Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்து ; இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டு அரங்குகள்

(நெவில் அன்தனி)

கத்தாரில் 2022 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிக்கான பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாவும்  ஈட்டுபட்டுள்ளனர். இந்த உலகக் கிண்ணப் போட்டி வெற்றிகரமாக நிறைவேறும்போது அது முழு ஆசியாவினதும் வெற்றியாக அமையும் என கத்தார் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவரும் ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச் சம்மேளனத்தின் உதவித் தலைவரும் பீபா பேரவை உறுப்பினருமான சவூத் அல் மொஹன்னாதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

qattar1.jpg

கத்தாரின் தலைநகர் தோஹா, அல் பிதா கோபுரத்தில் அமைந்துள்ள கத்தார் கால்பந்தாட்ட சங்கத்தின் நிறைவேற்றல் மற்றும் மரபுரிமைக்கான உயர் குழு இல்லத்தில் சவூத் அல் மொஹன்னாதியுடன் நடத்தப்பட்ட நேர்காணலின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கத்தார் 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்படும் சகல விளையாட்டரங்குகளும் அராபிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும் அனைத்து விளையாட்டரங்குகளும் அடுத்த வருடம் பூர்த்தியாகிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

சவூத் அல் மொஹன்னாதியுடனான நேர்காணல்

கேள்வி: சவூதி அரேபியா மற்றும் ஜப்பான் போன்ற  பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்டு இவ் வருடம் ஆசிய கிண்ணத்தை உங்களது நாடான காத்தார் சவீகரித்தது. ஆசிய கிண்ணப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய உங்கள் நாடு அடுத்த உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னின்று நடத்தவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் பற்றி கூறுவீர்களா?

பதில்: ஆசிய சம்பியன் என்ற வகையில் 2022 பீபா உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடாக கத்தார் எதிர்கொள்ளவுள்ளது. 2022 நவம்பர் 21ஆம் திகதி எமது அணி லுசெய்ல் விளையாட்டரங்கில் ஆரம்பப் போட்டியில் விளையாடும்போது அது முழு கத்தாருக்கும் பெருமை அளிப்பதாக அமையும். 

வரவேற்பு நாடு என்ற வகையில் எமது கலாசார விழுமியங்களுக்கு அமைய சிறப்பாக நடத்துவோம். உலகக் கிண்ணப் போட்டிக்கான அரங்குகளில் ஒன்றான கலிபா விளையாட்டரங்கு 2017 மே மாதம் திறக்கப்பட்டு அமர் கிண்ண இறுதிப் போட்டியும் நடத்தப்பட்டுவிட்டது. இந்த அரங்கு குழுமையூட்டப்பட்டுள்ளதுடன் 40,000 ஆசன வசதிகளையும் கொண்டது.

qattar3.jpg

qattar4.jpg

கத்தாரின் தென்புற நகரான அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 40,000 ஆசனங்களைக் கொண்ட அல் வக்ரா விளையாட்டரங்கு இம் மாதம் திறக்கப்படுவதுடன் அல் கோர் நகரில் நிர்மாணிக்கப்படும் 60,000 ஆசனங்களைக் கொண்ட அல் பெட் விளையாட்டரங்கு இவ் வருட இறுதியில் திறக்கப்படும்.

எட்டு அரங்குகளுடன் 32 அணிகளுக்கான பயிற்சி அரங்குகளும் அடுத்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். இதற்காக இலங்கையர்களுக்கும் நாங்கள் நன்றி கூறவேண்டும். உலகக் கிண்ணத்துடனான திட்டங்களில் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர். கத்தாரின் கனவை நனவாக்கி அதி சிறந்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான எமது முயற்சியில் அவர்களது பங்களிப்பு இருப்பதையும் இங்கு நினைவுகூர விரும்புகின்றேன்.

கேள்ளி: 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் அணிகளின் எண்ணிக்கை 32 இலிருந்து 48ஆக அதிகரிக்கலாம் என்ற ஊகம் நிலவுகின்றது. இதனால் இப் போட்டியை கூட்டாக வேற்று நாடொன்றுடன் நடத்த திட்டமிடப்படுவதாகத் தெரிகின்றது. 48 அணிகளைக் கொண்ட உலகக் கிண்ணப் போட்டிகளை கத்தார் தனித்து நடத்த தயாரா?

பதில்: 2022 உலகக் கிண்ணப் போட்டியில் அணிகளின் எண்ணிக்கையை 48ஆக அதிகரிப்பது குறித்து கலந்துரையாட நாங்கள் தயார். 

