Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி

May 19, 2019

scott-morrison.jpg?resize=800%2C450அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளில் 6 முறை பிரதமர்கள் மாறி உள்ளனர்.  இதனால் லிபரல்கட்சிக்கு பொதுத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் எனக் கருதப்பட்ட போதிலும் பிரதமர் ஸ்கொட் மாரிசன் தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

 #scottmorrison #australia #election #அவுஸ்திரேலியா  #லிபரல்கட்சிகூட்டணி   #வெற்றி

 

http://globaltamilnews.net/2019/122203/

  • கருத்துக்கள உறவுகள்

எதிரபார்க்காத வெற்றி. தோற்பார்கள் என்று பலராலும் ஆருடம் கூறப்பட்ட நிலையில், லிபரல்க் கட்சி வென்றிருக்கிறது.

முதலாளிகளுடனான நட்பு, வர்த்தக வங்கிகளுக்கான சலுகைகள், கல்வி மற்றும் வயோதிபர்களுக்கான கொடுப்பனவுகளில் வெட்டு, அதிகரித்துவரும் உலக வெப்பநிலை பற்றிப் பாராமுகம், வீட்டு விலையுயர்வு போன்ற பல முக்கிய விடயங்கள் தொடர்பாக லிபரல் கட்சிக்கெதிராக மக்களின் தேர்வு இருக்கும் என்று தேர்தல்கள் நெருங்கும் தறுவாய்வரை பல ஊடகங்களில் கருத்துக் கணிப்புக்கள் ஆருடம் கூறின. அதுமட்டுமல்லாமல்,  தொழிற்கட்சி தலைவர்மேல் லிபரல்க் கட்சியும் அக்கட்சிக்குச் சார்பான ஊடகங்களும் தொடுத்திருந்த அனாகரீகமான தனிநபர் தாக்குதல்களும் தொழிற்கட்சிக்குச் சார்பான அனுதாப அலையொன்றை ஏற்படுத்தியிருக்கும் என்றும் பரவலான எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இவையெல்லாவற்றையும் ஏறெடுத்தும் பார்க்கத்தவறிய வாக்காளர்கள்,  இரு முக்கிய விடயங்களை மட்டுமே முன்னிறுத்தி தமது வாக்கை அளித்திருக்கின்றனர். முதலாவது, தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி  சேமிப்பை அதிகரிக்க செய்வதாகச் சொல்லிவந்த வரி அதிகரிப்பு. இது பெருவாரியான மக்களின் கரிசணையாக அமைந்துவிட்டதோடு, லிபரல்க் கட்சியும் இதுதொடர்பாக கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தது. 

அடுத்தது, தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வைத்திருந்து, வாடகைக்கு கொடுப்பதால் ஏற்படும் செலவுகளுக்கான வரி விலக்கீட்டை அகற்றிவிடப்போவதாக சொல்லிவந்தமை. அப்படி நடக்கும் பட்சத்தில் வீட்டு விலைகள் சரியலாம், இது கடன்களுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்கச் செய்யும், பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்திக்கும் என்று லிபரல்க் கட்சியினர் கூறிவந்ததை மக்களும் நம்ப ஆரம்பித்து விட்டனர்.

 

 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

சரி, ஈழத்தமிழரைப் பொறுத்தவரை இத்தேர்தல் வெற்றி கூறுவது என்ன?

முதலாவது, லிபரல்க் கட்சியினர் இனவாதிகள், பழமைவாதிகள் எனும் அபிப்பிராயம் உள்ளது. அகதிகளை ஏற்றுக்கொள்ளுதலில் மிகவும் கராரான கொள்கையைக் கொண்டுள்ள இக்கட்சி, கடந்த சில வருடங்களில் அகதிகளாகக் கடல்மார்க்கமாக அவுஸ்த்திரேலியாவினுள் தஞ்சம் கேட்டு வந்தோரைத் திருப்பியனுப்பியுள்ளதோடு, படகுகளை முற்றாகத் தடுத்துவிட்டோம் என்றும் மார்தட்டிக் கொள்கிறது. 

