Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காஷ்மீர்- குளிர் தேசத்துக்குப் போர்!!

பதிவேற்றிய காலம்: Mar 3, 2019

ஜம்மு காஷ்­மீ­ரில் இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் பிரிக்­கின்ற எல்லை 740 கிலோ மீற்­றர் நீள­மா­ன­தாக இருக்­கி­றது. இது பனி படர்ந்த மலை­களை ஊட­றுத்து எல்­லை­யி­டப்­பட்ட பிர­தே­சம். இந்­தி­யா­வை­யும் பாகிஸ்­தா­னை­யும் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான சிப்­பாய்­கள் இந்த எல்­லைக் கோட்­டின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் எந்த நே­ர­மும் தயார் நிலை­யில் நிற்­கின்­ற­னர். 

அவர்­கள் அந்­தப் பனி மலை­க­ளின் அழகை இர­சிக்­கும் நோக்­கில் அங்கு நிலை­கொள்­ள­வில்லை. ஒரு முனை­யி­லுள்­ள­வரை மறு முனை­யி­லுள்­ள­வர் கொல்­லும் நோக்­கில் ஆயு­தம் தாங்­கி­ய­வர்­க­ளாக வக்­கி­ரத்­து­டன் காத்­தி­ருக்­கி­றார்­கள்.
இந்­தி­யா­வின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்­மீர் – புல்­வா­மாப் பகு­தி­யில் பேருந்­தில் பய­ணித்­துக்­கொண்­டி­ருந்த இந்­தி­யச் சிப்­பாய்­க­ளைக் குறி­வைத்­துக் கடந்த மாதம் 14ஆம் திகதி ஜெய்ஷ் ஈ முக­மது அமைப்­பைச் சேர்ந்த தற்­கொ­லை­தாரி நடத்­திய தாக்­கு­த­லில் 40 இந்­தி­யச் சிப்­பாய்­கள் கொல்­லப்­பட்­ட­னர். இது இந்­தி­யா­வுக்­குள் அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யது. இந்­திய உயர்­மட்­டங்­கள் அவ­சர சந்­திப்­புக்­களை ஏற்­ப­டுத்­தின. இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி அவ­ச­ர­மா­கப் பாது­காப்­புச் சபை­யைக் கூட்­டி­னார். 

 

இரா­ணு­வத் தள­ப­தி­கள், அய­லு­றவு அமைச்­சர்­கள், புல­னாய்­வுப் பிரி­வி­னர் எனப் பல தரப்­பி­ன­ரும் பங்­கேற்ற அந்­தச் சந்­திப்­பை­ய­டுத்து, அதி­ர­டி­யா­கப் பாகிஸ்­தா­னுக்­குள் ஊடு­ருவி இந்­திய வான்­படை தாக்­கு­தல் நடத்­தி­யது. இந்­தி­யா­வின் தாக்­கு­த­லைத் தொடர்ந்து பாகிஸ்­தான் தலைமை அமைச்­சர் இம்­ரான் கானும் தேசிய பாது­காப்­புச் சபை­யைக் கூட்­டி­னார். அணு ஆயு­தப் பிரி­வி­ன­ரு­ட­னும் ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார். இந்த நிலை­யில் மறு­ப­டி­யும் இந்­திய வானூர்­தி­கள் பாகிஸ்­தா­னின் கட்­டுப்­பட்­டி­லுள்ள காஷ்­மீர் பகு­திக்­குள் ஊடு­ரு­வித் தாக்­கு­தல் நடத்­தின. தாக்­கு­தல் நடத்­திய இந்­திய வானூர்­தி­க­ளைப் பாகிஸ்­தான் துருப்­பு­கள் இப்­போது சுட்டு வீழ்த்­தின. விமா­னி­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். போர்ப் பதற்­றம் அதி­க­ரித்­தது. எல்­லை­யை­யொட்­டிய இந்­திய – பாகிஸ்­தான் வானூர்தி நிலை­யங்­கள், பாட­சா­லை­கள் மூடப்­பட்­டன. அந்­தப் பகுதி மக்­கள் எல்­லோ­ரும் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளி­யேற்­றப்­பட்­ட­னர். எல்­லை­யில் இரண்டு தரப்­பி­ன­ரும் இரா­ணு­வத்­தைக் குவிக்­கின்­ற­னர். துப்­பாக்­கிச் சூடு­கள் ஆரம்­பித்­துள்­ளன. கைதாகிய விமானி விடுவிக்கப்பட்டார். இரண்டு நாட்­டுத் தலை­வர்­க­ளும் ஆலோ­சித்­துக் கொண்ட விட­யங்­கள் என்ன, இனி எடுக்­கப்­போ­கின்ற தீர்­மா­னங்­கள் என்ன என்­ப­தைத் தொடர்ந்து நடந்­தே­று­கின்ற சம்­ப­வங்­க­ளில் இருந்து கண்­டு­கொள்­ள­லாம்.

