Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்... பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பொடா’ விடுதலைக்குப்பின் மனம் திறக்கிறார் பழ.நெடுமாறன்...

‘‘புலிகளை சிறுமைப் படுத்தாதீர்கள்!’’

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பழ.நெடுமாறன் முகத்தில் விடுதலையின் சிரிப்பு!

போராட்டங்களும் தண்டனைகளும் அவருக்குப் புதிதில்லை. கனவில் சுமந்த லட்சியங்களுக்குப் பரிசாக யதார்த்தம் தந்த காயங்களுக்கு கணக்கே இல்லை. ஆனாலும், பக்குவத்தின் புன்னகையை தன்னுடனேயே வைத்திருக்கிறார்... நிதானத் தால் நம்பிக்கையை விதைக்கிறார் மனிதர். கண் களிலோ தீராமல் திமிறும் வேங்கையின் கூர்மை. பொடா வழக்கிலிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அவரைச் சந்தித்தோம்.

‘‘ ‘பொடா’ வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டிருக்கிறீர்

போற போக்கைப் பார்த்தால் கேரளாக்காரன் மனம் திறந்தாத்தான் தமிழ்நாட்டுக்காரனுக்கே வாழ்க்கை

மலையாளிகள் இன்று தமிழரின் உழைப்பை உறிஞ்சி வாழ்கிறார்கள்..... கேரளத்திற்கு அரிசி, காய்கறி, பால் மற்றும் பல அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்தே செல்கிறது.அவைகள் எடுத்துச்செல்லப்படும் பிரதான வழிகளான கோவை,குமரி மாவட்டம் களியக்காவிளை,மற்றும் போடி மெட்டு வழியாக செல்லும் சாலைகளை மூடி விட்டால் மலையாளி ரப்பர் தேயிலை மற்றும் தேங்காய்களை த்தான் உணவாக உட்கொள்ள வேண்டும்.அல்லது அத்தியவசிய பொருட்களை மாற்றுவழியாக மிகுந்த பொருட்செலவில் தான் தருவிக்க வேண்டும் .இப்படி செய்தால் கேரளம் தன்னால் வழிக்கு வரும் ஆனால் தமிழக மக்கள் இளிச்சவாயர்கள் என்பது தான் எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்லவா........... அதனால் தானே ரயில்வேயில் கூட மிகுந்த வருவாய் ஈட்டும் தமிழக பகுதிகள் கேரள பாலக்காடு கோட்டத்திலேயே இன்னும் உள்ளன.... ரயில்வே அமைச்சர் தமிழராக இருந்தும் சேலம் கோட்டம் இன்னும் பிரித்து அமைக்கப்படவில்லையே ............ கடவுளே ஏன் தமிழக மக்களை இப்படி கல்லுளி மங்கன்களாக படைத்து விட்டாய்

  • கருத்துக்கள உறவுகள்

பொடா வழக்கு

ஐந்து ஆண்டுகள் அலைக்கழிப்பு- ஐவரும் விடுதலை!

2002ஆம் ஆண்டு சூலை 31ஆம் தேதியன்று நள்ளிரவில் கொடிய பொடாச்சட்டத்தின் கீழ் என்னை கியூ பிரிவு காவல்துறை கைதுசெய்தது. இதைத்தொடர்ந்து தோழர்கள் சுப.வீரபாண்டியன், கா. பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், மருத்துவர் தாயப்பன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது ஆகியோரும் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

potareleaseyc8.jpg

அனைவரையும் ஒரே சிறையில் வைத்தால் பூகம்பம் வந்துவிடும் என அஞ்சிய அ.தி.மு.க. அரசு என்னைக் கடலூரிலும், பரந்தாமன், சுப. வீரபாண்டி யன், சாகுல் அமீது ஆகியோரைச் சென்னையிலும், புதுக்கோட்டை பாவாணனை திருச்சியிலும், மருத்துவர் தாயப்பனை சேலத்திலும் பிரித்து சிறைவைத்தது. எந்தச் சிறையாக இருந் தாலுமென்ன அவைகள் தமிழ்நாட்டில் தானே உள்ளன என்ற எண்ணத்துடன் நாங்கள் இதை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டோம்.