எமது பிராந்தியத்துக்கும் அதன் மக்களுக்கும் அனுகூலம் தரக்கூடிய பீபா உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதை குறிக்கோளாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இந்த உலகக் கிண்ணம் முழு அரபு உலகுக்கும் மத்திய கிழக்குக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதே எமது இலட்சியமாகும். 

அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை எதிர்வரும் ஜுன் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள பீபா பொதுச் சபைக் கூட்டத்தில் எதிர்பார்க்கலாம். அதுவரை கத்தாரில் 32 அணிகளுக்கான உலகக் கிண்ணப் பணிகள் தொடரும் என்பதுடன் அதி உயரிய உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவோம் என்ற உறுதியையும் வழங்குகின்றோம்.

கேள்வி: ரஷ்யாவில் நடைபெற்ற 2018 உலகக் கிண்ணப் போட்டியே அதி சிறந்தது என பீபா பிரகடனப்படுத்தியது. அதற்கு ஈடாகவோ அல்லது அதனை விட சிறப்பாகவோ உலகக் கிண்ணப் போட்டியை 2022இல் நடத்துவது கத்தாருக்கு பெருஞ்சவாலாக இருக்குமல்லவா.. இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றீர்கள்?

பதில்: ரஷ்யாவில் 2018 உலகக் கிண்ணப் போட்டி நடத்தப்பட்டபோது 200 கண்காணிப்பாளர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியிருந்தோம். பீபாவிடமும் ரஷ்யாவிடமும் நிறைய விடயங்களை அறிந்துகொள்ளும்பொருட்டே அவர்களை அனுப்பினோம். பீபா 2022 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு கத்தார் என 2010இல் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒலிம்பிக் விழா, சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி, யூரோ சம்பியன்ஷிப், 21 வயதின் கீழ் உலகக் கிண்ணப் போட்டி அனைத்துக்கும் எமது அதிகாரிகளை கண்காணிப்பாளர்களாக அனுப்பி சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளோம். ரஷ்யாவில் உலகக் கிண்ணப் போட்டி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டதை நான் நேரில் கண்ணுற்றேன். ஆனால் அங்கு ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்கு 3,000 கிலோ மீற்றர் தொலைவிலேயே இருந்தது.. ஆனால் கத்தாரில் அரங்குகளுக்கு இடையில் 70 கிலோ மீற்றர் தூரமே உள்ளது. ஓர் அரங்கிலிருந்து மற்றைய அரங்குக்கு ஒரு மணித்தியாலத்துக்குள் பயணித்துவிடலாம். எனவே இரசிகர்களுக்கும் அணிகளுக்கும் போதிய ஓய்வு எடுக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் ஒரே நாளில் இரண்டு உலகக் கிண்ணப் போட்டிகளை கண்டுகளிப்பதற்கான வசதியும் இரசிகர்களுக்கு கிடைக்கும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவதால், கடற்கரை பொழுதுபோக்கு, பாலைவனச் சுற்றுப் பயணம், நீர்நிலை விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகள் அனைத்திலும் ஈடுபடக்கூடிய சுவாத்தியம் நிலவும். ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வருகை தந்து கால்பந்தாட்டத்துடன் களியாட்டங்களிலும் பங்குபற்றி மகிழக்கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் அரபு உலகின் விருந்தோம்பல்களை அனுபவிக்கும் அதேவேளை கத்தாரின் சுவையான உணவுகளையும் உண்ணக்கூடியதாக இருக்கும். 

ஒட்டுமொத்தத்தில் என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக்கூடிய வகையிலும் அரபு உலகுக்கு பெருமைதரும் வகையிலும் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை கத்தார் நடத்தும் என நான் 100 வீதம் நம்புகின்றேன்.

கேள்வி:  உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னிட்டு நிர்மாணிக்கப்படும் விளையாட்டரங்குகளுக்கான மொத்த செலவினம் எவ்வளவு? 

பதில்: சுற்றுப் போட்டிக்கான செலவினம் 23 பில்லியன் கத்தார் ரியால் (சுமார் 6.6 பில்லியன் அமெரிக்கா டொலர்கள்) என மதிப்பிட்டுள்ளோம். நான் ஏற்கனவே கூறியதுபோன்று எட்டு விளையாட்டு அரங்குகள் நிர்மாணிக்கப்படும். கலிபா விளையாட்டரங்கு ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டது. அல் வக்ரா, அல் பேட் என்பன இவ் வருடம் திறக்கப்படும். 

