Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 3 மீன் வளர்த்தல்

Featured Replies

2009ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலங்களில், முல்லைத்தீவு மாவட்டத் தமிழ் மீனவர்களது வாழ்வாதாரம் போர் நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் முடங்கிக் காணப்பட்டன. ஆனால், போர் நிறைவடைந்த இ(அ)க்காலப் பகுதியில், முல்லை மாவட்ட தமிழ் மீனவர்கள், சற்றுத் தலை நிமிரலாம் என உள்ளூர எண்ணினர்; நிம்மதி மூச்சு விட்டார்கள்.   

ஆனால், நாட்டின் பிற பாகங்களிலிருந்து, பிற மாவட்ட, பிற இனங்களைச் சேர்ந்த மீனவர்களது வருகை, சடுதியாக அதிகரித்தது. அவர்கள், குறித்த மாவட்டத்திலுள்ள நீரியல் வளத்திணைக்களத்தினதோ, உள்ளூர் மீனவ அமைப்புகளினதோ சிபாரிசுகள் இன்றி, கொழும்பில் இருந்து நேரடியாகக் கிடைக்கப் பெற்ற (அரசின் ஆசீர்வாத்தோடு) அனுமதிப் பத்திரங்களுடனேயே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.   

அவர்களது கட‌ற்றொழில் சார் நடவடிக்கைகள், சட்ட ரீதியற்ற வகையில் அமைந்து, தமிழ் மீனவர்களது பொருளாதாரத்தைத் தவிடு பொடியாக்கி விட்டது; கடல்வளம் சூறையாடப்பட்டது.   

இவ்வாறு பிற மாவட்டங்களில் இருந்த வந்த மீனவர்கள், கடற்கரை ஓரங்களிலும் வீதி ஓரங்களிலும் வாடிகள் அமைந்து, தொழில் புரிந்து வந்தனர். இது வடக்கு, கிழக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும்; ஆனால், முல்லைத்தீவு மாவட்டமே பெரிதும் பாதிக்கப்பட்டது.   

இவ்வாறாக, முல்லைத்தீவில் சாலை என்ற இடத்தில் மட்டும் சுமார் 2,500 முஸ்லிம், சிங்கள மீனவர்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். இந்நிலையில், ஏப்ரல் 21ஆம் திகதி அசம்பாவிதங்களை அடுத்து, அவர்கள் முல்லைத்தீவிலிருந்து ஓட்டமெடுத்து வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிழையாக-வழிநடத்தும்-மதவாதமும்-இனவாதமும்/91-232842

  • தொடங்கியவர்

அலங்கார மீன் வளர்ப்பு  

ஒரு சுய தொழில் அடிப்படையில் இல்லை ஒரு சில குடும்பங்களாக இணைத்து இந்த மீன் வளர்ப்பை செய்யலாம். அது சந்தைப்படுத்தி ஒரு சுய தொழில் வருவாயை செய்யலாம். 

நன்னீர் மீன்கள், குட்டி ஈனுபவை மற்றும் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்பவை என இரு வகைப்படும். குட்டியிட்டு இனப்பெருக்கம் செய்பவைகளில் கப்பி, மொலி, பிளாட்டி, ஸ்வோர்ட்டேய்ஸ் ஆகியவைகள் சாதாரணமாகக் கண்ணாடித் தொட்டியை அலங்கரிப்பவை.

கப்பி: ஆண் மீன்கள் 2.5 செ.மீ. நீளமும், பெண் மீன்கள் 5 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 7.5-8.5 கார அமில நிலையும் வளர்ப்பிற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலையும் (26-30 டிகிரி செ.கி) ஏற்றவை. 4-6 வார காலத்திற்கு ஒருமுறை 50 குட்டிகளை இடுகின்றன.

மோலி: கறுப்பு, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சாக்லேட் நிறமுடையவை. 9 செ.மீ. நீளமும், 10-15 கிராம் எடை வரையிலும் வளர்பவை. 5 வாரத்திற்கு ஒரு முறை 250 குட்டிகளை இடும். ஆண் மீன்களின் முதுகுத் துடுப்பு நிமிர்ந்து விசிறி போல் காணப்படும்.

பிளாட்டி: பல்வேறு வண்ண வகையினை உடையது. ஆண் மீன்கள் 4 செ.மீ. வரையிலும், பெண் மீன்கள் 5 செ.மீ. வரையிலும் 3-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 50-75 குட்டிகளை இடும். 10 பெண் சினை மீன்களுக்கு ஒரு ஆண் மீன் என இருப்பு செய்ய வேண்டும்.

ஸ்வோர்ட்டெய்ல்: ஆண் மீன்கள் 8 செ.மீ. வரையிலும் பெண் மீன்கள் 12 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 5 பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் போதுமானது. ஆண்மீனின் வால் துடுப்பு வீரனின்வாள் போல் நீண்டு வனப்புடன் காணப்படும்.