 

பிரச்­சினை என்ன…?
புல்­வாமா தாக்­கு­த­லு­டன் இந்­தப் பிரச்­சினை சூடு பிடித்­தி­ ருந்­தா­லும் இது புதிய பிரச்­சினை அல்ல. காலணி நாடான இந்­தியா, பிரிட்­ட­னி­டம் இருந்து 1947ஆம் ஆண்டு சுதந்­தி­ரம்­பெ­று­வ­தற்கு முதலே ஆரம்­ப­மா­கி­யது இந்­தப் பிரச்­சினை. ஆனால், இந்­தியா சுதந்­தி­ர­ம­டைந்த பின்­னர்­தான் இந்­தி­யா-­ – பா­கிஸ்­தான் பிரி­வினை நிகழ்ந்­தது. இந்­துக்­கள் அதி­கம் வாழ்ந்த பகுதி இந்­தி­யா­வா­க­வும், முஸ்­லிம்­கள் செறிந்து வாழ்ந்த பகுதி பாகிஸ்­தா­னா­க­வும் பிரிப்­புக்­குள்­ளா­கி யது. அதற்கு முன்­பா­கப் பிரிட்­ட­னின் கால­ணித்­து­வத்­துக்­குள் முஸ்­லிம்­க­ளும் இந்­துக்­க­ளும் இந்­திய நிலப்­ப­ரப்­பில் ஒற்­று­மை­யாக வாழ்ந்­தார்­கள் என்று சொல்­லி­விட முடி­யாது. 1906ஆம் ஆண்­டில், இந்­திய முஸ்­லிம்­க­ளின் உரி­மை­யைப் பாது­காப்­ப­தற்­காக ‘முஸ்­லிம் லீக்’ உரு­வா­ன­தன் பின்­ன­ணி­யில் இந்­தி­யா­வில் முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­கள் கார­ணங்­க­ளாக இருந்­தன. இந்து -– முஸ்­லிம் மக்­க­ளி­டை­யே­யான பதற்­றங்­க­ளைத் தீர்ப்­ப­தற்­காக 1938ஆம் ஆண்­டில் மகாத்மா காந்­திக்­கும், முகம்­மது அலி ஜின்­னா­வுக்­கும் இடையே பேச்­சுக்­கள் நடந்­த­தை­யும், அவை தோல்­வி­ய­டைந்து முஸ்­லிம்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­களை விசா­ரிப்­ப­தற்­குக் குழு ஒன்றை முஸ்­லிம் லீக் அமைத்­த­தும் கூட இந்­தப் பிரச்­சி­னை­யின் வீரி­யத்­தையே வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இந்­தத் தன்மை இப்­போது வரை மாற­வில்லை என்­ப­தையே தற்­போ­தைய புல்­வா­மாத் தாக்­கு­தல் சார்ந்து இந்­திய ஊட­கங்­கள் வெளி­யி­டு­கின்ற இந்­தி­யத் தேசி­யத்­தைத் தூக்­கிப் பிடிக்­கின்ற செய்­தி­க­ளும், தென்­னிந்­தி­யத் திரைப்­ப­டங்­க­ளில் அதீத உணர்­வு­டன் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டும் இந்­தி­யக் கோஷத்தை ஒத்­த­தான போக்­கு­க­ளும் வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன. 

