Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிங்கள புத்தாண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்து புத்தாண்;டு என்று எந்த ஒரு நாளில் உலகில் எந்த ஒரு பகுதியிலும், கொண்டாடப்படுவதில்லை. ஏனெனில், இந்து சமயத்தின் ஆரம்பம் எப்பொழுது என்று எவருக்குமே தெரியாது. ஆனால் சரித்திரமும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கிறிஸ்த்துவுக்கு முன் 3000 ஆண்டளவில் திராவிடர்கள் இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்ததாகவும், அவர்கள் சிவலிங்கத்தையும் - அவரின் பாகமான சக்தியையும், வணங்கியுள்ளதாக சான்று பகர்கின்றனர்.

லிங்கவழிபாடு கிறிஸ்த்துவுக்கு முன் 1500ம் ஆண்டளவில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கு உரிய வணக்கமாக இருக்கவில்லை. அரச மரமும் கூட இந்துநதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த திராவிடர்களுக்கு புனிதமாய் இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் அரசமரம் புனிதமாய் இருந்தது. அவர்களும், திராவிடர்களின் வழித்தோன்றல் என்பது நிரூபணமாகிறது. பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்று இந்து சமயம் ஒரு சமயமல்ல: அது ஒரு தத்துவத் தொடராகும்.

90 கோடி இந்துக்கள் வாழும் இந்தியாவில் வௌ;வேறு வகையான இனங்கள் உண்டு. ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு குணமும், வௌ;வேறு நாட்களில் அவர்களது புத்தாண்டு தினமாக அனுஸ்டிக்கிறது. ஆனால் தமிழ் மக்கள் சித்திரை மாதம் 14ம் திகதியையே புத்தாண்டு தினமாக அனுஸ்டிக்கிறார்கள். ஆனால் சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கூறுகின்றனர். சில தமிழ் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி வள்ளுவர் பெருந்தகை பிறந்த தினமே தமிழ்ப் புத்தாண்டாக அனுஷ்டிக்க வேண்டுமென்று கூறுகின்றனர். எது எப்படியிருந்தாலும், தமிழர்கள் காலம் காலமாக சித்திரை 14ஐயே புத்தாண்டு தினமாகக் கொண்டாடுகின்றனர்.

ஆனால், வங்காளர், பிகாரிஸ், மராத்தியர், குஜராத்தியர், தெலுங்கர், சீக்கியர், கர்நாடகர், கேரளாலயர் ஆகியோர் வௌ;வேறு தினங்களை தமது புத்தாண்டு தினமாக அனுஸ்டிக்கின்றனர்.

சரித்திர காலத்துக்கு முன்பு தென் இந்தியாவிலும்;, இலங்கையிலும், ஒரு பொதுவான ஒரே பண்பாடு கொண்டுள்ள. மக்கள் குடி கொண்டுள்ளனர். இதை சுஜாதா குணத்திலக்க வலியுறுத்திக் கூறியுள்ளார். விஜயன் இலங்கை நிலத்தை வந்து அடைய முன் காலந்தொட்டே இலங்கை இந்துக்களின் வசிப்பிடமாக இருந்தது. இவர்கள் தென் இந்தியாவிலிருந்து குடியேறினர் என்று சேர் வில்லியம் ஜோன்ஸ் கூறுகிறார். வட இலங்கை விஜயன் வருகைக்கு முன்பே ஒரு செழிப்பான நாடாக இருந்தது என்று டாக்டர்.போல்.இ.பீரிஸ் கூறியுள்ளார். (னுச.Pழழட நு. Pநசளை)

இலங்கையில் மஹாவம்ச பௌத்த காலத்திற்கு முன் கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேச்வரம் ஆகிய இந்து ஆலயங்கள் இருந்தன. இந்து ஆலயமான கோணேஸ்வரம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என டாக்டர் ஆர்.எல்.புறகியர் கூறுகிறார். (Pச சுடு டீசழவாநைச)

கிறிஸ்துவுக்கு முன் 246 இல் மகிந்த பௌத்தத்தை இலங்கைக்குக் கொண்டு வந்தார். அப்போது பௌத்த தர்மம் பாளியிலும், சமஸ்;கிருதத்திலும், இருந்தது. இப்பாஷைகளோடு சேர்நது தமிழும் கலந்து சிங்களப் பாஷை உருவாகியது. சிங்களச் சொல் அகராதியில் (ஏழஉயடரடயசல) 4000 தமிழ் சொற்கள் இருக்கின்றன. சிங்கள வர்க்கமும், விஜயனைப் பற்றிய கதையும் மகாவம்சத்துக்கு முன்பு கி.பி 600ம் ஆண்டில் தெரியாது. எண்ணூறு வருடங்களின் பின்பு பௌத்தம் இலங்கைக்கு அறிமுகப்படுத்திய பின்பு மஹாநாம என்னும் பௌத்த பிக்கு இலங்கையில் தமிழ் பேசும், சிங்களம் பேசும் இரு இனங்கள் இருப்பதை அவதானித்து சிங்களவர் விஜயனினதும், அவரது 700 பின்பற்றுபவர்களிருந்து வந்தவர்கள் என்று ஒரு கட்டுக்கதையை ஆக்கியுள்ளார்.