எல்லா வகையான குட்டியிடும் அலங்கார மீன்களுக்கும் நீர்ப்பாசிகள் மறைவிடமாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகின்றன. புழு, பூச்சி போன்ற உயிர் உணவுகளையே மீன்கள் விரும்பி உண்கின்றன. எனவே சினை மீன்களின் இனப்பெருக்க உணர்ச்சியினைத் தூண்ட புரதம் நிறைந்த உணவுகளையும் தகுந்த மறைவிடங்களையும் அளித்து குட்டிகளைப் பாதுகாத்து உற்பத்தி செய்ய வேண்டும்.

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்களில் கோய் கெண்டை, செவ்வால் சுறா, பொன்மீன், ரோசி பாரிப், டைகர் பாரிப், டெட்ரா, கவுராபி, பைட்டர், ராமிரன் நீல சிக்ளிட், அவுரோங்கல், ஏஞ்சல், ஆஸ்கார் ஆகியவை கண்ணாடித் தொட்டிகளை அலங்கரித்து கண்களுக்கு விருந்தூட்டுபவை. வியாபார ரீதியில் வளர்த்து உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஏற்றவை.


பொன்மீன்: சிவப்பு ஒராண்டா, சிங்கத்தலை, முட்டைக்கண் முத்துச்செதில், காரிகோ, கருப்புமூர் போன்ற நூற்றுக்கணக்கான வகையான பொன்மீன்கள் உள்ளன. இம்மீன்கள் தாவர மற்றும் புழுபூச்சி போன்ற மாமிச உணவுகளை உண்டு 4 மாதகாலத்தில் 20 முதல் 25 கிராம் உடல் எடையினைப்பெறும். 5 முதல் 6 மாத காலத்தில் பருவ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. காரத்தன்மையுடையதும் (7.5 – 8.5) மிதமான வெப்பநீரும் (25-28.5 டிகிரி செ.கி), மித கடின நீரும் (150-250 மி.கி/லி) பொன் மீனுக்கு ஏற்ற நீர்ச்சூழல் குணங்கள் 25 கிராம் எடையுள்ள பொன்மீன் கிட்டத்தட்ட 750 ஒட்டும் தன்மையுள்ள முட்டைகளை நீர்ப்பாசிகளில் இடுகின்றன.

சிறிய நூல் போன்ற நுண் குஞ்சுகள் 65-72 மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. பொன்மீன்களைத் தொட்டிகளில் தனியாகத்தான் வளர்க்க வேண்டும்.

-நன்றி–டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.
-தகவல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை


பொன் மீன் வளர்த்தல் பற்றிய காணொளி - தமிழில் 
 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வடமாகாணம் 40% கடல் சார்ந்த கரைப்பரப்பை கொண்டது. 

இதனுடன், பல சிறு தீவுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் கடல் சார்ந்த நீர்ப்பரப்புக்களை கொண்டது. மீன்பிடிப்பிற்கு, மீன் வளர்ப்பதற்கு தமிழர் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த சூழல் உதவும்.  

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தகவல்படி 40% மீனை எமது வடநிலம் கொண்டிருந்தது 

This ADB report states “In 1983, prior to escalation of the conflict, the Northern Province, which has 40% of the nation’s coastal belt, accounted for 40% of its marine fish catch”. Data from the Ministry of Fisheries for 1981 which I found in a report by the United Nations’ Food and Agriculture Organisation (FAO) shows that in that year Jaffna District (until 1984 Killinochchi was part of Jaffna District) contributed 25% of Sri Lanka’s coastal fish production, with Mullaitivu and Mannar contributing a further 13.9%.

 

FisheryAreas.png

 

புதீய நவீனமுறைகளை மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து மீன்வளர்ப்பை கொண்டு செல்லலாம். 

1 கடல்மீன் வெள்ளரி ( sea cucumber)   : 2017ல் 28.75 துடிக் மெட்ரிக் தொன்  அளவில் இந்த வகையான மீனை மன்னர், கிளிநொச்சி மற்றும் யாழில் தனிப்பட்ட நிறுவனம் வளர்த்துள்ளது 

Vegetarian Sea Cucumber/Vegetarian Food/Frozen Food/Healthy Food/Sea Cucumber in Vegetarian

2. கரற்பாசி வளர்ப்பு ( see weed)  : 2017 692 மேட்ரிக் தொன் யாழிலும் புத்தளத்திலும் தனிப்பட்ட நிறுவனம் வளர்த்துள்ளது.

Image result for seaweed

 

3. கடல் பாஸ்  Seabass : ஓசன்பிக் என்ற தனியார் நிறுவனம் 2017ல் 173 மெட்ரிக் தொன்னை திருகோணமலை கடலில் கூண்டுக்குள் வளர்ந்துள்ளது. ஆழம் குறைந்த கடலிலும் இதை வளர்க்கலாம் 

OceanPick.jpg

இதை இந்த ஆங்கில கட்டுரை சார்ந்த தொகுப்பு 

https://www.lankabusinessonline.com/fishing-for-sustainable-profits-in-the-northern-province/?fbclid=IwAR3_1L0AzgJRngCWdZOFI-rCiMNxsJkgsKO9YVtDmroCTMdQRsWqpEgqsos

  • தொடங்கியவர்

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.