 

காஷ்­மீர் – இந்­தி­யா­வுக்கா, பாகிஸ்­தா­னுக்கா?
பிரித்­தா­னி­ய­ரால் இந்­தியா – பாகிஸ்­தான் என இரண்டு நாடு­கள் பிரிக்­கப்­பட்டு, அவற்­றைப் பிரித்­தா­னி­யர் விடு­வித்த உட­னேயே ஜம்மு காஷ்­மீ­ருக்­காக இரண்டு நாடு­க­ளும் போரிட்­டுக் கொண்­டன. அன்­றைய காஷ்­மீ­ரின் சிற்­ற­ற­ ர­சாக – சமஸ்­தா­னத் தலை­வ­ராக விளங்­கிய காஷ்­மீர் மகா­ராஜா அந்­தப் பிராந்­தி­யம் இந்­தி­யா­வு­டன் இணை­வ­தாக அறி­வித்­தார். இந்­தி­யா­வுக்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடையே போர் மூண்­டது. எல்­லைப் பகு­தி­யி­லும், இந்­தியா – பாகிஸ்­தான் நாடு­க­ளுக்­குள்­ளும் குண்­டுத் தாக்­கு­தல்­கள் நடந்­தன. பின்­னர் இந்த எல்­லைப் பிரச்­சினை ஐக்­கிய நாடு­க­ளின் தலை­யீட்டை எதிர்­கொண்­டது. மன்­ன­ராட்சி நடந்த பகு­தி­க­ளில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண­வேண்­டும் என்று ஐ.நா.வும் பாகிஸ்­தா­னும் கூறு­கின்­றன. இந்த வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டால் காஷ்­மீர் பகுதி பாகிஸ்­தா­னு­டன் இணைக்­கப்­ப­டு­வதே முடி­வா­கும் என்று பர­வ­லா­கக் கருத்­துக்­கள் நில­வு­கின்­றன. இத­னாலோ, என்­னவோ பேச்சு என்று எடுத்­துக் கொண்­டாலோ, வாக்­கெ­டுப்பு என்று கூறி­னாலோ இந்­தியா மௌனத்­தையே தன்­வ­ச­மாக்­கு­கி­றது. 

மோடி­யும் இம்­ரான் கானும்
தற்­போதை இந்­திய – பாகிஸ்­தான் தலை­மை­க­ளின் நிலைப்­பா­டு­கள் மகாத்மா காந்தி – – முகம்­மது அலி ஜின்­னா­வைப் பார்க்­கி­லும் அதிக முரண்­பா­டு­க­ளு­டனே இருக்­கின்­றன. இதில் இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி மீதான விமர்­ச­னங்­களே அதி­கம். இந்­திய மக்­களை மதம்­சார் அர­சி­ய­லுக்­குள் பழக்­கப்­ப­டுத்தி, அதன் மூலம் தனது அர­சி­யல் இருப்­பைத் தொடர்ந்து காத்து வரும் மோடி­யின் அர­சி­ய­லும், கிரிக்­கெட் துறை­யில் பிர­கா­சித்­துத் தலை­மைத்­து­வம், பரஸ்­ப­ரம் என மோடி­யி­லி­ருந்து வேறு­பட்டு நிற்­கும் இம்­ரான்­கான் முன்­னெ­டுக்­கும் அர­சி­ய­லும் மலைக்­கும் மடு­வுக்­கு­மான வித்­தி­யா­சங்­க­ளாக நோக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்­லிம்­கள் அதி­க­ள­வில் வாழும் பாகிஸ்­தா­னில் அல்­லாவை அவ­தூ­றா­கப் போசி­னார் என்று கிறிஸ்­த­வப் பெண்­ணான ஆசி­பா­வுக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த சாவுத்­தண்­டனை நீக்­கப்­பட்­ட­போது பாகிஸ்­தா­னுக்­குள் ஏற்­பட்ட கல­வ­ரத்­தை­யும், அதன்­போது இம்­ரான்­கான் செயற்­பட்­டி­ருந்த விதத்­தை­யும் மோடி அர­சி­ய­லின் நேர்­ம­றை­யா­கக் கொள்­வோர் அதி­கம். அடிப்­ப­டை­யில் ஒரு முஸ்­லி­மாக இருப்­பி­னும் சிறந்­த­தொரு மனி­த­னா­கவே இம்­ரான்­கான் தற்­போது வரைத் தன்னை அடை­யா­ளப்­ப­டுத்தி நிற்­கி­றார். பாகிஸ்­தா­னின் தலைமை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற அடுத்­த­டுத்த நாள்­க­ளில் இருந்தே காஷ்­மீர் பிரச்­சி­னை­யைப் பேச்சு மூலம் தீர்ப்­ப­தற்கு இம்­ரான்­கான் பல­த­ட­வை­கள் அழைப்பு விடுத்து வரு­வ­தை­யும் இந்­தியா மௌன­மாக அதைக் கடந்து வரு­வ­தை­யும்­கூட இவ்­வி­டத்­தில் குறிப்­பிட்­டுக் காட்ட முடி­யும். 

