Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'முதல் குண்டுத்தாக்குதலை சஹ்ரானே மேற்கொண்டார்'

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களில் அதிக வெளி­நாட்­ட­வர்­களை பலி­யெடுத்த, சங்­கிரில்லா நட்­சத்­திர ஹோட்டலில் இரு தற்­கொலைக் குண்­டுகள் வெடித்­துள்­ள­துடன் அதில் முதல் குண்டை தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் பயங்­க­ர­வாத குழு­வுக்கு தலைமை வகித்த மொஹம்மட் காசிம் மொஹம்மட் சஹ்ரான் அல்­லது சஹ்ரான் ஹாசிம் அல்­லது அஷ்ஷெய்க் சஹ்ரான் ஹாஷிம் என்­ப­வரே நடத்­தி­யுள்­ள­மையை சி.ஐ.டி. விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்­ளது. 

sharan.jpg

உயிர்த்த ஞாயிறு தின­மான கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி காலை 8.54 மணிக்கு இந்த குண்டை அவர் வெடிக்கச் செய்­துள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் குறித்த சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் நிதிக் குற்ற விசா­ரணை பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­த­ரவின் கையெ­ழுத்­துடன் கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­வுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலை­யி­லேயே அன்­றைய தினம் காலை 8.55 மணிக்கு இரண்­டா­வது குண்டை மொஹம்மட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹமட் என்­பவர்  வெடிக்கச் செய்­துள்­ள­தாக சி.ஐ.டி.யின்   அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

அடை­யாளம் காணப்­பட்­டுள்ள தற்­கொலை குண்­டு­தா­ரி­க­ளான இல்ஹாம் மற்றும்  சஹ்ரான் ஆகி­யோரின் தலைப் பகு­திகள் கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவை தொடர்பில் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை செய்ய நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. அதன்­படி சஹ்­ரானின் தங்­கை­யான மொஹம்மட் காசிம் பாத்­திமா மத­னியா என்­பவர் தற்­போது மட்­டக்­க­ளப்பு சிறையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்   அவரை கொழும்­புக்கு அழைத்து வந்து டி.என்.ஏ. கூறு­களைப் பெற்று உறுதி செய்­யவும் நீதி­மன்றம் சி.ஐ.டி.க்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் கீழ் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஷானி அபே­சே­க­ரவின் ஆலோ­ச­னையில் பொலிஸ் பரி­சோ­தகர் ஜய­சுந்­தர தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில்,  ஷங்­ரில்லா தாக்­குதல் தொடர்பில் முழு­மை­யான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த ஏபரல் 21 ஆம் திகதி ஷெங்­ரில்லா ஹோட்­டலில் முதல் குண்டு 8.54 மணிக்கு டேபிள் வன் எனும் உண­வ­கத்தில் வெடித்­துள்­ள­துடன் இரண்டாம் குண்டு அந்த உண­வகம் உள்ள மூன்றாம் மாடியின் மின் தூக்கி மற்றும் படிகள் அமைந்­துள்ள வெளி­யேறல் பிரிவில் வெடிக்க  செய்­யப்­பட்­டுள்­ளது.

குண்டு வெடிப்பு இடம்­பெறும் போது குறித்த ஹோட்­டலில் 16 அறை­களில் 34 இலங்­கை­யர்­களும், 192 அறை­களில் 327 வெளி­நாட்­டவ்ர்­களும் தங்­கி­யி­ருந்­துள்­ளனர்.  குண்­டு­வெ­டிப்பில் 12 இலங்­கை­யர்கள், 24 வெளி­நாட்­ட­வர்கள் என 36 பேர் ஷங்­ரில்லா ஹோட்­டலில் மட்டும் பலி­யா­கி­யுள்­ளனர். இத­னை­விட 22 வெளி­நாட்­ட­வர்கள் 12 உள்­நாட்­ட­வர்கள் காய­ம­டைந்­துள்­ளனர். 

அந்த ஹோட்­டலில் இருந்த ஷிர்க் பிரகாஷ் (ஷிர்க் ப்ரகஷ்) மற்றும் ஷான் மயூர் கொவின்தி ( ஷன் மயுர் கொவின்தி) ஆகிய இந்­தி­யர்கள் காணாமல் போயுள்­ள­துடன்,  அந்த உண­வ­கத்தில் சேவை­யாற்­றிய ஒரு­வரும் காணாமல் போயுள்ளார்.

