Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா வில் வடக்கு ஆளுநர் தமிழர் நலன் பேசமுடியும் என்பது கேள்விக்குறியே ;சீ.வீ.கே. சிவஞானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ. நா வில் வடக்கு ஆளுநர்  தமிழர் நலன் பேசமுடியும் என்பது கேள்விக்குறியே ;சீ.வீ.கே. சிவஞானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தமிழர் நலன் சார்ந்து எந்த அளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாக தோன்றுகிறது என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

c.v.jpg

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டம் தொடர்பாக சீ.வீ.கே.சிவஞானம் ஆளுநர் சுரேன் ராகவனுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

இந்த கூட்டம் தொடர்பாக எமக்கும் ஏனைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் தங்கள் செயலாளர் எழுதிய கடிதம் சார்பாக எமது அங்கத்தவர்களுடன் ஆராயப்பட்டது.

தமிழ் இனத்தின் அக்கறைகள் தொடர்பாக இனிமேல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பேசவே முடியாது என்று பகிரங்கமாகவே இந்த நாட்டின் ஜனாதிபதி கூறிவருகிறார்.

இந்நிலையில் அவரது பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ள தாங்கள் தமிழர் நலன் சார்ந்து எந்த அளவுக்கு அங்கு பேசமுடியும் என்பது கேள்விக்குறியாகவே தோன்றுகிறது.

எவ்வாறாயினும் தங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் எமது கருத்தை மிகச் சுருக்கமாக முன்வைக்கின்றோம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை இலங்கை அரசாங்கத்தின் இணை அணுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலினால் நிறைவேற்றப்பட்ட 2015ஆம் ஆண்டின் 30/1 ஆம் இலக்கம் மற்றும் 2017ஆம் ஆண்டின் 34/1 தீர்மானங்கள் அப்படியே முழுமையாகவும் துரிதமாகவும் இலங்கை அரசாங்கம் அமுல் செய்வதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் வலியுறுத்தி உறுதிப்படுத்துதல் வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.virakesari.lk/article/51775

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.