Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

  • தொடங்கியவர்

இப்புகையிரதப்பயணத்தின் முடிவில் (கிட்டத்தட்ட 10 நிமிடப் பயணம்) தங்கத்தினை வடித்தெடுக்கும் இடத்தினை அடைந்தோம். அங்கே சிறு பாத்திரத்தில் மண்களைத் தந்தார்கள். நாங்கள் தண்ணீரில் வடித்துக் கழுவும் போது சிறு சிறு தங்கங்களை பாத்திரத்தில் கண்டோம். அவற்றை சிறிய போத்தலில் அடைத்து எங்களுக்கு தந்தார்கள்

id9038pic2np9.png

Edited by Aravinthan

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Shanty Townல் இருந்து வெளிக்கிட்டு 6 மணியளவில் அன்று இரவு தங்க உள்ள Hokitika என்ற இடத்தை அடைந்தேன். விடுதியில் உடமைகளை வைத்து விட்டு Hokitika நகரைப் பார்க்க விரும்பினேன். விடுதியில் இரவு உணவை உண்ணுவதை விட வெளியிடங்களில் நல்ல சுவையான உணவை குறைந்த விலையில் உண்ணலாம். Hokitika நகரத்தில் 3,4 வீதிகள் மட்டுமே காணப்பட்டது. பொதுவாக தென் நியூசிலாந்தில் christchurch த் தவிர பெரும்பாலன இடங்களில் 3,4 வீதிகளே இருக்கிறது. கடைகளும் குறைவு. சனத்தொகையும் குறைவு. Hokitikaல் இரவில் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. உணவகத்தில் உண்டபின்பு கடற்கரையில் பொழுதினைப் போக்கலாம் என நினைத்தேன். தென் நியூசிலாந்தில் முக்கிய நகரங்களைத் தவிர இரவில் வீதிகளில் பிரயாணிக்கும் போது மின்சார ஒளியினைக் காணமுடியாது.

p9260070co5.jpg

  • தொடங்கியவர்

ஆங்கிலேயர்கள் விரும்பி உண்ணும் உணவகங்களே இங்கு பெரும்பாலும் காணப்பட்டன. ஒரிடத்தில் ஒரு இந்தியா உணவகமும் இருந்தது. அங்கு அன்றைய உணவை உண்டபின் அருகில் உள்ள கடற்கரையில் பொழுதைக் கழிக்கச் சென்றேன்.

hokitikaep9.jpg

westcoastdriftpicsk2.jpg

  • தொடங்கியவர்

2ம் நாள் மொத்தப் பிரயாண நேரம் 2 மணித்தியாலம்

Hokitika ல் இருந்து Franz Josef செல்ல 1.45 மணித்தியாலம் எடுக்கும்

i997353so9.gif

Franz Josef ல் இருந்து Fox Glacier செல்ல 0.15 நிமிடங்களே எடுக்கும்

r804873hb9.gif

நியூசிலாந்தில் உள்ள அழகான இயற்க்கை காட்டிகளை

எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!

அழகாக உள்ளது!!! :)

  • தொடங்கியவர்

நியூசிலாந்தில் உள்ள அழகான இயற்க்கை காட்டிகளை

எங்களுக்கு தந்ததில் மிக்க மகிழ்ச்சி!!!!

அழகாக உள்ளது!!! :lol:

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்

பெரிய, மெதுவாக ஒடும் குளிர்க்கட்டிகளைக் கொண்ட ஆற்றில் இருந்து உருவாகுவதினை Glacier என்று அழைக்கிறார்கள். பனிக்கட்டிகளினால் சூழப்பட்ட இவ் Glacier பூவியீர்ப்புக்கு ஏற்றவிதத்தில் ஒடும். Franz Josef , Fox Glacier அமைந்துள்ள இடத்தை West Coast glaciers என்று அழைக்கிறார்கள். 2600 மீட்டர் உயரத்திலிருந்து விழும் Fox Glacier 13 கிலோ மிட்டர் தூரத்துக்கு நீராக ஓடுகிறது. தற்பொழுது 85ம் ஆண்டுக்கு பிறகு நாள் ஒன்றுக்கு 1 மீட்டர் தூரத்தைக் குறைக்கிறது.

