Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சுற்றி சைக்கிள் ஓட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை சுற்றி சைக்கிள் ஓட்டம்

 

வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் மூன்று அம்ச கோரிக்கையை முன்வைத்து இலங்கையை துவிச்சக்கரவண்டியில் சுற்றும் சாதனைப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

pra.jpg

எதிர்வரும் 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம் முன்பாக ஆரம்பமாகவுள்ள இச் சாதனைப்பயணம் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை தனிப்பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்,  லயன்களில் வாழும் மலையக மக்களுக்கு தனித்தனி வீடுகள் அமைத்து கொடுக்கப்படவேண்டும், தேயிலைத்தோட்டத்தில் பணியாற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

10 ஆம் திகதி 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இச்சாதனை துவிச்சக்கரவண்டிப்பயணம் 2125 கிலோ மீற்றர் தூரத்தினை கொண்டமையவுள்ளதுடன் மார்ச் மாதம் 13 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழத்தில் 11 மணிக்கு நிறைவுறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

das.jpg

வவுனியாவை சேர்ந்த கலைஞரான த. பிரதாபன் கடந்த காலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கையை சுற்றி மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்ததுடன் வட மாகாணத்தினை சுற்றியும் துவிச்சக்கரவண்டியில் பயணித்திருந்தார்.

 

http://www.virakesari.lk/article/49435

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தளத்தை சென்றடைந்த சாதனைப் பயணி கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தார்

“அகில இலங்கை சாதனைப் பயணம்” என்னும் கருப்பொருளில் இலங்கையைச் சுற்றி துவிச்சக்கர வண்டியில் பயணம் மேற்கொண்டுள்ள தர்மலிங்கம் பிரதாபன் புத்தளத்தை சென்றடைந்தார். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) கொழும்புக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.

வவுனியாவைச் சேர்ந்த இளம் கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை புத்தளத்தை சென்றடைந்தார்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரித்துக்கொடுக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 10 ஆம் திகதி வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயத்தின் முன்பாக இந்த சாதனைப் பயணத்தினை இவர் ஆரம்பித்தார்.

அந்தவகையில், அநுராதபுரம், மாத்தளை, கண்டி, கேகாலை மற்றும் குருநாகல் ஊடாக புத்தளம் நகரை சென்றடைந்தார். இன்று காலை புத்தளம் பிரதான பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தார். இதன்போது புத்தளம் சர்வமத குழு உறுப்பினர் சுந்தரராம குருக்கள் பொன்னாடை போர்த்தி, ஆசி வழங்கி வழியனுப்பி வைத்தார்.

இதன்போது, வவுனியா நகர சபையின் உப தலைவர் குமார சுவாமி , முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் செந்தில் மயூரன், முன்னாள் புத்தளம் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உட்பட உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதாபன் கூறுகையில், “இந்த நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் தோட்டத் தொழிலாளர்களும் மனிதர்களே. மழையிலும், குளிரிலும் நனைந்து நிம்மதியிழந்து சொல்ல முடியாத பல துன்பங்களோடு லயன்களில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வாறு சிறிய லயன்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களின் வயதுக்கு வந்த பிள்ளைகளும், சிறுவர்களும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது.

அத்துடன், இன்று நாட்டில் வாழ்க்கை செலவும் அதிகரித்துள்ளதால் அவர்களுடைய சம்பளத்தை அதிகரித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவையும் உள்ளது. அவர்கள் இந்நாட்டின் முக்கிய சொத்தாகும். அவர்கள் சிந்தும் வியர்வைதான் நாங்கள் நாள்தோரும் அருந்தும் தேனீராகும்.

எனவே, தேநீர் அருந்தும் ஒவ்வொருவரும் தோட்டத் தொழிலாளர்களின் துயரத்தைத் துடைக்க முன்வர வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்” என்று ௯றினார்.

இந்தப் பயணமானது 2,125 கிலோ மீற்றர் தூரம் கொண்டதுடன், 32 நாட்களில் 25 மாவட்டங்களுக்கும் பயணத்தை மேற்கொண்டு அடுத்த மாதம் 13 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிறைவடையவுள்ளது.

tharmalingam-pirathaban-rally-in-puttala

tharmalingam-pirathaban-rally-in-puttala

tharmalingam-pirathaban-rally-in-puttala

 

 

http://athavannews.com/அகில-இலங்கை-சாதனைப்-பயணி/

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 அம்சக் கோரிக்கை சுற்றுப்பயணம்: பிரதாபனுக்கு அச்சுறுத்தல்

 

ஆ.ரமேஸ், எஸ்.கௌசி 

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்துமாறும் லயன் வீடுகளை ஒழித்து, தனி வீட்டுத்திட்டங்களை வழங்குமாறும், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை, தனிப்பல்கலைக்கழகமாக மாற்றவேண்டும் என்றும், 3 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபனுக்கு, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் வைத்தே, இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 10ஆம் திகதி தனது சைக்கிள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார்.

வவுனியா, அநுராதபுரம், தம்புளை, கண்டி, கொழும்பு, காலி, கதிர்காமம் ஊடாக இரத்தினபுரிக்குச் சென்று, கடந்த 23ஆம் திகதி ஹட்டனை வந்தடைந்தார். அன்றைய தினம் மாலையே, தலவாக்கலையை வந்தடைந்தார். இதன்போது, தலவாக்கலை நகரில் மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகில், பொதுமக்கள் பலர், சைக்கிளை மறித்து, அவருடன் உரையாடியுள்ளனர்.

