Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது உயிருக்காக ஜனாதிபதி நாட்டை பணயம் வைத்துள்ளார் – அப்துர் ரஹ்மான் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20181203-WA0038-720x450.jpg

தனது உயிருக்காக ஜனாதிபதி நாட்டை பணயம் வைத்துள்ளார் – அப்துர் ரஹ்மான் சாடல்

நாட்டைப் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்த, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது உயிருக்கு அச்சுறுத்தல் என காரணம் கூறி முழு நாட்டையும் பணயம் வைத்திருப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சாடியுள்ளார்.

அத்தோடு நாட்டில் நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி நிலைக்கு பொதுத்தேர்தல் தீர்வாக முடியாது என தெரிவித்த அவர் அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து ஜனாதிபதி நடந்தால் மாத்திரமே இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டில் தற்போது நிலவும் தீவிர அரசியல் நெருக்கடி குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுவரை இடம்பெறாத அரசியல் நெருக்கடியினை கடந்த ஒக்டோபர் 26ம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.

நாட்டின் சட்ட ஒழுங்கினை சீர்குழைத்து பொதுச்சொத்துக்களை கொள்ளையடித்து, இனவாத சக்திகளை வளர்த்து, மக்களின்  உரிமைகளை நசுக்கிய முன்னாள் ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காகவே  கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வாக்களித்திருந்தனர்.

ஆனால் இன்று அதே அராஜக முன்னாள் ஆட்சியாளர்களின் கைகளில் மீண்டும் ஆட்சியை கையளித்திருப்பதானது, அவரை நம்பி வாக்களித்த 62 லட்சம் மக்களுக்கும் அவர் துரோகம் செய்ததாகவே கருதப்படுகிறது.

நாட்டின் பிரதமரை நியமிப்பதாயினும் நீக்குவதாயினும், அதற்கான தெளிவான சட்டவரைபுகள் எமது அரசியல் யாப்பில் காணப்படுகின்றன.

ஒன்றில் பிரதமர் தானாக முன்வந்து இராஜினாமா செய்வது அல்லது நாடாளுமன்றத்தில் அவரது அரசாங்கம் முறையாக  பதவி கவிழ்க்கப்படுதல் வேண்டும்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டு அது  தோற்கடிக்கப்பட்டிருந்த  நிலையிலேயே கடந்த  26ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

இது நாட்டின் அரசியல் யாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் முற்றிலும் முரணான ஒன்றாகும்.

இந்த சட்டவிரோத அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக பெரும் பிரயத்தனங்களை மஹிந்த-மைத்திரி அணியினர் மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை பல நூறு மில்லியன்களுக்கு  பேரம்பேசி பெரும்பான்மையை  பெற்றுக்கொள்ள முயற்சித்தனர். அதுவும் தோற்றுப்போன நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

இதன் மூலம் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கிணங்க உருவாக்கப்பட்ட   19வது திருத்தச்சட்டத்தினை அவர்  மீறியுள்ளார்.

இதற்கான இடைக்கால தடை உத்தரவினை உச்ச நீதிமன்றம் வழங்கியதன் பலனாக நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது.

ஆரம்ப நாட்களில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின்போது, சபாநாயகர் உட்பட பொலிஸ் துறையினரையும் அவமதிக்கும் வகையிலும் முழு உலக நாடுகளும் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இவர்களுடைய  செயற்பாடுகள் ஜனாதிபதியின் தலைமையில் அமைந்திருந்தன.

நாடாளுமன்ற   பெரும்பான்மையினை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் நிரூபிக்க முடியும் என ஜனாதிபதி கூறி வந்த நிலையில், இதுவரை 5 தடவைகள் நாடாளுமன்ற கூடிய போதிலும், எதிரணியினரால் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு மஹிந்த அணியினர் தோற்கடிப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐ.தே.மு. தரப்பினருக்கு அதிகப்பெரும்பான்மை இருப்பதனை தமிழ் தேசிய கூட்டமைபினரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை தாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்பதனை அறிந்து கொண்ட மைத்திரி- மஹிந்த தரப்பினர் நாட்டின் தற்போதைய இறுக்கமான அரசியல் நிலைக்கு பொதுத்தேர்தல் ஒன்றிற்கு செல்வதே  தீர்வு என தெரிவித்துள்ளனர்.

எனினும் அரசியல் சாசனத்தையும் நாட்டின் சட்டத்தையும் மதித்து ஜனாதிபதி நடந்தால் மாத்திரமே இதற்கான நிரந்தர தீர்வு எட்டப்படும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்   சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/தனது-உயிருக்காக-ஜனாதிபதி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.