Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராவணேசுவரம் ஆலயத்தில் -செந்தமிழில் திருக்குடமுழுக்கு!!

யாழ்ப்பாணம் பொன்னாலைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்துக்கு முன்னால் இரவோடு இரவாக திடீரெனத் தோன்றிய லிங்கத்துக்கு, இராவணேசுவரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இராவணேசுவரம் ஆலயம் சைவமகாசபையின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டு இன்று காலை செந்தமிழில் திருக்குடமுழுக்கு இடம்பெற்றது.

ஈழத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னனான சிவபக்தன் இராவணேசுரன் சிவலிங்கப் பெருமானை தாங்கி நிற்பதைப் போன்று சைவத்தமிழ் திருக்கோயிலாக இவ் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்துக்கள் பன்னிரண்டு போன்று பன்னிரு படிக்கட்டுக்களால் அமைக்கப்பட்ட உயர் பீடத்தில் சிவலிங்கப் பெருமான் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார்.

செந்தமிழுக்கு முதலாவது தமிழ் இலக்கண நூலான அகத்தியம் தந்த திருமூலர் மற்றும் திருமந்திரம் தந்த திருமூலர் ஆகியோரின் திருவுருவச் சிலைகள் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
உமை அம்மை சமேத சிவபெருமான், விநாயகர், செந்தமிழ்க் கடவுள் முருகன் ஆகியோரின் விக்கிரகங்களும் வழிபாடாற்றுவதற்கு ஏற்ற விதத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.

முன்னே காவல் தெய்வமாக பைரவர் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளார். சிறந்த தமிழ் மன்னனான இராவணேசுவரனை சில நூல்கள் தவறான வழியில் அரக்கனாக சித்திரித்திருக்கின்றன. ஈழத்தை சிவபூமி என அழைப்பதற்கு வழியேற்படுத்திய தமிழ்ப் பற்றாளன், ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிவலிங்கங்களைத் தாபித்த சிவ பக்தன், பெண்மைக்கு மதிப்பளித்த மாவீரன், தாயன்புக்கு பாத்திரமான தனயன், இவ்வாறு பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய இராவணேசுவரனுக்கான ஒரேயொரு ஆலயமாக இந்த இராவணேசுவரம் வரலாற்றில் பதிவுபெற்றுள்ளது.

50472086_2199813930074932_2406961090710750254840_2199833006739691_6059938343414650570745_2199813840074941_85061885236388

 

https://newuthayan.com/story/17/இராவணேசுவரம்-ஆலயத்தில்-செந்தமிழில்-திருக்குடமுழுக்கு.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.