காக தமது உயிரகளை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வில் ஒவ்வொரு தமிழ் பேசும் உணர்வாளனும் தவறாது கலந்து கொண்டு நினைவு கூர்வதுடன், மாவீரர்களை எமக்களித்த குடும்பத்தின் நல் வாழ்வுக்காகவும் பிரார்த்திப்போமாக. என யாழ் மாநகர முதல்வரின் அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/109831

  • தொடங்கியவர்

நினைவேந்தலுக்காய் எழுச்சி பூண்டுள்ளது இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்!

 

தேசிய மாவீரர் நினைவேந்தலை அனுட்டிக்கும் பொருட்டு இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது.

அரசியல் கட்சி வேறுபாடுகளை கடந்த அனைத்து தரப்பினர்களும் இணைந்து மாவீரர் நாளுக்குரிய பணிகளை முன்னெடுத்து வருவதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

அத்தோடு எவ்வித தடைகளும் நெருக்கடிகளும் இன்றி மாவீரர் நாள் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109829

  • தொடங்கியவர்

30-க்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் சூழ்ந்த நிலையிலும் பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்ல பணிகள் நிறைவு!

மாவீரர் நாளினை முன்னிட்டு மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மற்றும் அலங்கார வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகின்றார்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் துயிலுமில்லம் உணர்வுபூர்வமாக காட்சியளிக்கிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (27) இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுக்கிறது.

இந்நிலையில் குறித்த மாவீரர் துயிலுமில்ல பணிகளின் போது தியுலுமில்லத்தை அண்மித்த பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ஸ்ரீலங்கா இராணுவப்புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109851

  • தொடங்கியவர்

தீவகத்தில் மாவீரர் நினைவேந்தல்!!

தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் கல்லறைகளிலும், மாவீரர்களின் சிதைவடைந்த நினைவிட சிதறல்களிலும் (நினைவிடத்திலும்) மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

received_359140351323417.jpegreceived_275365503049618.jpegreceived_209465636641291.jpegreceived_1582665848545838.jpegreceived_1143927365767429.jpeg

https://newuthayan.com/story/14/தீவகத்தில்-மாவீரர்-நினைவேந்தல்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.