Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் வரை சத்தமின்றி பறிபோயுள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குளம் வரை சத்தமின்றி பறிபோயுள்ளது!

 

ஆக்கம்- கா.எழிலரசி..

 

வட தமிழீழம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி முதல் சுண்டிக்குள்ம நல்லதண்ணீர் தொடுவாய் வரை யான பகுதி வன ஜீவராஜிகள் திணைக்களத்தால் தேசியப்பூங்கா எனும் பெயரில் அபகரிக்கப்ப ட்டுள்ளது. இந்த அறிவித்தல் சுண்டிக்குளம் வனவிலங்குகள் காப்பகம் தேசிய பூங்காவாக 22 யூ ன் 2015 அன்று அதன் 19,565 ha (48,347 acres) பரப்புடன் அறிவிக்கப்பட்டது.

cundi2.jpg

சுண்டிக்குளம் சரணாலய விஸ்தரிப்­புக்காக வன ஜீவராசிகள் திணைக்களம் மக்களின் காணி களில் எல்லைக்கற்களை நாட்டியுள்ளது.இதன் கரையோர எல்லையே வெற்றிலைக்கேணியிலி ருந்து சுண்டிக்குளம் நல்லதண்ணீர் தோடுவாய்க்கு சற்று அப்பால்வரை சுவீகரிக்கப்பட்டுள்ள து.தெற்க்கு பக்கமாக ஆனையிறவு தட்டுவன்கொட்டி போற்ற பிரதேசங்களும்

உள்ளடங்குகிறது.வடமராட்சி கிழக்கில் மட்டும் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான வெற்றி லைகேணி முள்ளியான் கேவில் ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகள் உள்ளடங்கலாகவே சுவீகரிக்கப்பட்டுள்ளது.இதில் சுமார் 1400 குடும்பங்கள் வரை வசித்து வருகிறார்கள் இது அம் மக்களின் பூர்வீக நிலமாகும் இங்கு 6000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களும்

வடமரட்சி கிழக்கில் மூன்று பாடசாலைகளும் கிளிநொச்சி மாவட்ட கிராமங்களான இயக்கச்சி மற்றும் தட்டுவன் கொட்டி உட்பட ஐந்துக்கு மேற்பட்ட பாடசாலைகளும் மூன்றுகிறிஸ்தவ தே வாலயங்களும் பதினைந்துக்கு மேற்பட்ட இந்து ஆலயங்கள் உட்பட மக்களுடைய சகல உட்கட் டுமானங்கலகும் உள்ளடங்கியுள்ளன.

குறித்த தேசிய பூங்கா சுவீகரிப்பு திட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசு மீள பெறுமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .ஆனல் அரசு இதுவரை செவி சாய்ப்பதாக இல்லை.

பறவைகள் சரணாலயத்திற்க்கு மக்கள் எதிர்ப்பில்லை..

இதேவேளை அப்பிரதேச மக்கள் தாம் சுண்டிக்குளம் தேசிய பூங்கா திட்டத்தையே எதிர்ப் பதாகவும் இத் தேசிய பூங்கா திட்டத்தினை கைவிட்டு ஆரம்பத்தில் காணப்பட்ட சரணாலயக் காணிகளுக்கு மாத்திரம் எல்லையிடுமாறு மக்கள் கோரி வருகின்றனர். இக் கோரிக்கையின் அடிப்படையில் பிரதேச மக்கள் பலதடவைகள் பல கவன ஈர்ப்பு போராட்டங்களில்

ஈடுபட்டுள்ளனர். 1932 june 22 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதற்க்கமைவாக சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயம் ஆரம்ப காலத்தில் 25ஆயரத்து 550 ஏக்கர் நிலப்­லபரப்பினைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 48347 ஏக்கர் வரையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பூங்காவிற்க்காக சுவீகரிக்கப்பட்ட பிரதேசங்களில் இரவோடு இரவாக எல்லைக்கற்கள் நடும் திட்டம் கணிசமாக நிறைவடைந்துள்ளது.

பலனளிக்காத ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களும் விசேட கூட்டங்களும்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்ற பல ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பிரதேச மக்களால் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர் ஆனால் ஒருங்கிணைப்பு தலைவராக இருந்த பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான MA சுமந்திரன் அவர்கள் நீங்கள் காடுகளுக்குள் விலங்குகளை வேட்டையாடுவதில்லை பச்சை மரங்களை வெட்டுவதில்லை ஆகவே நீங்கள் இதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை என அவரால் கடும் தொனியில் அறிவுறுத்தப் பட்டது. இதே வேளை குறித்த தேசிய பூங்கா பிரதேசத்தில் காட்டு விலங்குகள் எவையும் இல்லை அவ்வாறிருக்க ஏன் இத் தேசிய பூங்கா சுவீகரிப்பு?

Chundi3.jpg

என மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் சிலர் கொழும்பில் நடைபெற்ற காணி உரிமைகள் தொடர்பான கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் மருதங்கேணி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது யானை இல்லாத அதேவேளை காடுகள் தொடர்பு அற்ற வடமராட்சி

பிரதேசத்திற்க்கு யானையை பிற மாவட்டங்களிலிருந்து கொண்டுவந்து இறக்கிவிடப் பட்டிருக்கலாம் என சந்தேகிகப்படுகிறது. அவ்வாறு சந்தேக படுவதற்க்கு பலமான காரணம் வந்த யானை குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து எப்படி எங்கே சென்றது.இதுவரை அந்த யானை சென்றதற்க்கான எந்த தடையங்களும் இல்லை இதனால்

அந்த யானை வாகனத்தில் ஏற்றிவரப்பட்டு மீள ஏற்றிச் செல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேசிய பூங்கா சுவீகரிக்கப்பட்தன் பின்னர் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் நாளாந்தம் தமது சமையல் தேவைகளுக்காக காட்டிற்க்கு சென்று விறகுகளை பெற்றே சமையல் மேற்கொள்வது வழமையாகும் இந்நிலையில் மக்கள் காடுகளுக்கு சென்று விறகுகளை பெற்றுக் கொள்ளவோ அல்லது தமது வயல் நிலங்களில் நெற் பயிர் செய்கை மேற்கொள்ளவோ அல்லது நன்னீரில் மீன் மற்றும் இறால் பிடிப்பில்

ஈடுபடவோ அதுமட்டுமின்றி பல வருடங்களாக இயங்கி வந்த பனங்கள் விற்பனை நிலையத்தை மீள கட்டி இயக்கவோ வனஜீவராஜி திணைக்களம் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெற்றிலயுக்கேணி முதல் சுண்டிக்குளம் பேப்பார பிட்டி வரையான பிரதேசம் முற்று முழுதாக தமிழ் மக்களிடமிருந்து சத்தமின்றி பறிபோயுள்ளது. இராணுவம் மூலம் இதுவரை காணிகளை சுவீகரித்து வந்த அரசு இன்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலம் அரசு தமிழர் நிலங்க ளை சத்தமின்றி அபகரித்து வருவது தடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Chundi1.png

www.thaarakam.com/2019/01/31

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.