Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹை றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_6185.jpg?zoom=1.2100000262260437&res

வடக்கில் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஹை றோட் செயற்றிட்டம் 3 வருடங்களாக தொடக்கப்படாத நிலையில், ஹை றோட் செயற்றிட்டம் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் பிரதமர் முன்னால் கூறியிருந்தார்.

வடமாகாணத்திற்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் ரணில் விக்கிரமசிங்க யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்த ஆராய்வு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாா்.

இதன்போது வீதி அபிவிருத்தி சம்மந்தமான விடயம் பேசப்படுகையில்,

ஹை றோட் செயற்றிட்டம் எதற்காக ஆரம்பிக்கப்படாமல் உள்ளது? என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் ஈ.சரவணபவன் ஆகியோா் கேள்வி எழுப்பியிருந்தனா்.

இதற்கு பதில ளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாாி, இந்த வருடம் ஆரம்பமாகும் என கூறியிருந்தாா். அப்போது இந்த வருடம் என்றால் இந்த வருடத்தில் எப்போது ஆரம்பமாகும்? எந்த மாதத்தில் ஆரம்பமாகும்? என பாராளுமன்ற உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினாா்கள்.

அதன் போது கருத்து தொிவித்த பாராளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஹை றோட் செயற்றிட்டம் என்பது வடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கின்றது என கூறினாா்.

இதனையடுத்து சபையிலிருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாாியுடன் பேசிய பிரதமா் ரணில் விக்கிரமசிங்க எதற்காக ஹை றோட் செயற்றிட்டம் ஆரம்பமாவதற்கு காலதாமதமாகின்றது? என கேள்வி எழுப்பினாா். இதனையடுத்து இந்த வருடம் மே மாதமளவில் ஹை றோட் செயற்றிட்டம் ஆரம்பமாகும் என அதிகாாிகள் உறுதியளித்தனா்.

மேலும் ஹை றோட் செயற்றிட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு செயற்றிட்டம் என்பதுடன், வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 206.08 கிலோ மீற்றா் நீளமான 53 வீதிகளும், உள்ளுராட்சி சபைகளுக்கு சொந்தமான 105.40 கிலோ மீற்றா் நீளமான 116 வீதிகளும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக 40352 மில்லியன் ரூபாய் நிதி ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

http://globaltamilnews.net/2019/113269/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.