Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

மலைகளினூடாக அமைந்துள்ள வீதிகளில் பிரயாணம் தொடர்ந்தது. இயற்கை அழகினை இரசித்துக் கொண்டு செல்லும் போது மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. வீதிகளில் வாகனங்கள் மிகக்குறைவாக இருந்தது.( முக்கிய நகரங்களைத் தவிர பெரும்பாலன இடங்களில் வாகனங்களை மிகவும் குறைவாகவே காணக்கூடியதாக இருந்தது).

p9250032ig2.jpg

p9250033mw7.jpg

p9250034af3.jpg

p9250035jn7.jpg

p9250036vc1.jpg

Edited by Aravinthan

  • Replies 253
  • Views 31k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Arthur's Pass பூங்கா(Arthur's Pass National Park) மிகவும் பெரியது.

images1lu1.jpg

அதனைக் கடக்க கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் (மகிழுந்தில் செல்ல) எடுக்கும். Arthur's Passல் ஒரே ஒரு தேனீர் கடை(cafe) மட்டுமே இருந்தது.

2884985thewobblykeaarthjn7.jpg

அதன் அருகில் சுற்றுலாத்தகவல் நிலையம் அமைந்திருந்தது. காலை 8 மணிக்கு ஆரம்பித்த எனது பயணம், இவ்விடத்துக்கு வர கிட்டத்தட்ட காலை 10 மணியாகி விட்டது. அருகில் உணவகம் ஒன்றும் இல்லாததினால் இந்த தேனீர் கடையில் இருந்த சிறு உணவுகளை உண்டேன்.

சுற்றுலாப் பயணிகள் இங்கே ஒற்றை அடிப்பாதைகளினூடாக நடந்து சென்று நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பார்கள். சில நீர்வீழ்ச்சிகளைப் பார்க்க 20, 30 நிமிடங்கள் நடக்க வேண்டும். சிலவற்றைப்பார்க்க 1,2 மணித்தியாலம் எடுக்கும். சிலர் மலைகளில் ஏறுவதுமுண்டு. ஆனால் இதற்கு முழுனாளும் செலவிட வேண்டும். அன்று காலநிலை சரியில்லை. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. Arthur's Pass இல் இருந்து நான் அன்று இரவு தங்கும் Hokitikaவுக்கு செல்ல 2 மணித்தியாலம் இருக்கிறது. காலநிலை சரியில்லாததினாலும் (குடை ஒன்றும் கொண்டு வரவில்லை) மழையில் நனைய வேணும் என்பதினாலும் ( நீர்வீழ்ச்சிகளை அவுஸ்திரெலியாவில் உள்ள பல இடங்களிலும், நுவரெலியாவிலும் பார்த்ததினால் ஏன் தேவையில்லாமல் மழையில் நனைய வேணும்? ) நான் போகும் வழியில் உள்ள Greymouthஇல் இருந்து வடக்கே உள்ள அரை மணித்தியாலத்தில் வரும் Punakaikiயில் நேரத்தை செலவிட விரும்பினேன்.

art113200nt5.jpg

படத்தில் காணப்படும் பறவை இனத்தை இப்பகுதியில் காணலாம்.

Arthur's Passஇல் உள்ள நீர்வீழ்ச்சியின் புகைப்படம்(இணையத்தளத்தில் இருந்து எடுத்தது)

imageslm1.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

தேனீர்க்கடையில் இருந்து Greymouth நோக்கி மகிழூர்ந்து பிரயாணித்தது. மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது.

p9250038ni0.jpg

வளைந்து செல்லும் பாதைகளினூடாக வாகனம் சென்றது. அருகில் பள்ளத்தாக்குகள்.

p9250039kp4.jpg

p9250040bl5.jpg

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லா இருகிறது கட்டுரை மற்றும் புகைபடங்கள்,உண்மையாக நியுசிலாந்து வந்து ஒரு அமைதியான வாழ்கை நடத்துவதிற்கு நல்ல பிரதேசம் அவுஸ்ரெலியா ஒரு பிசி லைவ் எனக்கு அங்கே போயிருக்க தான் விருப்பம்,படித்து முடித்து விட்டு அங்கே போய் வேலை செய்யிற யோசன இருக்கு.உங்களுக்கு நியுசிலாந்தில் அதிகம் கவர்ந்த இடம் எது?

