Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் தட்டுப்பாட்டை எதிர்த்து குரல் கொடுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மணல் தட்டுப்பாட்டை எதிர்த்து குரல் கொடுங்கள்
 
17944.jpg
வட பகுதியில் நிலவுகின்ற மணல் தட்டுப்பாடு எதற்கானது என்பது பற்றி இன்றுவரை எந்த விளக்கமும் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை.
 
போருக்குப் பின்பாக வடபுலத்தில் கட்டுமானப் பணிகள் நடந்த வண்ணமுள்ளன.வீடுகள், கடைத் தொகுதிகள், மண்டபங்கள் மற்றும் பாடசாலைக்கட்டிடங்கள், கட்டிடத் திருத்தப்பணிகள் என ஏகப்பட்ட வேலைகள் நடந்தவண்ணமிருக்கின்றன.
 
எனினும் மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப்பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் அதிகூடிய விலையில் மண்ணைக் கொள்வனவு செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
 
இருந்தும் இதுபற்றிப் பொறுப்பான அதிகாரிகள் தங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல நடந்து கொள்கின்றனர்.
 
இதற்கு மேலாக வீட்டுத் திட்ட உதவி கிடைக்கப் பெற்றவர்கள் காதில் கிடந்த தோட்டை அடைவு வைக்குமளவுக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.இருந்ததையும் விற்று அத்திபாரம் போட்டால், கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைப்பதற்கு காலதாமதமாகிறது.
 
என்ன செய்வது தத்தம் பிரதேச செயலகத்துக்கு அலைந்து திரிந்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களை கும்பிட்டு மன்றாடி பகுதிக் கொடுப்பனவைப் பெற்றால், அடுத்த கட்டுமானப் பணிக்கு மணல் இல்லையாம். 
கறுப்புச் சந்தையில் மணலைக் கொள்வனவு செய்வதென்றால் ஒரு டிப்பர் மணல் சுமார் நாற்பதாயிரம் ஆகிறது.
 
இருபதாயிரம் ரூபாயுக்கு பெறக்கூடிய மணலை நாற்பதாயிரம் ரூபாயுக்குப் பெறுவதென்பது எத்துணை சுமையைக் கொடுக்கும் என்பதை பொறுப்பானவர்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.
 
இவை தவிர, மணல் விநியோகத்தை ஒழுங்காகச் செய்யாததன் காரணமாக கள்ளமண் ஏற்றும் காரியம் கணிசமாக நடக்கிறது.
 
இதனால் கள்ள மண்ணைப் பிடிப்பதற்கு ஒரு பகுதிப் பொலிஸாரை ஈடுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது.
 
கள்ளமண் விவகாரத்தால் அரியாலை கிழக்குப் பகுதி மக்கள் உறங்க முடியவில்லை என்று முறைப்பாடு சொல்வதுடன் தாங்கள் குடிபெயர வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.ஆக, மணல் விநியோகத்தை சீர்படுத்தினால் கள்ளமண் விநியோகம் முற்றாகக் கட்டுப்படும்.
 
இதன்மூலம் கள்ளமண்ணைப் பிடிப்பதில் ஈடுபட்டுள்ள பொலிஸார் சமூகச் சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடலாம். கட்டுமானப் பணிகள் துரிதமாகுவதுடன் வீட்டுத் திட்டப்பணிகள் விரைவுபடும்.
எனினும் மணல் தட்டுப்பாட்டை நீக்கு என்று கோசம் போடுவதற்கு யார் உளர்.
 
எனவே இது விடயத்தில் பொது அமைப்புகள் குரல் கொடுப்பதுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் என்ற அகிம்சை வழிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை சரியாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.