ஷெங்­ரில்லா ஹோட்­டலில் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி மொஹம்மட் எனும் பெயரில் முன்­னி­லை­யான ஒருவர் தனது இரு  நண்­பர்­க­ளுக்கு என அறை ஒன்­றினை பதிவு செய்­துள்ளார். 393380 எனும் அடை­யாள இலக்­க­மு­டைய பதி­வி­னையே அவர் செய்­துள்ளார். அன்­றைய தினம் அவ்­வாறு  அறையை பதிவு செய்­ய­வந்­தவர், உயிர்த்த ஞாயி­றன்று சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தற்­கொலை தாக்­கு­தலை நடாத்­திய  மொஹம்மட் இப்­ராஹீம் இன்ஷாப் அஹமட் எனும் 831260645 எனும் தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய நபர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

அதன் பின்னர் ஏபரல் 20 ஆம் திகதி 862442067 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய மொஹம்மட் இப்­ரஹீம் இல்ஹாம் அஹமட் என்­ப­வரும் 873340312 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய  மொஹம்மட் அசாமும் ஷங்­ரில்லா  ஹோட்­ட­லுக்கு இரவு 8.00 மணி­ய­ளவில் வந்­துள்­ளனர்.  அவர்கள் அங்கு 616 ஆம் இலக்க அறையில் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். 

தற்­கொலை குண்­டு­தா­ரி­களில் இரு­வ­ராக அடை­யாளம் காணப்­பட்ட அந்த அறையில் இருந்த மொஹம்மட் இப்­ராஹீம் இல்ஹாம் அஹ­மட்டின் தந்­தை­யான மொஹம்மட் யூசுப் இப்­ராஹீம் மற்றும் அவ­ரது தாயா­ரான கதீஜா உம்மா உள்­ளிட்டோர் தற்­போது சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் ஊடா­கவும் இல்­ஹாமின் சகோ­த­ரர்கள் ஊடா­கவும் அங்கு  இரண்­டா­வது குண்டை வெடிக்கச் செய்­தவர் இல்ஹாம் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.

குறிப்­பாக சி.ஐ.டி. நீதி­மன்­றுக்கு கொடுத்த தக­வல்கள் பிர­காரம்  குறித்த ஹோட்­டலில் 616  ஆம் இலக்க அறையில் தங்­கி­யி­ருந்­த­தாக கூறப்­படும்  மொஹம்மட் அசாம் தொடர்பில் விசா­ர­ணைகள் நடாத்­தப்­பட்­டுள்­ளன.  கொழும்பு 12 ஐச் சேர்ந்த மொஹம்மட் அசாமின் மனைவி ஆய்ஷா சித்­திகா மொஹம்மட் பசீர், அசாமின்  பெற்­றோ­ரான  சேகு மொஹம்மட் முபாரக் மற்றும் தாய் மொஹம்மட் ஹனீபா மெஹ்ருன் நிஸா ஆகி­யோரின் வாக்கு மூலங்­களின்  பிர­கா­ரமும், சி.சி.ரி.வி. காணொளி பிர­கா­ரமும் கிங்ஸ்­பரி ஹோட்­டலில் தாக்­குதல் நடத்­திய தற்­கொ­லை­தாரி என்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ஷங்­ரில்லா ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய மற்­றைய தற்­கொலை குண்­டு­தாரி சஹ்ரான் ஹாஷிம் என சி.ஐ.டி. விசா­ர­ணை­களில்  தெரி­ய­வந்­துள்­ளது.  862014685 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய சஹ்ரான் ஹாசிம், அஷ்ஹேய்க் சஹ்ரான் ஹாசிம் எனவும் அறி­யப்­ப­டு­வ­தாக கூறும் சி.ஐ.டி. ,  குரு­ணாகல் கெக்­கு­ணு­கொல்­லையைச் சேர்ந்த  955944666 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய அப்­துல்­காதர் பாத்­திமா ஹாதியா மற்றும் அவ­ரது 4 வயது மகள் பாத்­திமா ருகையா ஆகி­யோரே  கடந்த 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற தற்­கொலை  குண்­டு­வெ­டிப்பில் காய­ம­டைந்­த­வர்கள் என நீதி­மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அந்த தற்­கொலை குண்­டு­வெ­டிப்பில் சஹ்­ரானின் தந்­தை­யான மொஹம்மட் காசிம்,  883093984 எனும் அடை­யாள அட்­டையை உடைய சின்ன மெள­லவி என அரி­யப்­படும்  மொஹம்மட் சைனி, 903432624 எனும் அடை­யாள அட்டை இலக்­கத்தை உடைய மொஹம்மட் ரில்வான் ஆகிய சஹ்­ரானின் சகோ­த­ரர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சி.ஐ.டி. கோட்டை நீதி­வா­னுக்கு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

