Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமி றிட்ச்சும் ஈழப்போர் நான்கும்

Featured Replies

சிங்களத்திற்கு சர்வதேசம் முண்டு கொடுத்துக் கொண்டு நிற்கிறது. சிங்களத்தின் சுடுவலு பிரமிப்பூட்டும் வகையில் தொடர்கிறது. எமது கடலும் கடல்சார் போக்குவரத்தும் சர்வதேசத்தின் கழுகுப் பார்வையில் சிக்கிக் கிடக்கின்றது. அதியுச்ச தொழில் நுட்பங்கள் எமது தாயகப் பூமியின் மூலை முடக்கெங்கும் ஆள்கூறுகளைத் துல்லியமாக பெற்றுக் கொள்ள சிங்களத்திற்கு உதவுகின்றன. எமது தரப்பிலும் அதிகம் சத்தத்தைக் காணோம். எமது இழப்புக்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. பூதாகரமாய்த் தோன்றி நின்றாடும் எமது வல்லமை பொருந்திய எதிரியை எம்மால் வெல்ல முடியுமா? என்ற ஒரு வகைத் தளர்வு நம்மவர் மத்தியில் சற்றேனும் காணப்படுகின்றது. இந்நிலையில் வரலாற்றில் நான் அறிந்து கொண்ட ஒரு தகவலை யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு.

அது 1917ம் ஆண்டு. முதலாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலம். பிரஞ்சு தேசத்தின் கிழக்குக் கரையோரமான, புவியியல் ரீதியில் தரைமட்டத்தில் இருந்து உயர்வான, விமி றிட்ச் பிரதேசம் ஜேர்மனியப் படைகளின் வசப்படுகின்றது. இப்பிரதேசத்திற்கு, அது கொண்டிருந்த உயர்வான புவியியல் அமைவிடம் ஒரு சிறப்பு என்றால் அது கொண்டிருந்த நிலக்கரி வளம் இன்னுமொரு சிறப்பு. புவியியல் ரீதியில் உயர்வான இந்த நிலையில் இருந்து ஜேர்மானியப் படைகளால் பல மைல் தூரத்திற்கு தமது எதிரியின் நடமாட்டத்தைத் துல்லியமாக அவதானிக்க முடிந்தது. ஜேர்மானியப் படைகள் தமது பீரங்கிகளை இங்கு நிறுத்தி வைத்து எதிரி நடமாட்டம் சற்றுத் தெரிந்தாலும் அவர்களை நோக்கி தமது சுடுகலன்களை முழங்கித் தள்ளினார்கள்.

மறு முனையில், பிரான்சின் மேற்கிலிருந்து அலைட் படையணிகள் (பிரித்தானியா, பிரான்ஸ், கனடா முதலியன) கிழக்குப் பிரான்சின் ஜேர்மானிய விமி றிட்ச் நிலைகளைத் தகர்ப்பததற்கு முனைந்து கொண்டிருந்தன. எனினும் புவியியல் ரீதியாக இப்போர்முனையைப் பார்வையிட்ட பலரதும் அபிப்பிராயத்தில், அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த சுடுவலுவின் முன்நிலையில், இப்போர்முனையானது அலைட் படைகளிற்கு நடைமுறைச் சாத்தியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. அதாவது, ஒரு திறந்த வெளியில், ஒரு எல்லைக் கோட்டிற்கு ஒரு முனையில் ஒரு படையும் அதன் மறுமுனையில் எதிரிப்படைகளும் நேரிற்கு நேர் , கிட்டத்தட்ட ஒரு 19ம் நூற்றாண்டு போர்முறை போன்று, அமைந்திருந்த இந்த நிலையானது, பீரங்கிகளின் முன்னிலையில் தற்கொலைக்கு ஒப்பானாதாகக் காணப்பட்டது.

