Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியை வாட்டியெடுக்கின்றது வறட்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது நிலவி  வரும் கடும் வெப்பம் காரணமாக கிளிநொச்சியில்  பல பிரதேசங்கள் கடும் வறட்சிக்கு முகம் கொடுத்துள்ளன.

மக்கள் குடி நீர்  உள்ளிட்ட நீர்த்  தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதில் பெரும்  சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.   சிறியளவிலான நீர்த்தேக்கங்களில்  நீர் வற்றியயதனால் கால்நடைகளும் குடிநீரின்றி அவதியுற்றுள்ளன.

DSC00227.JPG

அந்த  வகையில் கிளிநொச்சி  பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவர்  பிரிவுகளில் 15 கிராம அலுவலர் பிரிவுகள் வறட்சியினால்  பாதிக்கப்பட்டுள்ளதாக பூநகரி பிரதேச செயலர் கிருஸ்னேந்திரன்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

DSC00220.JPG

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் பூநகரி பிரதேசத்தில் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாவட்டச் செலயகம் ஊடாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

DSC00203.JPG

அத்தோடு  பூநகரி பிரதேச  சபை தங்களுடைய வழமையான செயற்பாட்டில்  குடிநீர் விநியோகித்தை மேற்கொண்டு வருகின்றனர் இது பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு  பகுதியின் தேவையினையே பூர்த்தி செய்கிறது.எனவும் தெரிவித்தார்.

மக்கள் தங்களுக்கு  தேவையான குடி நீர் மற்றும் ஏனைய த் தேவைகளுக்கு  நீரைப் பெற்றுக்கொள்ள முடியாத  நிலையில்  காணப்படுகின்றனர்.

DSC00191.JPG

 பூநகரி பிரதேச சபை வாரத்தில் இரண்டு தடவைகள் குடிநீரை விநியோகிக்கிறது. அதுவும் ஒரு குடும்பத்திற்கு 60 லீற்றர் வீதம் இதற்காக லீற்றர் ஒன்றுக்கு ஐம்பது சதம் பிரதேச சபைக்கு பொது மக்களால் வழங்கப்படுகிறது. 

இதேவேளை வசதியுள்ள பொது மக்கள் தனியாரிடம் இருந்து லீற்றர் ஒன்றுக்கு ஒரு ரூபா செலுத்தி  தங்களது நீர்த் தேவையினை பூர்த்தி செய்து வருகின்றனர் என பூநகரி பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

http://www.virakesari.lk/article/54101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.