அதாவது ஆரியர்கள் என்றும் மேலானவர்கள் என்றும் வங்காள தேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் ஆனால், வங்காளியர் - திராவிடர் கலந்த மங்கோலியர் என்று அவருக்குத் தெரியாது. அத்தோடு பண்டைய மன்னர்கள் அவர்களுக்கு தங்கள் புத்திரிகளை மணம் முடித்துக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். என்ன முட்டாள்தனம். எந்த அரசர்களாவது தங்களின் புத்திரிகளை நாடோடியாக ஒரு நாட்டில் இருந்து துரத்தப்பட்டவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பார்களா? கிரேக்கர்கள் கூட தமிழர்களோடு வர்த்தகத் தொடர்பு வைத்திருந்தனர். சிங்களவரோடு அல்ல: சான்றாக தமிழ்ச் சொற்கள் கிரேக்க சொற்கள் தொகுப்பில் உள்ளது. (ஏழநயனரியல ):- யுசளைi (றுந) கிரேக்க பாஷையில் (ழுசலணச )வுழமயi (Pடயறஉம) வுழபயi ளயளஉhய - ளரளய

மகாவம்சம் சிங்களவர் வட இந்தியாவின் வங்காளத்திலிருந்து வந்ததாகக் கூறுகிறது. பேராசிரியர் கே.எம்.டி சில்வா வட இந்தியாவில் இருந்து வந்ததாகக் கூறுகின்றார். ஈ.எம்.சி அமுனுகம மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகக் கூறுகிறார். எப்படி வௌ;வேறு பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் ஒரே பாஷையான சிங்களத்தில் பேச முடியும். உண்மை ஒன்றுதான். ஆகவே இது முரண்பாடாக இருப்பதால் அவர்கள் அங்கு இருந்து வரவில்லை என்பதுதான் உண்மை.

இலங்கையில் பௌத்தர்கள் இந்துக் கடவுள்களை வழிபடுகிறார்கள். இந்துக் கிரியைகளைச் செய்கிறார்கள். இவைகள் எல்லாம் புத்தரால் நிராகரிக்கப்பட்டவை. மேலும் சித்திரை 14ம் திகதியையே, தங்களது புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். கதிர்காமத்தில் உள்ள முருகப் பெருமானை வழிபடுகின்றனர். ஆனால், வட இந்திய ஆசிரியர் முருகனை வழிபடுவதில்லை. ஆரியர்கள், இந்து உருவங்களுக்கு முன்னால் தேங்காய் உடைப்பதில்லை. இது தென் இந்திய இந்துக்களுடைய பழக்கம். டாக்டர் கருணாரத்ன, பேராதனை சர்வகலாசாலை பேராசிரியர் (னுச முயசரயெசயவாயெ) சிறிசேன பணிப்பின் புதைபொருள் ஆராய்ச்சி ஆகியோர் சிங்களவர்கள் வேறு தேசத்தில் இருந்து வரவில்லை.

அவர்கள் இந்த நாட்டின் சுதேசிகள். ஆகவே அவர்களுடைய பழக்க வழக்கங்களில் இருந்து அவர்கள் இலங்கை இந்துத் தமிழர்களின் சந்ததிகள். அரசன் தேவநம்பிய தீசனோடு சேர்ந்து பௌத்த சிங்களவர்கள் ஆகினர். இனவாதச் சிங்களப் பேரினவாதிகளே! சரித்திரத்தைத் திருப்புங்கள். இந்துத் தமிழர்களின் சந்ததியாகிய நீங்கள் ஏன் இனவாதம் பேசுகிறீர்கள். தமிழர்களின் உரிமையைக் கொடுப்பதற்கு ஏன் தயங்குகின்றீர்கள்.

உண்மையில் புத்தர் பிறந்த நாளோ அல்லது அவர் ஞானம் பெற்ற நாளையோ பௌத்தர்கள் தங்கள் புத்தாண்டாக அனுஸ்டிக்க வேண்டும். அதைவிட்டு இலங்கைப் பௌத்தர்கள் சித்திரைப் புத்தாண்டை தங்களது புத் தாண்டாகக் கொண்டாடுவது அவர்களும் தமிழர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.