அல் ரயான், அல் துமாமா, ராஸ் அபு அபூத், எட்யூகேஷன் சிட்டி, லுசெய்ல் என்பன மற்றைய ஐந்து அரங்குகளாகும். எட்டு அரங்குகளில் ஆறு அரங்குகள் 40,000 ஆசனங்களைக் கொண்டவை. அல் பேட் அரங்கில் 60,000 ஆசனங்கள் உள்ளன. லுசெய்ல் அரங்குதான் பெரியது. இங்குதான் ஆரம்பப் போட்டியும் இறுதிப் போட்டியும் நடைபெறும். இந்த அரங்கு 80,000 ஆசனங்களைக் கொண்டது. உலகக் கிண்ண வரலாற்றிலேயே மிகவும் வித்தியாசமான வகையில் ராஸ் அபு விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்படுகின்றது. கப்பல் கொள்கலன்கள், அப்புறப்படுத்தக்கூடிய ஆசனங்கள், அலகுகளான கட்டுமாணத் தொகுதிகள் மற்றும் 40,000 ஆசனங்களுடன் ராஸ் அபு விளையாட்டரங்கு அமைக்கப்படும் இந்த அரங்கு, உலகக் கிண்ணம் முடிவடைந்ததும் முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். 

எமது விளையாட்டரங்குகள் அனைத்தும் அராபிய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டனவாக இருக்கும். இவை முழு உலகையும் கவரும் என்பது உறுதி.

 

 

http://www.virakesari.lk/article/56090

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு

கத்தார் 2022 உலகக் கிண்ணத்துக்கான 2 ஆவது அரங்கு திறப்பு

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முன்னிட்டு அல் வக்ராவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு நேற்றிரவு திறக்கப்பட்ட அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெற்ற அமிர் கிண்ண இறுதிப் போட்டியில் அல் சாத் கழகத்தை 4 க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட அல் துஹெய்ல் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

al_wakra_stadium_opened_on_16_may_2019.j

போட்டியின் 7ஆவது நிமிடத்தில் அல் சாத் கழகம் சார்பாக அக்ரம் அலி கோல் ஒன்றைப் போட்டு தனது கழகத்தை முன்னிலையில் இட்டார். இவர் அல் துஹெய்ல் கழகத்தில் விளையாடும் யெஹியாவின் சகோதரர் ஆவார்.

எனினும் 9 நிமிடங்கள் கழித்து அல் துஹெய்ல் சார்பாக யெஹியா கோல் நிலையை சமப்படுத்தினார். 

அதன் பின்னர் இரண்டு அணிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

போட்டியின் 55 ஆவது நிமிடத்தில் தரிக் சல்மானுக்கு மத்தியஸ்தர் அல் ஜஸிம் சிவப்பு அட்டைக் காட்ட அல் சாத் கழகம் 10 வீரர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அடுத்த ஆறு நிமிட இடைவெளியில் மொரோக்கோ நாட்டவரான எட்மில்சன் இரண்டு கோல்கைளப் (59 நி., 62 நி.) போட்டு அல் துஹெய்ல் அணியை முன்னிலையில் இட்டார். போட்டியின் 81ஆவது நிமிடத்தில் எட்மில்சன் தனது மூன்றாவது கோலைப் போட்டு அல் துஹெய்ல் கழகம் சம்பியனாவதை உறுதி செய்தார்.

amir_cup_al_duhail_4_al_sadd_1.jpg

al_duhail_lift_qatar_amir_cup.jpg

இதேவேளை, 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார் மேலும் 6 புதிய விளையாட்டு அரங்குகளை நிர்மாணித்து வருகின்றது.

அவற்றில் அல் பெய்த் அரங்கு வருட இறுதியில் திறக்கப்படவுள்ளது.

மற்றைய ஐந்து விளையாட்டரங்குகள் அடுத்த வருடம் பூர்த்தியாகும்.

 

http://www.virakesari.lk/article/56174

  • கருத்துக்கள உறவுகள்

கத்தாரில்... பியர் குடிக்கலாமா?

 

இப்படி, ஒரு விளையாட்டு..  நடத்த வேண்டும் என்று,
12  வருடங்களுக்கு முன்பே முடிவு எடுக்கப் பட்டு விட்டது  உண்மை.
பல நிகழ்சி  நிரல்கள்.... முன்பே,  யாரோ... ஒருவரால்  (இலுமினாட்டி ?)
திட்டமிட்டு  செயல்படுத்தப் படுகின்றன. என்றே... எண்ணுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.