glacierfactpy6.gif

  • தொடங்கியவர்

காலை உணவை Hokitikaவில் உள்ள உணவகம் ஒன்றில் முடித்தபின்பு, Franz Josefக்கு செல்லும் 1.30 மணித்தியாலப் பிரயாணத்தில் என்னால் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சில.

p9260071sn1.jpg

p9260072ie4.jpg

p9260073lx9.jpg

p9260074aw7.jpg

p9260076ag8.jpg

p9260077lf8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

Hokitika வில் தங்கியிருந்த விடுதி உரிமையாளரிடம் உரையாடிய போது ஒரு நாளில் இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்க முடியாது. ஒன்றைப் பார்த்தால் மற்றதைப் பார்க்கத் தேவையில்லை. இரண்டிலும் Fox Glacier வே சிறந்தது. சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவைக் காண்பிக்கும் உதவியாளரின் உதவியுடன் Glacierல் சில பகுதிக்கு ஏறிச் சென்று பார்க்கலாம். உதவி இன்றி போக முடியாது. எனென்றால் பிரயாணம் ஆபத்தாக முடியும். ஆனால் விடுதி உரிமையாளார் இப்பிரயாணத்தில் நடக்க 2 மணித்தியாலம் எடுக்கும் என்றும், கால் வலிக்கும் என்றார். 2 மணித்தியாலம் என்பது Glacier இருக்கும் மலையின் அடிவாரத்துக்கு செல்ல 1 மணித்தியாலம் (இதற்கு சுற்றுலா காண்பிக்கும் உதவியாளர்கள் தேவையில்லை), ஏறுவதற்கு 1 மணித்தியாலம்( இதற்கு தேவை). அடிவாரம் வரை நடந்து செல்லுங்கள் என்றார். இதற்கு கட்டணமுமில்லை என்றார். ஏறுவதற்கு பதிலாக உலங்கு வானூர்தி அல்லது சிறிய விமானத்தில் ஏறி வானிலிருந்து இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்கலாம். வேறு மலைகளையும் பார்க்கலாம் .அத்துடன் ஒரு மலையின் ஒரு பகுதியில் 10 - 15 நிமிடத்துக்கு இறக்கிவிடுவார்கள் என்றும் சொன்னார். இதனால் Franz Josef நான் பார்க்கவில்லை.ஆனால்Fox Glacierக்கு செல்ல Franz Josef இன் ஊடாகப் பிரயாணிக்க வேண்டும். வீதியில் பிரயாணிக்கும் போது Franz Josef Glacier தெரியவில்லை.

Franz Josef உள்ள நகர விதியில் பிரயாணிக்கும் போது எடுத்த புகைப்படம்.

p9260078yn0.jpg

Franz Josef தொடர்ந்து Fox Glacier நோக்கி பிரயாணிக்கும் போது எடுத்த புகைப்படம்.

p9260079kl5.jpg

Edited by Aravinthan

  • கருத்துக்கள உறவுகள்

ஏறுவதற்கு பதிலாக உலங்கு வானூர்தி அல்லது சிறிய விமானத்தில் ஏறி வானிலிருந்து இரண்டையும்(Franz Josef , Fox Glacier) பார்க்கலாம்.

இதனை வாசிக்க உலங்கு வானூர்தியைக் கண்டு பதுங்கு குழியில் ஒழித்த யாபகம் தான் இப்பொழுது வருகிறது.

அருகில் உள்ள பாறைகளின் அடியில் உள்ள துவாரத்தின்( Blowhole) வழியாக நீர் வந்து மேலே சென்று கீழ் விழுவதைக் காணலாம்.

punakaki2bi3.jpg

இப்படி ஓரிடம் இலங்கையில் திக்வெல என்னும் இடத்தில்[தென் மாகாணம் அம்பாந்தோட்டைக்கு அருகில்] இருகின்றது பாடசாலை சுற்றுலா நேரம் சென்ற ஜாபகம்

Sri_Lanka_Rundreisen_Blow_Whole_Ostküste.jpg

Edited by ஈழவன்85

  • தொடங்கியவர்

இப்படி ஓரிடம் இலங்கையில் திக்வெல என்னும் இடத்தில்[தென் மாகாணம் அம்பாந்தோட்டைக்கு அருகில்] இருகின்றது பாடசாலை சுற்றுலா நேரம் சென்ற ஜாபகம்

