Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநர் கால அவகாசம் கோர ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது ; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு ஆளுநர் கால அவகாசம் கோர  ஜெனீவா செல்வது மன வேதனையளிக்கிறது  ; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிர்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

alunar1.jpg

 ஆனாலும் ஆளுநர் ஜெனீவா செல்வதற்கு முன்னர் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களது உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு அப்பால் அவர் ஜெனீவா சென்று நியாயத்தை பேசவேண்டும். நீதியை பேசவேண்டும். எனவும் கேட்டுள்ளனர். 

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின் தலைவி யோகராசா கலாரஞ்சினி தலமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தியிருந்தனர். 

இதன்போது வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஜெனீவாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் செல்லும் குழுவில் இடம்பெற்றிருப்பது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

 இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஆளுநர் ஜெனீவா செல்வதாக அறிந்திருக்கிறோம். அவரை சந்திக்க முயற்சித்தோம். ஆனால் அவர் கொ ழும்பில் இருப்பதால் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆளுநர் போரின் வலியை சுமக்காத போதும் ஒரு தமிழராக அரசாங்கத்தின் சார்பில் ஜெனீவா செல்வது எமக்கு வருத்தமளிக்கிறது, அதிர்ச்சியளிக்கிறது. 

இன அழிப்பிலிருந்து எஞ்சியவர்களை நாங்கள் கொண்டு சென்று ஒப்படைத்தோம். அவர்களையே நாங்கள் இன்றளவும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் ஆளுநர் எமக்காக பேசவேண்டியவர். அந்தவகையில் ஆளுநருடைய ஜெனீவா விஜயம் எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. 

ஆனாலும் ஜெனீவா செல்வதற்கு முன்னர் ஆளுநர் எங்களை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். அதன் ஊடாக எங்களுடைய உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கமைய ஜெனீவாவில் அவர் நீதியை பேசவேண்டும் நியாயத்தை பேசவேண்டும். என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு என்றார், 

 

http://www.virakesari.lk/article/51344

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.