 

தற்­போது பாகிஸ்­தா­னால் கைது செய்­யப்­பட்ட இந்­திய விமா­னியை விடு­விப்­ப­தாக நாடா­ளு­மன்­றில் இம்­ரான்­கான் ஆற்­றிய உரை­யில்­கூட அந்த விமானி கைதா­கி­ய­தையோ, அவரை விடு­விப்­ப­தையோ ஒரு பொருட்­டா­கக் கொள்­ளாத தன்­மை­யில் அந்த உரை அமைந்­த­தாக இம்­ரான்­கான் மீதான கருத்­து­கள் கவ­னம் பெறு­கின்­றன. அத்­தோடு விமா­னியை விடு­விப்­ப­தாக நாடா­ளு­மன்­றில் இம்­ரான் கான் தெரி­வித்­த­போது நாடா­ளு­மன்­றி­லுள்ள அனை­வ­ரும் கைதட்டி அதை வர­வேற்­றி­ருந்­த­னர். இந்த நிகழ்­வா­னது, இந்­திய ஊட­கங்­க­ளும், இந்­தி­யத் திரைப்­ப­டங்­க­ளும் இது­வரை சித்­தி­ரித்­து­வந்த பாகிஸ்­தான் பற்­றிய பிம்­பத்தை அப்­ப­டியே திருப்­பிப் போட்­டி­ருப்­ப­தை­யும் குறித்­தாக வேண்­டும்.

இரு சாரா­ரும் இழைக்­கும் தவ­று­கள்
இந்­தியா -– பாகிஸ்­தான் எல்­லைப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கும், பிரச்­சி­னை­யைத் தொடர்­வ­தற்­கும் பல வழி­கள் இருக்­கின்­றன. இதில் இரண்டு தரப்­பி­ன­ரும் ஒரே நிலைப்­பாட்­டில் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­கான வழி­யைத் தெரிவு செய்­யும்­போது பிரச்­சினை முடி­வுக்கு வந்­து­வி­டும். இது இரண்டு தரப்­பா­ருக்­கும் தெரிந்த விட­ய­மா­கி­ னும் இந்­தப் பிரச்­சி­னையை முடித்­துக் கொள்­வ­தில் இரு­த­ரப்­பா­ரி­டை­யே­யும் தயக்­கம் இருப்­ப­து­தான் உண்மை. நாம் போரி­டு­வது காஷ்­மீர் மக்­க­ளுக்­காக அல்ல காஷ்­மீ­ருக்கா என்று இந்­தி­யத் தலைமை அமைச்­சர் மோடி தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்­க­ளில் பெரி­ய­ள­வி­லான முரண்­பா­டு­கள் புதைந்­தி­ருக்­கின்­றன. காஷ்­மீ­ரைப் பாகிஸ்­தா­னுக்­கு­ரி­யது ஆக்­கி­னால் முஸ்­லிம்­க­ளின் பர­வல் இந்­தி­யாவை அண்­மித்­து­வி­டும் எனும் அச்­ச­மும் அதற்­குள் அடங்­கு­கின்­றது. புல்­வாமா தாக்­கு­தல் மாத்­தி­ர­மன்றி இதற்கு முன்­ன­ரும் இந்­தி­யா­வுக்­குள் பல குண்­டுத் தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. 

