Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பு தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவரின் அடையாளம் தெரிந்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
மட்டக்களப்பு சியோன் தேவாலய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர்.

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆகியோர் இன்று சனிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளனர்.

சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகுபடத்தின் காப்புரிமை Getty Images Image caption சியோன் தேவாலயத்தில் குண்டுவெடிப்பு நடந்த பிறகு

காத்தான்குடியைச் சேர்ந்த மேற்படி தற்கொலைக் குண்டுதாரி, கல்முனை முதலாம் பிரிவில் திருமணம் செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காத்தான்குடி போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படும் தற்கொலைக் குண்டுதாரியின் தயாருடன், குண்டுதாரியின் சகோதரர் மற்றும் மாமா ஆகியோரை, இன்று காலை காத்தான்குடி பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரியான உதவிப் போலீஸ் பரிசோதகர் முகம்மட் மற்றும் சார்ஜன் முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள, தற்கொலைக் குண்டுதாரியின் தலையை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் சென்றனர்.

இதன்போது, சட்ட மருத்துவ அதிகாரி ஜயசூரிய முன்னிலையில், தற்கெலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தயார், சகோதரர் மற்றும் மாமா ஆகியோர் சந்தேகத்துக்கு இடமின்றி முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என அடையாளம் காட்டினர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-48077173

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.