15 நாட்களுக்கு ஒருமுறை வழக்கு வாய்தாவுக்காக பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் போது அந்த சில மணித்துளிகள் எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்த நேரமாகும். நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசவும் எங்களைச் சந்திக்க வந்திருக்கிற வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களைக் கண்டு பேசவும் அந்த நேரத்தில்தான் எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் எங்களுக்குள் பேசுவதற்கு-நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்போது நாங்கள் ஒன்றாக அமர்ந்து இருக்கும் வேளையில் பேசி மகிழ்வோம். விசாரணை நடப்பது பற்றியோ வழக்கறிஞர்கள் வாதம் புரிவது பற்றியோ கொஞ்சமும் கவலைப் படாமல் எங்களுக்குள் பேசவேண்டியதைப் பேசித் தீர்க்க அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டோம்.

பிறகு 2004ஆம் ஆண்டு ஜனவரியில் எங்களில் சிலருக்கு பிணை விடுதலை கிடைத்தது. இறுதியாக நண்பர் கள் பரந்தாமன், சாகுல் அமீது ஆகியோ ருக்கு பிணை விடுதலை கிடைத்தது.

525 நாட்களுக்குப் பிறகு வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசித்தோம். ஆனாலும் எங்கள் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 914 நாட்கள் பேச முடியாமல் ஊமைகளாக இருக்கவேண்டி இருந்தது. பொதுக்கூட்டங் களில் பேசுவது ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது ஆகியவை அறவே கூடாது என்பது எங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளாகும். நாடாளுமன்றத் தேர்தலின்போது சில நாட்களுக்கும் சட்ட மன்றத் தேர்தலின் போது சில நாட்களுக் கும் எங்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டது.

வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத் தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தலைவர்களுக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டிருந்ததை கேள்விப்பட்டி ருக்கிறோம். ஆனால் சுதந்திர நாட்டில் வாய்ப்பூட்டுச் சட்டக் கொடுமைக்கு முதன் முறையில் ஆளானது நாங்களாகத்தான் இருப்போம். சிறைவாசத்தைவிட இது எங்களுக்கு மிகவும் வேதனை தந்தது.

மறு ஆய்வுக்குழு எங்கள் வழக்கை விசாரணை செய்து குற்றம் அற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த பிறகு கூட அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு திருந்தவில்லை. மாறாக மறுஆய்வுக் குழுவின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத் திற்கு மேல் முறையீடு செய்தது.

தி.மு.க. அரசு வந்தபோது மேல்முறையீட்டை திரும்பப் பெற்றது. ஆனாலும் எங்கள் மீது உள்ள வழக்கு களைத் திரும்பப்பெறுவதாக அரசாணை பிறப்பிக்க தாமதம் செய்தது. இறுதியாக 3-4-07 அன்று பொடா நீதிமன்றம் எங்கள் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்குப்பிறகு எங்கள் மீது போடப்பட்ட பொடா வழக்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது.

இந்த 5 ஆண்டு காலத்தில் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் நாங்கள் அடைந்த வேதனைகளுக்குப் பரிகாரம் ஏது? சிறையில் கழித்த நாட்களும், ஊமை யாய் வாழ்ந்த நாட்களும் ஒருபோதும் திரும்ப வரப்போவதில்லை. நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. எங்களின் குடும்பத்தினரும் சொல்லொண்ணாத விதத்தில் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

பொடா சட்டத்தின் கீழ் எங்கள்மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்த தன் விளைவாக தமிழக அரசு சாதித்தது என்ன? ஐந்தாண்டுக்கால கொடுமைக்குப் பிறகு வழக்கு திரும்பப்பெறப்பட்டது வழக்குத் தொடுக்கப்பட்டது எதற்காக என்பதும், திரும்பப்பெறப்பட்டது ஏன் என்பதும் இன்னமும் யாருக்கும் புரிய வில்லை. 525 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு நாங்களாவது பிணையில் வெளியே வந்தோம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக விடுதலையாகி இருக்கிறோம்.

ஆனால் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவர்களது தோழர்கள், எங்கள் இயக்கப் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், தர்மபுரித் தோழர்கள், நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீது பொடா வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை. பொடாச் சட்டமே திரும்பப் பெறப்பட்டுவிட்டுப் பிறகு இந்த வழக்குகள் தொடர்வதில் அர்த்தமில்லை.

தொடக்கத்தில் பொடச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு கூட்டணிக் கட்சி என்ற முறையில் ஆதரவு தந்த தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தபிறகு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று குரல் கொடுத்தது, போராடியது. எனவே பொடச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெறுவதுதான் நியாயமாகும். அதை உடனடியாகச் செய்ய முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறோம்.

-தென்செய்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.