  • தொடங்கியவர்

நல்லா இருகிறது கட்டுரை மற்றும் புகைபடங்கள்,உண்மையாக நியுசிலாந்து வந்து ஒரு அமைதியான வாழ்கை நடத்துவதிற்கு நல்ல பிரதேசம் அவுஸ்ரெலியா ஒரு பிசி லைவ் எனக்கு அங்கே போயிருக்க தான் விருப்பம்,படித்து முடித்து விட்டு அங்கே போய் வேலை செய்யிற யோசன இருக்கு.உங்களுக்கு நியுசிலாந்தில் அதிகம் கவர்ந்த இடம் எது?

நான் சென்ற இடங்களில் அதிகம் பிடித்தவை வரிசைக்கிரமப்படி

1) Fox Glacier

2)Wanaka

3)Milford Sound

4)Te Anau Cave

5)Arthur's Pass

6)Punakaiki pancake rocks and blowholes

7)Queenstown

8)Chirstchurch

9)Mt Cook

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சென்ற இடங்களில் அதிகம் பிடித்தவை வரிசைக்கிரமப்படி

1) Fox Glacier

2)Wanaka

3)Milford Sound

4)Te Anau Cave

5)Arthur's Pass

6)Punakaiki pancake rocks and blowholes

7)Queenstown

8)Chirstchurch

9)Mt Cook

இது எல்லாம் சவுத் நியுசிலர் என்று நினைகிறேன் எனக்கு அங்கே பல இடங்கள் பரிட்சயம் இல்லை ஓகல்ன்ட் பக்கம் தான் எனக்கும் பல இடங்கள் தெறியும்.

  • தொடங்கியவர்

நான் சென்ற இடம் தெற்கு நியூசிலாந்தின் நிலப்பரப்பு. வட நியூசிலாந்துக்கு செல்லவில்லை. இப்பயணத்தொடர் தெற்கு நியூசிலாந்தைப் பற்றியதே. வடக்கு நியூசிலாந்துக்கு செல்ல சந்தர்ப்பம் கிடைத்தால் அதுபற்றியும் சொல்லுவேன்.

நல்ல பயணக்கட்டுரை நன்றி அரவிந்தன்

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த இலக்கியனுக்கு நன்றிகள்.

அருமையான படங்கள் நன்றி அரவிந்தன் அண்ணா :)

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன்!

உங்களது பயணக் கட்டுரைகள் மிக நன்றாக உள்ளன. படங்களும் அழகாக இருக்கின்றன.

வாழ்த்துக்கள்!!

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்த ஈழவன், மற்றும் சுவிக்கு நன்றிகள். நான் வனு-அற்று என்ற நாட்டில் சுற்றுலா சென்றதினை வாசிக்க பின்வரும் இணைப்பிற்கு செல்லவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=12184

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:) என்ன தான் இருந்தாலும் சுவிற்சர்லாந்த் மாதிரி வருமா
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. புள்ளி அரவிந்.

  • தொடங்கியவர்

வடிவேலு சொல்வது போல சுவிஸ்லாந்து உலகில் அழகிய இடங்களில் ஒன்று. நான் அந்நாட்டுக்கு ஒரு முறையும் செல்லவில்லை. பிற்காலத்தில் செல்ல விரும்பும் நாடுகளில் சுவிசும் ஒன்றுதான். நியூசிலாந்தும் அழகிய நாடு. இத்தொடரில் இன்னும் நியூசிலாந்தின் அழகிய படங்களைப் பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