தகவலுக்கு நன்றிகள் ஈழவன். இப்படியான Blow hole பல நாடுகளில் இருக்கிறது. சிட்னியில் இருந்து 2 மணித்தியாலம் தெற்கே சென்றால் வரும் கயாமா(Kiama) என்ற இடத்தில் எனது புகைப்படத்தினால் எடுக்கப் பட்ட Blowhole கீழே உள்ள படத்தில் காணலாம். அவுஸ்திரெலியாவில் பார்த்தவற்றை பிற்காலத்தில் எழுதும் போது மேலதிக விபரங்களை தருகிறேன்.

p3200037kp4.jpg

  • தொடங்கியவர்

Fox Glacier இல் உலங்கு வானூர்தியில் பறப்பது பற்றி முன்பே நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் நியூசிலாந்துப் பயணத்தின் 6 வது நாளில் Mount Cook என்ற இடத்தில் தான் உலங்கு வானூர்தியில் பறக்கவே விரும்பி இருந்தேன். Fox Glacierல் உதவியாளர்களின் உதவியுடன் நடக்கவே விரும்பி இருந்தேன். ஆனால் உலங்கு வானூர்திப் பிரயாணம் காலநிலை சீராற்ற காலத்தில் , மழைக்காலத்தில் நடைபெறுவதில்லை( முதல் நாள் மழை என்பதினால் நடைபெறவில்லை என்றும் சொல்லி இருந்தார்கள்) என்று சொன்னதனால், அன்று நல்ல காலநிலை என்பதினால் அன்று பறக்க முன்பதிவு செய்யச் சென்றேன்.

அன்று பயணிப்பவர்கள் அதிகமென்பதினால் மாலை 3 மணிக்கு பறக்கும் உலங்குவானூர்தியில் தான் இடம் கிடைத்தது. அப்பொழுது நேரம் 11 மணி. ஆனால் உதவியாளர்களின் உதவியுடன் Glacier இல் நடக்கும் நேரமும், உலங்குவானூர்திப் பயணமும் ஒரே நேரத்துக்குள் வருவதினால் நடப்பதைக் கைவிட்டேன். ஆனால் உதவியாளர்கள் இல்லாது Glacier மலையின் அடி வரை செல்ல கிட்டத்தட்ட 1 மணித்தியாலம் நடக்கும் பயணத்தை உலங்குவானூர்திப் பயணம் முடிய நடந்து செல்ல விரும்பினேன். உலங்கு வானுர்திப் பயணம் செல்ல இன்னும் 4 மணித்தியாலம் இருப்பதினால் மதிய உணவின் பின்பு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்று பார்வையிட்டேன். பூங்காவுக்கு சென்று பார்வையிட்டு வர கிட்டத்தட்ட அரை மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுத்தது.

0476kl5.jpg

minnehaha5kx4.jpg

மதிய உணவு உண்ட உணவகத்தின் படத்தினை நீங்கள் காண்கிறீர்கள்.

p9260083yw3.jpg

Fox Glacierல் 2,3 உணவகங்களே இருக்கிறது. கடைகள் மிகக்குறைவு.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பிரயாணித்த உலங்குவானுர்தி

p9260084mr3.jpg

உலங்கு வானூர்தி வந்த பின்பு, அதில் பிரயாணிக்கும் போது வானிலிருந்து என்னால் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.

p9260086jb7.jpg

p9260087np5.jpg

  • தொடங்கியவர்

மலை அடிவாரத்தில் தெரியும் Glacier

p9260089zs4.jpg

Glacier க்கு மேலாகப் பறக்கும் போது பார்த்தவை.

p9260090df7.jpg

p9260091yd2.jpg

  • தொடங்கியவர்

மலைகளுக்கு மேலாகப் பறக்கும் போது பார்த்த முகில்களும், மலையில் படிந்த பனிக்கட்டிகளும் Glacierயும் நான் இணைத்த புகைப்படங்களில் இருந்து காணலாம்.

p9260092eu7.jpg

p9260093nk9.jpg

p9260094pj7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அரவிந்தன் அருமை கலை உணர்வுடன் படைக்கபட்ட படைப்பு. :P

  • தொடங்கியவர்

உங்கள் கருத்துக்கு நன்றிகள் புத்தன்.

