Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Arrest-1.jpg

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் அதிரடி கைது!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்புக்களின் போது 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், அளுத்கம – தர்கா நகரில் ஆறு பேரும், பேருவளை – கங்காவங்கொட பகுதியில் 5 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். அத்தோடு வரக்காபொலயில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த வேன்ரக வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனுடன் கட்டான – கட்டுவாபிட்டிய பகுதியில் ஆறு பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்புக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படும் சந்தேகத்திற்கிடமான பாரவூர்தி மற்றும் வேன் ரக வாகனம் குறித்து தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ள பொலிஸ் நிலையங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/விசேட-சுற்றிவளைப்பு-நடவட/

  • கருத்துக்கள உறவுகள்

வரகாபொலயில் வான் ஒன்றுடன் இருவர் கைது – 4 வோக்கி டோக்கிகள் மீட்பு…

April 24, 2019

1 Min Read

வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வான் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.  சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH – 3779 என்ற வான் வரகாபொல காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  அதேநேரம் இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட வீட்டில் காவற்துறையினர், விசேட அதிரடி படையினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கிருந்து மோட்டார் சைக்கிளொன்றும், 4 வோக்கி டோக்கிக கருவிகளும், 3 சார்ஜர்கள் என்பன கிடைக்கப்பெற்றதாகப் காவற்துறை ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/119188/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.