மலை உச்சியில் இருந்து வரும் நீர்வீழ்ச்சி வீதியில் விழாமல், அருகில் உள்ள பள்ளத்தாக்கில் விழுமாறு அமைக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

p9250041tl5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சில நிமிடப்பயணத்தின் பின்பு Arthur passக் கடந்து Greymouth நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் போது புகைப்படக் கருவியினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். முகில்களும் மிக அருகில் காணக்கூடியதாக இருந்தது.

p9250042gi2.jpg

p9250043ob6.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மதியம் Greymouth அடைந்து வடக்கே உள்ள Punakaki நோக்கி பிரயாணம் செய்யும் போது கடலில் கற்பாறைகளைக் காணக்கூடியதாக இருந்தது. மழையும் தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

p9250045jc2.jpg

p9250061ut4.jpg

p9250060dl5.jpg

p9250058dv5.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

Punakaiki என்ற இடத்தை அடைத்ததும் மழை நன்றாகப் பெய்யத்தொடங்கியதினால் நீர் உட்புகாத ஆடையினை அருகில் உள்ள கடையில் வாங்கி அணிந்து கொண்டு Punakaiki Pancake rocks பார்க்க சென்றேன்.

இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்ட Punakaiki Pancake rocks பற்றிய ஒளிவடிவத்தைப் பார்க்க

  • தொடங்கியவர்

இங்கு Pancake வடிவிலான பாறைகள் இருக்கிறது.

p9250050cv7.jpg

p9250048qu5.jpg

p9250052cm9.jpg

punakaikiqu3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

அருகில் உள்ள பாறைகளின் அடியில் உள்ள துவாரத்தின்( Blowhole) வழியாக நீர் வந்து மேலே சென்று கீழ் விழுவதைக் காணலாம்.

punakaki2bi3.jpg

blowholes2vx0.jpg

blowholes3wf8.jpg

அழகிய செடி,கொடிகளுக்கு இடையில் அமைந்த இவ்விடத்தில் எடுக்கப்பட்ட தென்னிந்திய திரைப்படமான பிரியமான தோழியில் ஒரு பாடல் வருகிறது.

surgepoolfl3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மழையில் நனைந்ததினாலும் பசியினாலும் அருகில் உள்ள உணவகத்தில் விற்கப் பட்ட Soup க்குடித்து விட்டு பயணத்தை தொடங்கினேன். பயணத்தைத் தொடங்க முன்பு அருகில் எடுத்த புகைப்படங்கள்.

p9250046tk2.jpg

p9250055tr7.jpg

p9250056yz0.jpg

p9250057yw0.jpg

Edited by Aravinthan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கிட்டத்தட்ட நேரம் மாலை 4 மணி. இன்னும் அரை மணித்தியாலம் வந்த பாதையின் வழியாக (தெற்கை நோக்கி) பிரயாணம் செய்தால் Greymouth வரும். அதில் இருந்து மேலும் அரை மணித்தியாலம் சென்றால், அன்று இரவு தங்கும் விடுதி உள்ள Hokitika வரும். ஆனால் மாலை 6 மணிக்கு தான் அங்கே வருவதாக முன்பதிவு செய்திருந்தேன். பயண நேரத்தினைத் தவிர்த்து மேலதிகமாக ஒரு மணித்தியாலம் இருப்பதினால் Greymouth ல் உள்ள Shanty Townல் நேரத்தை செலவிட விரும்பினேன்.

id9036pic3pp3.png

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கே கட்டிடங்களுடன், மரம்செடிகளினூடாக நடந்து போகிறதற்கும் பாதைகள் அமைத்திருக்கிறார்கள்.

id9036pic1mp6.png

id9036pic2ir8.png

  • தொடங்கியவர்

இங்கு உள்ள நிலக்கரியில் ஒடும் புகையிரத வண்டியில் பயணம் செய்யலாம்.

id9011pic3uf4.jpg

பயணத்தையும், Shanty Townயும் இணையத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒளி,ஒலி வடிவத்தில் பார்வையிட

http://www.youtube.com/watch?v=81n3ww39yjw

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.