Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாதியின் மரணத்துக்கு நீதி கோரி ஹற்றனில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 12, 2019

DSC03397.jpg?zoom=1.440000057220459&resi
ஹற்றன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதி ஒருவரின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி அட்டன் சிவில் அமைப்புகள் அட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கையில் இன்று (12.02.2019 ) காலை ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது பதாதைகள் ஏந்தியும் கோசங்களை எழுப்பியவாறும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையை அட்டன் நகரசபைக்கு முன்பாக நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் முன்னெடுத்தனர்.

கடந்த மாதம் 28ம் திகதி அட்டன் டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்து கொண்ட தாதி தனது மரணத்திற்கு வைத்தியசாலையின் உரிமையாளரான டாக்டர் மற்றும் அவரின் மனைவியே காரணம் என தனது பெற்றோருக்கு வட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்திருந்தார்.

ஆனால் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் ஆதாரங்கள் காணப்பட்டும் இதுவரை எவரையும் கைது செய்யப்படவில்லை எனவும் அட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரேத பரிசோதனை, மற்றும் மரண விசாரணை முறையாக முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தாதியின் மரணம் தொடர்பில் அட்டன் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ள நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த தாதியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில் நீதிபதி நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுப்பதாக இதில் கலந்து கொண்டுள்ள சிவில் அமைப்புகள் தெரிவித்தன.
(க.கிஷாந்தன்)

 DSC03402.jpg?zoom=1.440000057220459&resiDSC03404.jpg?zoom=1.440000057220459&resiDSC03411.jpg?zoom=1.440000057220459&resiDSC03432.jpg?zoom=1.440000057220459&resiDSC03434.jpg?zoom=1.440000057220459&resi

http://globaltamilnews.net/2019/112925/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.