Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்!

Featured Replies

625.200.560.350.160.300.053.800.300.160.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் (Jorn Rohde) மன்னாரிற்கு வருகை தந்து மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு, அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடினார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள மனித புதை குழி அகழ்வு பணியானது கடந்த 12 ஆம் திகதி இடை நிறுத்தப்பட்டது.

பலத்த மழை காரணமாகவும், அரச பணி காரணமாகவும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ வெளிநாடு சென்றதாலும் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் 105 ஆவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை (27) மீண்டும் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது அகழ்வு பணிகளை நேரடியாக பார்வையிடுவதற்கு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட்(Jorn Rohde) மன்னாரிற்கு வருகை தந்து மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு, குறித்த அகழ்வு பணி தொடர்பாக உரிய விளக்கத்தையும், அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் குறித்த அகழ்வு பணிகளின் போது கண்டு பிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவற்றில் 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குழு ஒன்றும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/109890

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் அவதானிக்க இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோட் (Jorn Rohde) மன்னாரிற்கு வருகை தந்து மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரடியாக அவதானித்ததோடு, அகழ்வு பணிகள் தொடர்பில் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸவுடன் கலந்துடையாடினார்.

அரசமைப்பதில் வெளிநாடுகள் ஐக்கிய நாடுகள் சபை என்று போட்டி போட்டு அறிக்கை விடுவதும் அரசை வெருட்டுவதிலும் உள்ள அக்கறை இந்த மனிதப் புதைகுழியில் மூச்சையே காணோம்.

அரசுக்கு எடுபிடி செய்து கொண்டும் நீதிமன்றமாக அலையும் எமது தமிழ் தலைவர்களும் இந்த மனித புதைகுழியைப் பற்றி வெளிநாடுகளுக்கு எதுவித அழுத்தமும் கொடுக்காதது மிகவும் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.