Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் வசமிருந்த பெருந்தொகையான தங்கத்தை தேடி அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG_ORG_1554271848842.jpeg

விடுதலைப் புலிகள் அமைப்பினர் வசமிருந்த, பெருந்தொகையான தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவு பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
 
 
விடுதலைப் புலிகளின் ‘ஈழம் வங்கி’ குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது, வங்கியிலிருந்த பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
 
 
 
தற்போது முல்லைத்தீவு கூட்டுறவு திணைக்களத்துக்கு உரித்துடைய குறித்த இடத்தில், பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
அகழ்வுப் பணிகளில், முல்லைத்தீவு பகுதி இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிரடிப் படையினர், மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
IMG_ORG_1554271968429.jpeg
IMG_ORG_1554271975327.jpeg
IMG_ORG_1554271979062.jpeg
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு இரகசியத் தகவல் கிடைக்கிறதும் பிறகு தோண்டி பாக்கிறதுமே வேலையாப்போச்சு!
இது வரை தோண்டி எடுத்தது எல்லாம் ஒளிச்சிட்டாங்களோ?
இவங்கள வைச்சு காமடி பண்றாங்களோ யாரும்?!

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலங்களில் வறட்சியால் பாதிக்கபடும் மாவட்டங்களில் முல்லைத்தீவும் அதிகமாகப் பாதிக்கப்படுவதுண்டு, அங்கு மழைநீரைச் சேமிக்க, குளங்களை வெட்டிவைத்தால் பாதிப்புகள் குறைவடையும். குளங்கள் வெட்ட இன்றைய காலத்தில் நிறையச் செலவாகும் ஆகையால், செலவின்றிக் குளம்வெட்ட யாரோ அதி புத்திசாலி தனது மூளையை விவேகத்தோடு பாவித்துள்ளான். 😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் வசமிருந்த பெருந்தொகையான தங்கத்தை தேடிய அகழ்வுப் பணி.. முடிவு இது தான்.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்துஐயன்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகள் வசமிருந்த
பெருந்தொகையான தங்க நகைகளை தேடும் பணி நேற்று முன் தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இறுதியில் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

முல்லைத்தீவு, கூட்டுறவு திணைக்களத்திற்கு உரிய இடத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுடன் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் ஈழம் வங்கி குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்துள்ளதுடன், இறுதி யுத்தத்தின் போது வங்கியில் இருந்த பல கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் வங்கி அமைந்திருந்த இடத்தில் புதைக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழ்வு பணியானது சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனரக இயந்திரங்களின் உதவியுடன் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் அங்கிருந்து மீட்கப்படாத நிலையில் தேடுதல் நடவடிக்கை முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

https://www.madawalaenews.com/2019/04/ithu.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.