Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு நிறைவும் விழிப்புணர்வு பேரணியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் உதவிக்கரம் அமைப்பின் 20 ஆண்டு நிறைவும் விழிப்புணர்வு பேரணியும்

January 31, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_0961.jpg?resize=720%2C400

மன்னார் கறிற்றாஸ்- வாழ்வுதயத்தின் ஒரு பிரிவாகிய உதவிக்கரப் பிரிவு உதயமாகி 20 ஆண்டுகள் நிறைவையொட்டி விசேட நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை(31) காலை கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை செ. அன்ரன் அடிகளாரின் தலைமையில் உதவிக்கர நிலையத்தில் இடம் பெற்றது.

1999 ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட ஓய்வு நிலை ஆயர் இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட உதவிக்கரம் அமைப்பு யுத்தம் காரணமாகவும் இயற்கை உபாதை, பிறவி குறைபாடு மற்றும் விபத்தினால்; அங்கங்களையும் உள் உறுப்புக்களையும் இழந்தவர்களுக்கான உதவிகள் மற்றும் மாற்று அங்கங்களை வழங்கி மாற்று ஆற்றல் உடையவர்களுக்கான மீள் வாழ்க்கை வழங்கும் நிறுவனமாக செயற்படுகின்றது.

குறித்த அமைப்பின் 20 வது வருட பூர்த்தியை முன்னிட்டு 20 வருடங்களாக உதவிக்கரம் அமைப்பினால் பயன் அடைந்த பயனாளர்களை ஒன்று திரட்டி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று வியாழக்கிழமை காலை பேரணி இடம் பெற்றது.

அதனைத்தொடர்ந்து உதவிகரம் அமைப்பில் சக்கர நாற்காலி மதிப்பிடல் பொறுத்துதல் பிரிவு ஆரம்ப நிகழ்வும் இடம் பெற்றது.  குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் , மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் , மன்னார் பிரதேச செயலாளர் முன்னை நாள் உதவிகர அமைப்பின் இயக்குனர்கள் உழியர்கள் மற்றும் பயனாளர்களும் கலந்து கொண்டனர்

குறித்த நிகழ்வின் இறுதியில் தெரிவு செய்யப்பட்ட புதிய பயனாளர்களுக்கான சக்கர நாற்காலி மற்றும் மாற்று நிலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

IMG_0959.jpg?resize=720%2C400  IMG_0969.jpg?resize=720%2C400IMG_0983.jpg?resize=720%2C400

 

 

http://globaltamilnews.net/2019/111770/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.