ஜேர்மானிய நிலைகளை அடையும் முயற்சியில் ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் அலைட் படை வீரர்கள் மாண்டு போயினர். திறந்த வெளியில் தம்மை விடத் தாள்வான பிரதேசத்தில் நின்ற அலைட் படைகளை ஜேர்மானியர்கள் தமது பீரங்கிகள் கொண்டு பிளந்து தள்ளிக்கொண்டிருந்தனர். அலைட் படைகளைச் சேர்ந்த எத்தனையோ வீரர்கள், அதுவும் போராவேசத்துடன் களம் சென்ற வீரர்கள், நிலமையின் கனதியால் ஏற்பட்ட மன உழைச்சலினால் (Shell Shock) தமது படையணிகளை விட்டு ஓடத் தொடங்கினார்கள். அவ்வாறு ஓடிய பலர் பிடிக்கப்பட்டு மீண்டும் படையணிகளில் இணைக்கப்பட்டதோடு மீண்டும் அவர்கள் ஓடினால் சுடப்படுவார்கள் என்று எச்சரிக்கவும் பட்டார்கள். அப்படி இருந்தும் பலர் திரும்பத்திரும்பத் தப்பியோடி இறுதியில் தம் நாட்டின் படைகளாலேயே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்து போனார்கள்.

இந்நிலையில் அதுவரை வேறுவேறு படையணிகளில் இணைந்து செயலாற்றிவந்த ஆறு கனேடிய படையணிகளையும் ஒன்றிணைத்து, ஒரு இலட்சம் வீரர்கள் கொண்ட, ஒரு தனிக் கனேடிய படையணி உருவாக்கப் படுகின்றது. பிரித்தானியப் படைகளும் பிரஞ்சுப் படைகளும் செய்யத் தவறியதைச் செய்து முடிக்குமாறு, சற்றுக் காலம் முன்னர் வரை பிரித்தானியாவின் காலனியாகக் கிடந்த, அனுபவம் குறைந்த, கனேடியப் படைகளிற்கு பொறுப்புக் கொடுக்கப்படுகின்றது. மேலும் கனடா என்ற தேச உணர்வு கூட இந்தக் கனேடியர்களிற்கு அப்போது மத்திமமாகவே இருந்தது. அவர்களது மனநிலையில் தாங்கள் பிரித்தானிய முடிக்குக் கீழ்பட்டவர்கள் போன்ற எண்ணமே பரவலாக அப்போது இருந்தது.

கனேடியப் படைகளிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டு சொற்ப காலத்திற்கு களத்தில் எந்தப் பெரிய பரபரப்பும் ஏற்படவில்லை. கனேடியப் படைகளின் தொழிற்பாடு ஜேர்மானியப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டுப் பரபரப்பின்றி வேகம் பெற்றது. அது வரை இருந்து வந்த பிரித்தானியாவின் காலம்காலமான போர் உத்திகள் மற்றும் வழக்கங்கள் கனேடியர்களால் தலைகீழாக மாற்றப் படுகின்றன. தளபதிகள் மட்டுமே முழுவதுமான போர் உத்திகளை அறிந்து காலாட்படைகள் தமது நேரடி பொறுப்புக்களை மட்டும் அறிந்திருந்த பிரித்தானிய வழமை மாற்றப்பட்டு அனைத்துக் கனேடிய வீரர்களிற்கும் முழு வியூகமும் திட்டமும் விளக்கப்படுகின்றது. தளபதிகள் முதல் கடைசிப் படைவீரன் வரை ஒரு இலட்சியத்தோடு முதன் முதலாக ஒரு தேசமாக, கனேடியர்களாக, ஒன்றிணைந்து உழைக்கிறார்கள். அங்கு தான், அந்தக் களத்தில் தான் உண்மையில் கனடா பிறந்தது என பல வீரர்கள் தமது குறிப்புக்களில் உணர்ச்சி பொங்க குறித்துள்ளார்கள். களத்தின் அமைதி ஜேர்மானியரிற்கு ஆச்சரியமாக இருந்திருந்த போதிலும், அலைட் படைகள் பெற்றுக் கொண்ட அபரிமித இழப்பே அமைதிக்குக் காரணம் என நினைத்து ஜேர்மானியார்கள் விமி றிட்ச் பிரதேச நிலக்கரியைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.