இந்­தத் தாக்­கு­தல்­களை நடத்­து­ப­வர்­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் என்றே இந்­தி­யா­வும், இந்­திய ஊட­கங்­க­ளும் விளிக் கின்­றன. தமி­ழர்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டிய விடு­த­லைப் புலி­க­ளைப் பயங்­க­வா­தி­கள் என்று அர­சு­கள் குறிப்­பிட்­ட­தைப்­போ­லவே காஷ்­மீ­ரில் இந்­திய ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரா­கப் போரி­டு­கின்ற போரா­ளி­க­ளைத் தீவி­ர­வா­தி­கள் என்று இந்­திய அரசு சுட்­டு­ கின்­றது என்­றும் விமர்­ச­னங்­கள் உள்­ளன. காஷ்­மீர் குறித்த வாக்­கெ­டுப்பை அந்த மக்­கள் மத்­தி­யில் நடத்தி அதற்­குத் தீர்வு காணும் பட்­சத்­தில் இந்த நிலை தவிர்க்­கப்­ப­ட­லாம். இந்­தி­யாத் தலை­மை­க­ளுக்கு இந்த விட­யம் தெரி­யா­த­தால்ல. இது விட­யத்­தில் பாகிஸ்­தான் தரப்­பி­லும் தவ­று­கள் இருக்­கத்­தான் செய்­கின்­றன. தத்­த­மது கட்­டுப்­பாட்­டி­லுள்ள நிலங்­க­ளுக்­குத் தாமே பொறுப்பு என்­பது பாகிஸ்­தான் தரப்­பில் உண­ரப்­பட வேண்­டிய விட­ய­மாக இருக்­கி­றது. நாடு­கள் என்று எல்­லை­யி­டப்­பட்ட பின்­னர் அவ­ர­வர் எல்­லை­க­ளுக்­குள் நிலை­கொண்டு செயற்­ப­டு­கின்ற தீவி­ர­வா­தி­க­ளுக்கோ, போரா­ளி­க­ளுக்கோ நிலத்­தைக் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருப்­ப­வர்­களே பொறுப்பு என்­ப­தைப் பாகிஸ்­தான் தரப்பு உணர வேண்­டும். இந்த உணர்­தல் மூலம் இந்­தியா – பாகிஸ்­தான் என்­றி­ருக்­கிற காஷ்­மீர் பிரச்­சி­னையை மூன்­றா­வது தரப்­புப் பிரச்­சி­ னை­யாக நீட்­டா­மல் இந்த இரண்டு தரப்­பா­ரின் தகுந்த அணு­கு­மு­றை­யு­டன் முடி­வுக்­குக் கொண்டு வர முடி­யும். அத்­தோடு தற்­போது உரு­வம் மாறும் சூழ­லில் இருக்­கின்ற இந்த எல்­லைப் பிரச்­சி­னைக்­குப் பெரி­ய­தொரு கால நகர்வு இருக்­கி­றது என்­ப­தை­யும், அதுவே பாகிஸ்­தான் என்­கிற புதி­ய­தொரு நாட்­டைத் தோற்­று­வித்­தது என்­ப­தை­யும்­கூ­டப் புரிந்து கொள்ள வேண்­டும். 

 

பாகிஸ்­தா­னின் தோற்­றம்
பாகிஸ்­தான் உரு­வா­வ­தற்­கான குரல் 1940ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் திகதி முறைப்­படி எழுப்­பப்­பட்­டது. அன்­றைய தினம்­தான் லாகூ­ரில் முஸ்­லிம் லீக், ‘பாகிஸ்­தான் தீர்­மா­னம்’ என்­பதை முன்­மொ­ழிந்­தது. இதன்­படி, முழு­மை­யான சுதந்­தி­ர­மான நாடு முஸ்­லிம்­க­ளுக்­குத் தேவை என்று வெளிப்­ப­டை­யா­கக் கோரப்­பட்­டது. பிரிட்­டன் ஆட்­சி­யி­லி­ருந்து விடு­ப­டு­வது காந்­தி­யின் குறிக்­கோ­ளாக இருக்க, பாகிஸ்­தான் உரு­வான பிறகே சுதந்­தி­ரம் என்­ப­தில் ஜின்னா உறு­தி­யாக இருந்­தார். 1944ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதத்­தில் மகாத்மா காந்­தி­யும், ஜின்­னா­வும் பாகிஸ்­தான் கோரிக்கை பற்றி நடத்­திய பேச்­சு­கள் தோல்­வி­யில் முடிந்­தன. இரு­வ­ரி­டை­யே­யும் கருத்து வேறு­பா­டு­கள் நில­வின. 1946ஆம் ஆண்­டில் இந்­தி­யா­வுக்கு விடு­தலை வழங்­கு­வது தொடர்­பான பேச்­சுக்­களை நடத்­தப் பிரிட்­ட­னால் அனுப்­பப்­பட்ட அமைச்­சர்­க­ளின் தூதுக்­கு­ழு­வில் இருந்து வில­கிய முஸ்­லிம் லீக், போராட்­டங்­க­ளைத் தொடங்­கி­யது. 