ஷங்­ரில்லா தாக்­கு­தலில் தற்­கொ­லை­தா­ரி­யாக சஹ்ரான் இருந்தார் என்­பதை மேலும் உறுதி  செய்ய மீட்­கப்­பட்ட சஹ்­ரானின் தலைப் பகு­தியில் இருந்து பெறப்­பட்ட டி.என்.ஏ. மூலக் கூரு­க­ளுடன் அவ­ரது சகோ­த­ரி­யான மொஹம்மட் காசிம் மத­னி­யாவின் டி.என்.ஏ. கூரு­களை ஒப்­பீடு செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி மட்­டக்­க­ளப்பு பொலி­சாரால் கைது  செய்­யப்­பட்டு தற்­போது விளக்­க­ம­ரி­யலில் உள்ள அவரை இன்­றைய தினத்­துக்கும் எதிர்­வரும் 15 ஆம் திக­திக்கும் இடையில்  கொழும்பு சட்ட வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்தில் முற்­ப­டுத்தி டி.என்.ஏ. சோத­னை­க­ளுக்கு ஏற்­பாடுச் செய்­யு­மாறு கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்க  மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லைகள் அத்­தி­யட்­ச­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார்.

ஷங்­ரில்லா  ஹோட்டல் சி.சி.ரி. காணொ­ளிகள் பிர­காரம் 6 ஆம் மாடியில் இருந்து வரும் குண்­டு­தா­ரிகள், மூன்றாம் மாடியில் கைலாகு கொடுத்து பிரி­வதும் அதில் ஒருவர் டேபிள் வன் உண­வ­கத்தில் உணவு எடுக்கும் பகு­தியில் குண்டை வெடிக்கச் செய்­வதும் மற்­றை­யவர் மின் தூக்கி மற்றும் படி­க­ளுக்கு அருகே வெடிக்கச் செய்­வதும் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக தெரி­வ­தாக சி.ஐ.டி. நீதி­மன்­ருக்கு கொடுத்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இத­னை­விட இந்த தற்­கொ­லை­தா­ரிகள் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் 7 வாடகை வாக­னங்கள் குறித்தும் சி.ஐ.டி. விசா­ரித்து வரு­வ­தாக நீதி­மன்­றுக்கு தெரி­யப்­ப­டுத்­தப்ப்ட்­டுள்­ளது.  இரு முச்­சக்­கர வண்­டிகள், 2 வெகன் ஆர்  ரக மோட்டார் வாகங்கள்,  ஒரு ஹொண்டா  வாகனம் மற்றும் இரு சுசுகி எல்டோ வாக­னங்கள் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. இந்த வாக­னங்­களில் வெடி­பொ­ருட்கள் கொன்­டு­வ­ரப்­பட்­டதா எனவும் ஏனைய விட­யங்­களை கண்­ட­றி­யவும் அவற்றை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்த நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

தற்­கொலை குன்­டு­தா­ரிகள், கல்­கிசை, கொழும்பு 3, தெமட்­ட­கொடை, கொச்­சிக்­கடை, படல்­கும்­பர மற்றும் மத­கம பகு­தி­களில் 6 இர­க­சிய இல்­லங்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அந்த வீடு­க­ளையும் இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்தி உயி­ரியல் கூருகள் ஏதும் இருக்­கின்­ற­னவா   என்­பதைக் கண்­ட­றிய நட­வ­டிக்கை    எடுத்­துள்­ள­தா­கவும் சி.ஐ.டி. மன்­றுக்கு அறி­வித்து அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

தற்­கொலை குன்­டு­தாரி ஒரு­வரின் தெமட்­ட­கொடை மஹ­வில கார்ட்டுன் பகு­தியில் உள்ள வீட்­டி­லி­ருந்து மீட்­கப்­பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கற்­களை பெறு­மதி மதிப்­பீட்­டுக்­காக மாணிக்கக் கல் மற்று ஆப­ர­ணங்கள் அதி­கார  சபைக்கு அனுப்­பவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் ஈ, உ, 3 ஆம் அத்தியாயம் தண்டனை சட்டக் கோவையின் 296,300,315,317,408 ஆகிய அத்தியாயங்களின் கீழும் 1996 ஆம் ஆண்டின் அபாயகரமான ஆயுதங்கள் சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் கீழும் குற்றம் ஒன்றை புரிந்துள்ளதாக கருதி விசாரணைகள் இடம்பெறுகின்றன. 

அத்துடன் 2011 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க சட்டம் மற்றும் 2013 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க திருத்தச் சட்டம் அகையவற்றின் ஊடாக திருத்தப்பட்ட 2005 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பயங்கர்வாதிகளுக்கு நிதி உதவி அளிப்பதை தடைசெய்யும் இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 ஆம் அத்தியாயத்தின் கீழும் விசாரணைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இது குறித்த வழக்கு இன்று மீள விசாரணைக்கு வரவுள்ளது. 

 

http://www.virakesari.lk/article/55644

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.