கனேடியர்கள் பல மைல்கள் தூரத்திற்கு நிலக்கீழ் சுரங்கப் பாதைகளை அமைத்தார்கள். இந்த நிலக்கீழ் பாதைகள் வெறும் கிடங்குகளாக மட்டும் இல்லாது இவற்றின் ஊடு பல ஆயிரம் தொன் இராணுவத் தளபாடங்களும் ஆயுதங்களும் ஜேர்மனிய இலக்குகளை நோக்கி, ஜேர்மானியரின் கொல்லைக்குள்ளேயே, நகர்த்தப்படக் கூடியதாக அமைத்தார்கள். மின் சார இணைப்பும் குடி நீர் இணைப்பும் கூட வியத்தகு பொறியியல் திறத்தோடு இந்த நிலக்கீழ் கட்டமைப்பிற்குச் சேர்த்தார்கள். மொத்தத்தில் ஜேர்மானியர் அறியாதவகையில் அவர்களை நோக்கிக் கனேடியர்கள் விவேகத்துடன் முன்னேறினார்கள்.

ஏப்பிரல் 9ம் நாள் 1917ம் ஆண்டு தான் தாக்குதல் நாள் எனத் தீர்மானிக்கப்படுகிறது. அன்றைய நாள் பிறந்து மிகச் சொற்ப நேரத்தில் ஜேர்மன் சுடு வலுவின் 85 வீதத்திற்கு மேற்பட்டன கனேடிய வியூகத்தில்

அழிந்து போகின்றன. தம்மைத் தாக்கியது என்ன என்று ஜேர்மானியர்கள் அறியுமுன்பே கனேடியரின் கைவசம் விமி றிட்ச் விழுகின்றது. பெரிய சக்திகள் செய்து முடிக்கத் தவறியதைச் சின்னப் பொடியங்கள் செய்து முடித்த செய்தி உலகெங்கும் கட்புருவங்களை உயரச் செய்தது.

90 வருடங்களிற்கு முன்னர் நிகழ்ந்த இந்த போரியல் அபூர்வத்தின் நினைவு நிகழ்ச்சிகள் விமி றிட்சில் வெகு சிறப்பாக இவ்வாரம் நினைவு கூரப்பட்டுக்கொண்டிருக்கின்

Edited by Innumoruvan

நமது பழமொழியில் புத்திமான் பலமான். முயலும் சிங்கமும் எப்படி சிங்கத்தை முயல் எமாற்றியது,

தற்போது புலி எப்படி சிங்க(ள)த்தை எமாற்றி தாக்குதல் செய்கிறது(வான் படை தாக்குதல்)

விமி றிட்ச்சு தாக்குதல் நல்ல உதாரணம் தான் .... இதைப்போன்று பல போர் வரலாறுகள் மன்னர் காலத்தில் இருந்து தற்போது வரை நடந்து கொண்டு இருக்கிறது....

இழப்புகளிலிருந்து அடுத்த தாக்குதல் இழப்பில் இல்லாமல் வெற்றிபெறுவது தான் முக்கியம்

அதற்கு திட்டமிடல், சாதக பாதகங்கள் கணக்கில் எடுத்தல், எதிரியின் பலம் பலயீனம் கணக்கெடுத்தல் நம் பக்கமும் அப்படித்தான் பலம் பலயீனம் முக்கியம்.....

கடற்போரில் எதிரியின் வீச்செல்லை கூடியிருக்கலாம்..... தனது கடந்த கால தோல்விகளை வைத்து அவன்

வெளினாடுகளில் அழுது எப்படியோ வாங்கியிருக்கலாம்... ஆனால் திடீர் என புலிகளின் கைக்கும் மாறலாம்..

போரில் தன்னம்பிக்கை மிக அவசியம்....இஸ்ரெல் நாட்டின் வரலாறு தாக்குதல் வெளி நாட்டில் எப்படி திட்டங்கள் போட்டு நாட்டை உருவாக்கினார்கள் என்னு வரலாறு தொடராக யாரும் யாழ் இணையத்தில் எழுதினால் எமது மக்களுக்கு தன்னம்பிக்கையை தரக்கூடியதாக இருக்கும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.