  • தொடங்கியவர்

தொடர்ந்து உலங்கு வானூர்தியில் பயணிக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள்.

p9260095vg6.jpg

p9260096bn7.jpg

  • தொடங்கியவர்

p9260097yl5.jpg

p9260098zs8.jpg

p9260099tt8.jpg

  • தொடங்கியவர்

புகைப்படத்தில் பார்ப்பதை விட நேரில் அழகாக மலைகள் காட்சியளித்தன. வேறு ஒரு உலகத்தில் இருந்தது போல ஒரு உணர்வு ஏற்பட்டது.

p9260100gj6.jpg

p9260101dn2.jpg

p9260102ts4.jpg

  • தொடங்கியவர்

நான் பயணித்த உலங்குவானூர்தியில் விமானியுடன், அவருக்கு துணையாக இன்னொருவரும் பயணித்தார்கள். இவ்வுலங்குவானூர்தியில் விமானி உட்பட 6 பேர் பயணிக்கலாம். பயணத்தின் போது விமானியும், துணையாக வந்தவரும் நாங்கள் பார்த்த மலைகள், நீர் வீழ்ச்சிகள் பற்றிய விளக்கங்களைத் தந்தார்கள். தென் நியூசிலாந்தின் மேற்குப்பகுதியில் உள்ள பெரும்பாலான மலைகளையும் காண்பித்தார்கள். பயணத்தின் போது மலையின் ஒருபகுதியில் உலங்கு வானூர்தி வந்து இறங்கியது. மலையின் எல்லா இடங்களிலும் நடப்பது ஆபத்தைத் தரும். எனென்றால் நாங்கள் நடக்கும் போது பனிக்கட்டிக்குள் புதைந்துவிடக்கூடிய அபாயமும் இருக்கிறது. அவர்கள் சொன்ன இடத்தில் நடந்து பார்த்தோம்.

p9260107iy5.jpg

செப்டம்பர் மாத இறுதிக் கிழமைகளில் தான் நான் நியூசிலாந்து சென்றேன். அக்காலத்தில் நியூசிலாந்தில் குளிர் அதிகம். மலைப் பிரதேசம் என்பதினால் இன்னும் குளிர் கூட. ஆனால் உலங்குவானூர்தியில் இருந்து மலையில் இறக்கிய பகுதிக்கு சூரிய வெளிச்சம் காரணமாக குளிர் இருக்கவில்லை. உலங்குவானூர்திப் பயணத்தை பதிவு செய்யும் போது, மலை உச்சியில் இருக்கும் போது குளிர்ச்சியான கண்ணாடியை அணிந்து வந்தால் நல்லது என்று சொன்னார்கள். சூரியகதிர்கள் மலையில் உள்ள பனிக்கட்டியில் விழுவதினால் கண்கள் சிலவேளை கூசும் என்பதினால் அவ்வாறு சொன்னார்கள்.

franzjosef02nk6.jpg

  • தொடங்கியவர்

நாங்கள் நடக்கும் போது இன்னுமொரு உலங்குவானூர்தியில் இருந்தும் பயணிகள் வந்தார்கள்.

p9260110be8.jpg

அருமையான படங்கள்..உங்களுக்கு நன்றாக புகைப்படமும் எடுக்க வருகின்றது. எனக்கு நியீசிலாந்தில் வெலிங்க்டனை விட ஓக்லாந்தே பிடிக்கும்... :lol:

  • தொடங்கியவர்

அருமையான படங்கள்..உங்களுக்கு நன்றாக புகைப்படமும் எடுக்க வருகின்றது. எனக்கு நியீசிலாந்தில் வெலிங்க்டனை விட ஓக்லாந்தே பிடிக்கும்... :rolleyes:

உங்களின் கருத்துக்கு நன்றிகள் தூயா. நீங்கள் சொன்ன ஒக்லாண்ட், வெலிங்டன் வட நியூசிலாந்தில் அமைந்துள்ளது. ஆனால் சுற்றுலாப்பயணிகளில் 90 வீதமானவர்கள் விரும்பிச்செல்லும் இடம் தென் நியூசிலாந்து. தென் நியூசிலாந்தில் அதிகம் பேர் செல்லும் முக்கிய இடங்களுக்குத் தான் நான் சென்றிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.