இதன்போது, இவ்விடத்துக்கு லொறியொன்றில் வந்த நபரொருவர், இந்தச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதாபனை, தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து மிரட்டியுள்ளார். அதுமாத்திரமல்லாது, தனது அலைபேசியில், வேறோரு நபருக்குத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தாகவும் அலைபேசியில் உரையாடிய நபரும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டியதாகவும் தெரியவருகின்றது.

“சம்பளப் பிரச்சினை, எமது பிரதேசத்தில் நிலவும் பிரச்சினை; இதில், நீ தலையிட வேண்டாம்; ஊருக்கு ஊர் செல்வதைக் கைவிட்டு விட்டு, வவுனியாவுக்கு ஓடிவிடு;

இல்லையேல், கைகால்களை உடைத்துவிடுவோம்; தலவாக்கலை நகரசபை மைதானத்துக்கு வா; அங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளோம்” என்று அலைபேசியில் உரையாடிய நபர் மிரட்டல் விடுத்ததாக, பிரதாபன் தெரிவித்தார்.

பின்னர், அங்கிருந்த மக்களைச் சந்தித்துவிட்டு, பொலிஸ் அதிகாரியொருவரின் பாதுகாப்புடன், நுவரெலியாவை நோக்கிப் பயணித்த அவர், நானுஓயா ஊடாக, நேற்று (25), நுவரெலியாவை வந்தடைந்தார்.

இவர், நுவரெலியாவிலிருந்து, வெலிமடை, பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் வழியாக, மீண்டும் வவுனியாவுக்குச் செல்லவுள்ளார்.

இதேவேளை, தனது தனி மனிதக் கோரிக்கை தொடர்பாக, வரும் வழியெங்கும் பொதுமக்களிடம் தெரிவித்து வருவதாகவும் இந்தக் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, தீர்வு வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/3-அம்சக்-கோரிக்கை-சுற்றுப்பயணம்-பிரதாபனுக்கு-அச்சுறுத்தல்/76-230051

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தர்மலிங்கம் பிரதாபனின் துவிச்சக்கரவண்டிப் பயணம் மன்னாரை சென்றடைந்தது

March 7, 2019

1 Min Read

 

கடந்த மாதம் 10 ஆம் திகதி மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வவுனியா கோவில்குளம், சிவன் கோவிலிலிருந்து ஆராம்பித்த வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபனின் துவிச்சக்கர பயணம் நேற்று புதன் கிழமை இரவு மன்னார் நகரை சென்றடைந்தது. இதனையடுத்து   இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மீண்டும் மன்னாரில் இருந்து வவுனியாவை நோக்கிய தனது துவிச்சக்கர வண்டிப்பயணத்தை ஆரம்பித்தார்.

தர்மலிங்கம் பிரதாபன் சுமார் 2125 கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கவுள்ள நிலையில் நாட்டின் பல இடங்களுக்கும் சென்றுள்ளஅவர் மன்னாரை சென்றடைந்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளார்.

25 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை காலை மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ள தர்மலிங்கம் பிரதாபன் வவுனியாவுடன் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC_0371.jpg?resize=800%2C533DSC_0374.jpg?resize=800%2C533DSC_0380.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2019/115333/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிர­தா­பனின் பயணம் நிறைவு!!

பதிவேற்றிய காலம்: Mar 8, 2019

வவு­னி­யாவைச் சேர்ந்த தர்­ம­லிங்­கம்  என்­ப­வர் மூன்று அம்­சக் கோரிக்­கைகளை முன்­வைத்து இலங்­கையை ஈரு­ரு­ளி­யில் சுற்­றும் பய­ணத்தை கடந்த மாதம் 9ஆம் திகதி மேற்­கொண்­டி­ருந்த நிலை­யில் அவ­ரின் பய­ணம் வவு­னி­யா­வில் நேற்று நிறை­வுக்கு வந்­தது.

unnamed-6.jpgunnamed-1-1.jpgunnamed-2-1.jpgunnamed-3-1.jpgunnamed-4-1.jpgunnamed-5-1.jpgunnamed-6-1.jpgunnamed-7.jpgunnamed-8.jpg

லயன்­க­ளில் வாழும் மலை­யக மக்­க­ளுக்கு தனித்­தனி வீடு­கள் அமைத்து கொடுக்­கப்­பட வேண்­டும், தேயி­லைத் தோட்­டத்­தில் பணி­யாற்­றும் தோட்­டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயி­ரம் ரூபா சம்­பள உயர்வை வழங்க வேண்­டும், யாழ்பாணப் பல்­க­லைக் கழக வவு­னியா வளா­கத்தை பல்­க­லைக் கழ­க­மாக தர­மு­ய­ரத்த வேண்­டும் ஆகிய கோரிக்­கை­களை முன்­வைத்தே அவ­ரின் பய­ணம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

2 ஆயி­ரத்து 125 கிலோ­மீற்­றர் தூர­மு­டைய இந்­தப் பய­ணம் நேற்று நிறை­வுக்கு வந்­தது.

வவு­னியா சுந்­தா­னந்தா இந்து இளை­ஞர் சங்­கத்­தில் தமிழ்­மணி அக­ளங்­கன் தலை­மை­யில் நேற்று மாலை 5 மணிக்கு அவ­ருக்­கான வர­வேற்பு நிகழ்­வு­கள் ஒருங்கு செய்­ய­பட்­டி­ருந்­தன. நிகழ்­வில் மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம், செ.மயூ­ரன், நக­ர­சபை உறுப்­பி­னர் நா.சேனா­தி ராஜா, வர்­த்த­கர்­சங்­கத்­தி­னர், தமிழ்­வி­ருட்­சம் அமைப்­பி­னர் உள்­ளிட்ட பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

 

https://newuthayan.com/story/14/பிரதாபனின்-பயணம்-நிறைவ.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.