Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாம் செப்படிவித்தை என்பதை அறிவோம் பராபரமே

Featured Replies

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடபகுதிக்கு வருகை தந்துள்ளார்.
 
பிரதமரின் வருகை தொடர்பில் வடபுலத்து மக்கள் ஏதேனும் எதிர்பார்க்கின்றார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.தவிர, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சுப் பதவியையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடத்தில் வைத்திருப்பதன் காரணமாக அவர் வடக்குக்கு விஜயம் செய்வது அவசியமாகிறது.
 
இவற்றுக்கு மேலாக, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியைக் காப்பாற்றுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பக்கபலமாக இருந்ததன் அடிப்படையில் கூட்டமைப்புக்காகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கு விஜயம் செய்வது தேவையானதே.
 
வடக்குக்கான பிரதமரின் வருகையில் முக்கியமான விடயம் நுண்கடன்களை இரத்துச் செய்கின்ற நிகழ்வைக் குறிப்பிடலாம்.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் நுண்கடனைப் பெற்று அவற்றைத் திருப்பச் செலுத்த முடியாமல் பெரும் கஷ்டப்படுவதாக சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் கூறியதுடன் நுண்கடனை இரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.இந்த அடிப்படையில், நுண்கடன்களை இரத்துச் செய்கின்ற அறிவிப்பை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் விடுத்திருந்தார்.
 
இதற்கு மேலாக நுண்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் அவலம் பற்றியும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றியும் ஐ.நா வின் அதிகாரி ஒருவர் அண்மையில் அறிக்கை வெளியிட,
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் 
வடபுலத்தில் நுண்கடன் ஏற்படுத்தி வரும் பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பிரஸ்தாபிக்க இருக்கின்ற வேளையில் அந்த விவாதத்தை இல்லாமல் செய்யும் வகையிலும் நுண் கடன்களை இரத்துச் செய்வதான அறிவிப்பு அவசர அவசரமாக விடுக்கப்பட்டுள்ளதெனலாம்.
 
இவ்வாறு ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் பிரஸ்தாபிக்கப்படவிருந்த முக்கியமான ஒரு விடயப் பொருளை இல்லாது செய்வதற்கு நம்மவர்களும் முண்டு கொடுத்து நுண்கடனை இரத்துச் செய்துள்ளனர்.இவ்வாறு நுண்கடனை இரத்துச் செய்தல் என்பது மாதிரியான செயற்பாடேயன்றி அது முழுமையானதல்ல என்பதும் புரிதற்குரியது.
 
ஐ.நாவில் தமிழர்களுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்படும் போதெல்லாம் அந்தச் சூழ் நிலையை முறியடிப்பதற்கு ஆட்சியாளர்கள் எடுக்கின்ற அத்தனை நடவடிக்கைகளுக்கும் நம் அரசியல் தலைமை பேருதவியாற்றி வருவது வழக்கம். 
 
அந்தப் பேருதவி நுண்கடன் விடயத்திலும் ஆற்றப்பட்டுள்ளது.அட, கள்ள மண் கடத்துவோர் அதிக இலாபம் உழைப்பதற்காக மணல் விநியோகத்தை முடக்கி வைத்திருப்பதாகப் பலரும் கூறும் வேளை மணல் விநியோகம் பற்றி பிரதமரிடம் யாரேனும் கூறியிருந்தால் உண்மையில் அவர் கள் ஏழை மக்கள் மீது விசுவாசம் கொண்டவர்கள் எனலாம்.
 
ஆனால் அப்படி யாரேனும் மணல் பற்றிக் கதைத்ததாகத் தகவல் ஏதும் இல்லை எனும் போது எல்லாம் செப்படிவித்தை என்பதை மட்டுமே இப்போதைக்கு கூறமுடியும்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.