Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக புதிய சட்டம் தேவை - பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

நாடு கடந்த பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாத செயற்பாடுகள் எமது நாட்டில் இடம்பெற முன்னர் அவற்றை தடுக்க முடியாமல் போனமையானதும் அவர்களுக்கு  எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது போனமையும் எமது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இவை தொடர்பான புதிய சட்டங்களை இயற்ற முடியாமல் போனமையே  காரணமாகும் எனவும் இப்போது சட்டத்தை திருத்த ஒரு தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்போதாவது அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுத்து  புதிய சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

RANIL.jpg 

பிரதமர் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் இந்த விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரகாலம் கடந்துள்ள நிலையில் கருதினால் மெல்கம்  ரஞ்சித் ஆண்டகையின் அழைப்பின் பெயரில் விசேட பிரார்த்தனை வழிபாட்டுக்காக கொச்சிக்கடை புனித அந்தோனியார் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தேன். 

இந்த தாக்குதல் சம்வத்துடன் தொடர்புட்ட சந்தேகநபர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் மூலமாக பல இரகசிய தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜிஹாதி பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்திக்கொண்டு செயற்படும் இவர்களை அடையாளங்கண்டு  அவர்களை நீதியின் முன்னாள் நிறுத்தப்படுவதுடன் வெகு விரைவில் இந்த பயங்கரவாத செயற்பாடுகளை முழுமையாக துடைத்தெரியவும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இது சம்பந்தமாக சகல தரப்பையும் நாம் வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கத்தின் சகல தரப்பினருக்கும் இந்த அறிவித்தலை நாம் விடுத்துள்ளோம். ஜனாதிபதிக்கும்  அமைச்சரவைக்கும் கூட இது குறித்து முழுமையாக அறியப்படுத்தியுள்ளோம். மீண்டும் ஒருமுறை  30 ஆண்டுகளாக யுத்தத்தை நடத்த நாம் ஒருபோதும் எதிர்ப்பார்க்கவில்லை. 

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கடந்த வாரத்தில் இருந்து மும்முரமாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்தில் குற்றவாளிகளுடன் தொடர்புடைய தேடுதல் வேட்டை இடம்பெற ஆரம்பித்துள்ளதுடன் தெமட்டகொட பகுதியில் இதனுடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதன்போது அதிரடி படையின் மூன்று அதிகாரிகளையும் நாம் இழக்க நேர்ந்தது. அதேபோல் இராணுவத்தின் ஒருவரையும் இந்த தேடுதல் வேட்டையில் நாம் பறிகொடுக்க நேர்ந்தது. அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையுன்று சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது பிரதேசங்களில் சில வீடுகளில் ஜிஹாதி பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உடைகள் கைப்பற்றப்பட்டது. இது அப்பகுதி முஸ்லிம் மக்களின் மூலமாக இரகசியமாக எமது தரப்புக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது.

இதன்போது ஒரு வீட்டில்  ஆறு தற்கொலை தாரிகளும் அவர்களின் குழந்தைகளும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. இன்னும் சிலர் படுகாயமடைனது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்போது அவர்களையும் அடையாளம்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும் வனாத்தவில்  பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது கிடைக்கப்பெற்ற ஆயுதங்களில் ரி 56 ரக துப்பாக்கியும் உள்ளது. கம்பளை பிரதேசத்திலும் முக்கிய தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போதும் இந்த செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  இந்த தாக்குதல் நன்றாக திடமிடப்பட்ட ஒரு குழுவினாலேயே நடத்தப்பட்டுள்ளது. இவர்கள் சாதாரண முஸ்லிம் மக்கள் அல்ல. அடிப்படைவாத கொள்கையில் உள்ள ஒரு குழுவே இதனை செய்துள்ளது என்பதை கூறிக்கொள்ள வேண்டும். வவுணதீவு பொலிசார் மீதான தாக்குதல் இவர்களின் முதல் தாக்குதல் என பொலிசார் கண்டறிந்துள்ளனர். 

கடந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி இந்த குற்றம் இடம்பெற்றது. அதன்பின்னர் மாவனல்லை பிரதேசத்தில் பெளத்த சிலைகள் உடைக்கப்பட்டதுன், கபீர் ஹசிம் அமைச்சரின் செயலாளரை கொள்ளவும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. வனாத்தவில் பிரதேசத்தில் இவர்களின் ஆயுத களஞ்சியமும் இருந்துள்ளது. இவற்றை ஆரம்பமாக கொண்டு பின்னர் பாரிய நாசகார செயற்பாட்டினை செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலசில அமைப்புகளின் ஆசிரியர்கள்  என கூறிக்கொண்டு இந்த நாட்டில் செயற்படும் பலரது பெயர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை அனைவரையும் நாட்டை விட்டி வெளியேற்றும் நடவடிக்கையை முஸ்லிம் விவகார அமைச்சும் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு முன்னெடுத்து வருகின்றது. இவர்களை வெளியேற்றும் சட்ட முறையிலான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் அதற்கான வரைபுகளையும் தயாரித்து வருகின்றது. 

எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்புகளை நாம் மதிக்கின்றோம். இவர்களுக்கு எந்த அழுத்தங்களையும் கொடுக்காதிருக்க நான் மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் பயங்கரவாதத்தை ஒழிக்க செயற்பட வேண்டும்.

சர்வதேச புலனாய்வு துறையுடன் தகவல்களை பகிர்ந்துகொண்டு வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இப்போதும் இந்த வேலைத்திட்டம் குறித்த முன்னேற்ற அறிக்கையை நாம் பெற்றுகொண்டுள்ளோம். அடுத்த நகர்வுகள் குறித்தும் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் வேலைத்திட்டங்களை வெகு விரைவில் முடிவுக்கு கொண்டுவரவும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/54899

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.