Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முழு ஆதரவு - டளஸ் அழகப்பெரும

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். 

dalash.jpg

அதேபோன்று குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தாக்குதல்களில் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாவும், தாக்குதல்களால் பாரியளவில் காயமேற்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. 

எனினும் இந்தத் தாக்குதல்களை முன்னரே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் கூட, அரசாங்கத்தின் தவறினாலேயே அது தடுக்கப்படவில்லை. எனவே வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்குவது போன்ற நட்டஈடு இதற்கும் வழங்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

எனவே தாக்குதல்களால் இறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் தலா 50 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 10 – 20 இலட்சம் ரூபா வரையிலும் வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை நிர்பந்திக்கின்றோம். அதேபோன்று தாக்குதல்களால் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களின் எதிர்காலத்திற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/55859

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.