இந்­தியா முழு­வ­தும் கல­கங்­கள் ஏற்­பட்­டன. அவை வன்­மு­றை­யாக உரு­வெ­டுத்து 1946ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16இலி­ருந்து 18ஆம் திக­திக்கு இடைப்­பட்ட காலத்­துக்­குள் கல­வ­ர­மாகி, படு­கொ­லை­களை அரங்­கேற்­றின. ‘கொல்­கத்தா பெருங்­கொ­லை­கள்’ என்று வர­லாற்­றில் பதி­வா­கின. இதில் கிட்­டத்­தட்ட 4ஆயி­ரம் மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர், ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் காய­ம­டைந்­த­னர், சுமார் ஒரு லட்­சம் மக்­கள் வீடு­களை இழந்­த­னர். இந்­தக் கல­வ­ரங்­கள் கிழக்கு வங்­கா­ளத்­தின் நவ­காளி மாவட்­டத்­தில் இருந்து பிஹார் வரை பர­வி­யது. ஜன­வரி 29ஆம் திகதி முஸ்­லிம் லீக் இந்­திய அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்­தது, தொடர்ந்து பஞ்­சா­பி­லும் வன்­மு­றை­கள் தொடங்­கின. சமகாலப்பகுதியில் இந்­தி­யாவை விட்டு வெளி­யே­று­வ­தா­கப் பிரிட்­டன் தலைமை மந்­திரி க்ளேமெண்ட் எட்லியின் அறி­விப்பு வௌியாகியது. இந்­தி­யா­வுக்கு விடு­தலை வழங்­கு­வது தொடர்­பான பேச்­சுக்­க­ளில் இருந்து வில­கிய முஸ்­லிம் லீக்­கின் போராட்­டங்­கள் நீடித்­தன. 

இதற்­கி­டை­யில் 1947ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் பிரிட்­ட­னி­ட­மி­ருந்து இந்­தியா விடு­பட்­டது. ஜூன் இரண்­டாம் திக­தி­யன்று இந்­தியா – பாகிஸ்­தான் பிரிப்பை அப்­போ­தைய பிரித்­தா­னிய அதி­காரி மவுண்ட்­பேட்­டன், இந்­தி­யத் தலை­வர்­க­ளி­டம் முன்­வைத்­தார். பிரித்­தா­னி­ ய­ரின் இந்­தப் பிரிப்பு முறை பிரித்­தா­னி­யர்­க­ளுக்­குச் சாத­க­மாக அமைக்­கப்­பட்­டதே உண்மை. தமது பிடி­யி­லி­ருந்து விடு­பட்ட பின்பு தம்­மால் இல­கு­வா­கக் கையா­ளக்­கூ­டிய விதத்­தில் அவர்­க­ளின் பிரிப்பு முறை இருந்­தது. உல­கி­லேயே முஸ்­லிம்­கள் அதி­கம் வாழும் நாடு­க­ளில் இரண்­டா­வது இடத்­தைப் பிடிக்­கின்ற இந்­தியா முழு­தை­யும் முஸ்­லிம்­க­ளின் பிடிக்­குள் அமிழ்த்­தி­வி­டா­மல் முஸ்­லிம்­க­ ளுக்­கென்று தனி­யான தேசத்­தைக் கொடுத்­து­வி­டும் உள்­நோக்­க­மும் பிரித்­தா­னி­யர்­க­ளின் பிரிப்­புக்­குள் கவ­னிக்­கப்­ப­டா­ம­லில்லை. நேரு, ஜின்னா மற்­றும் சீக்­கிய சமு­தாயப் பிர­தி­நிதி பல்­தேவ் சிங் ஆகி­யோர் ‘ஆல் இந்­திய றேடி­யோ’­வில் பிரி­வி­னைத் திட்­டம் பற்றி நாட்டு மக்­க­ளி­டம் எடுத்­து­ரைத்­த­னர். பாகிஸ்­தான் என்ற புதிய நாடு 1947ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி பிறந்­தது. இதில் மேற்­குப் பாகிஸ்­தான் (தற்­போ­துள்ள பாகிஸ்­தான்) கிழக்­குப் பாகிஸ்­தான் (தற்­போது பங்­க­ளா­தேஷ்) என்று இந்­தி­யா­வின் இரண்டு திசை­க­ளி­லும் இரண்டு பாகிஸ்­தான்­கள் தோன்­றின. கிழக்­குப் பாகிஸ்­தா­னில் வங்­க­மொழி பேசு­கின்ற முஸ்­லிம்­க­ளும், மேற்­குப் பாகிஸ்­தா­னில் உருது மொழி பேசு­கின்ற முஸ்­லிம்­க­ளும் செறிந்­தி­ருந்­த­னர். இந்த இரண்டு பாகிஸ்­தான்­க­ளுக்­கும் இடை­யி­லான இடை­வெளி கிட்­டத்­தட்ட 2ஆயி­ரத்து 200கிலோ மீற்­றர்­கள்.