அத்துடன், அவுஸ்த்திரேலியாவினுள் தஞ்சமடைந்து இதுவரை வதிவிட உரிமை இல்லாதவர்களை திருப்பியனுப்பவும் தொடங்கியிருக்கிறது. இது, இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

இலங்கையின் இனவழிப்பு போர் முடிந்த கையோடு, அங்குசென்று, இரு ரோந்துக்கப்பல்களையும் அன்பளிப்பாக வழங்கி, இலங்கையிலிருந்து அகதிகளாக வருவோரைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கான உதவி என்கிற பெயரில் பெருமளவு பணத்தினை மகிந்த அரசிற்குக் கொடுப்பதில் முன்னால் நின்று செயற்பட்ட அந்நாள் வெளிவிவகார அமைச்சரான ஸ்கொட் மொரிசனே இன்று பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என்பதைப் பார்த்தால் ஈழத்தமிழ் அகதிகள் நிலை இனிமேல் என்னாகும் என்பது ஓரளவிற்குப் புலப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று.

அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும்,

Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia கட்சி போன்ற சிறிய கட்சிகளின் பங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், (இதில் Clive Palmer தொழிற்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதே United Australia கட்சியின் முக்கிய நோக்கம் என வெளிப்படையாக கூறி வந்துள்ளார்),

மேலும் Bill Shorten அதிவிருப்பத்திற்குரிய தலைவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ கருதப்படாமையும் தொழிற்கட்சியின் படுதோல்விக்கு காரணங்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் கூறியது போல தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால் திறைசேரி சேமிப்பை அதிகரிக்க செய்வதற்காக வரி அதிகரிப்பு, negative gearing சலுகையை இல்லாமல் செய்வது, franking credits cash back திட்டத்தை இல்லாமல் செய்வது போன்ற கொள்கைகள்தான் அக்கட்சியின் தோல்விக்கு காரணங்கள் என்று.

அத்துடன் பெருமளவு சுற்றுலாத்துறை மற்றும் கனிமவளத்துறையில் தங்கியிருக்கும் Queenslanders, Adani Coal Mine ஒப்பந்தம் தொடர்பான தொழிற்கட்சியின் மதில் மேல் பூனை போக்கால், அவர்களின் வாக்குகளை லிபரலை நோக்கி திரும்பியதும் பெரியளவிலான வாக்கு சரிவிற்கு காரணம் எனவும்,

Pauline Hanson’s One Nation மற்றும் Clive Palmer’s United Australia கட்சி போன்ற சிறிய கட்சிகளின் பங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும், (இதில் Clive Palmer தொழிற்கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதே United Australia கட்சியின் முக்கிய நோக்கம் என வெளிப்படையாக கூறி வந்துள்ளார்),

மேலும் Bill Shorten அதிவிருப்பத்திற்குரிய தலைவராகவோ, ஆளுமைமிக்கவராகவோ கருதப்படாமையும் தொழிற்கட்சியின் படுதோல்விக்கு காரணங்கள் என ஊடகங்கள் கூறுகின்றன.

உண்மைதான், குயீன்ஸ்லாந்து வாக்குகளே தேர்தலின் போக்கை மாற்றியமைத்ததாகப் பலரும் கூறுகிறார்கள். விவசாயத்துறையிலும், கனிமவள உற்பத்தியிலும் முன்னிற்கும் இம்மாநிலம் இயல்பாகவே தொழிற்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட காலம் போய், இன்று லிபரல் நஷனல் கட்சியின் இருப்பைத் தக்கவைக்க உதவிய மாநிலம் என்று சொல்லுமளவிற்கு மாறியிருக்கிறது.

லிபரல்க் கட்சிமீது பெருகிவந்த மக்கள் வெறுப்பினைச் சரியான முறையில் தொழிற்கட்சி பாவிக்கத் தவறிவிட்டதும் அதன் தோல்விக்கு இன்னொரு காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.