பாகிஸ்­தான் பிரிந்த பின்­ன­ரான முரண்­பா­டு­கள்
இந்­தியா – பாகிஸ்­தான் சுதந்­தி­ரம் பெற்ற இரண்டு மாதங்­க­ளில், இரண்டு நாடு­க­ளுக்­கும் இடையே காஷ்­மீ­ருக்­கான முரண்­பாடு தோன்­றி­யது. இதற்­கி­டை­யில் மேற்­குப் பாகிஸ்­தா­னின் அதி­கா­ரத்­து­டன் முரண்­பட்டு நின்­றது கிழக்­குப் பாகிஸ்­தான். பாகிஸ்­தான் என்­கிற நாட்­டைப் பிரித்­த­ளித்த பின்­னர் இந்­தியா கிழக்­குப் பாகிஸ்­தா­னின் உள்­நாட்டு விட­யத்­தில் தலை­யிட்டு 1971ஆம் ஆண்­டில் கிழக்குப் பாகிஸ்­தானை பங்­க­ளா­தேஷ் என்ற புதிய நாடாக வரை­ய­றுத்­தது. அப்­போது இந்­தி­யா­வில் ஆட்­சி­ய­மைத்­தி­ருந்த இந்­திரா காந்­தி­யின் தலை­மை­யில் நடந்­தே­றிய இந்­தச் செய­லைப் பல­ரும் பாராட்­டி­னர். முஸ்­லிம்­க­ளுக்­குத் தனி­நாடு வழங்­கி­னார் என்ற பெருமை அவ­ருக்­குக் கிடைத்­தது. (ஈழத் தமி­ழர் பிரச்­சி­னை­யி­லும் தலை­யிட்டு அவர் தனி நாடு வழங்­கு­வார் என்ற வெப்­பி­ரா­யம் எழுந்­த­தற்­கும் இந்­தச் சம்­ப­வமே அடி­யிட்­டது) ஆனால், இந்­தி­யாவை அண்­மித்­தி­ருந்த மிகப்­பெ­ரிய முஸ்­லிம் தேசத்­தின் பரப்­பைக் குறைத்து, அது இந்­தி­யப் பிராந்­தி­யத்­தில் ஏற்­ப­டுத்­த­வி­ருக்­கின்ற செல்­வாக்­கைத் தணிக்­கவே இந்­தி­ரா­காந்தி இவ்­வா­றா­கக் கிழக்­குப் பாகிஸ்­தானை பங்­க­ளா­தேஷ் ஆக்­கி­னார் என்று அர­சி­யல் புலங்­கள் கருத்­து­ரைத்­ததே இறு­தி­யில் உண்­மை­யா­கி­யது. 

 

எப்­ப­டி­யி­ருப்­பி­னும் பாகிஸ்­தான் பிரிந்த கையோடு தோன்­றிய இந்­திய – பாகிஸ்­தான் எல்­லை­யாக அமை­கின்ற காஷ்­மீர்ப் பிரச்­சினை அப்­போ­தி­லி­ருந்து இன்­று­வரை தொட­ரவே செய்­கி­றது. அது ஆயு­தப் பெருக்­கங்­க­ளுக்கு ஏற்ப பூதா­கா­ர­மாகி வரு­கி­றது. போர் நிலத்­தைத் துண்­டா­டு­வது என்­ப­தாக மாத்­தி­ரம் அமைந்­தால் அத­னால் ஏற்­ப­டும் விளை­வு­கள் மனி­தர்­க­ளைக் கூறு­போ­டும் என்­ப­தைக் காலம் நிரூ­பித்­துக்­கொண்டே இருக்­கும்.

 

https://newuthayan.com/story/10/காஷ்மீர்-குளிர்-தேசத்து.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.