Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸா் யாழ் மக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரச வங்கியில் வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் யாழ்ப்பாண பொலிசார் கோரியுள்ளனர். 

 

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் கிளையிலும் , தீவக பகுதியில் உள்ள அரச வங்கி கிளையிலும் வேலை வாய்ப்பினை பெற்று தவறுவதாக எட்டு பேருக்கு மேல் ஏமாற்றி பணத்தினை மோசடி செய்த நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்க பெற்று உள்ளன எனவும் , ஏமாற்றம் அடைந்தவர்கள் அது தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொண்டால் , அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவித்தனர். 

அது தொடர்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிக்கையில் ,  , யாழ். மாநகர சபையில் பணியாற்றும் நபர் ஒருவர் ஆறு இளைஞர்கள் மற்றும் 2 யுவதிகளுக்கு அரச வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 4 இலட்ச ரூபாய் முதல் 6 இலட்ச ரூபாயினை கேட்டார். 

வங்கியில் வேலைக்கான நியமன கடிதம் கிடைத்ததும் , பணத்தினை தருவதாக நாங்கள் எட்டு பேரும் ஏமாற்று பேர்வழியிடம் கூறினோம்.  

அதன் பிரகாரம் கடந்த 18ஆம் திகதி கொழும்புக்கு அவர்களை அழைத்து 17ஆம் திகதியிடபட்ட நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன. அன்றைய தினம் முதலே நீங்கள் வங்கியில் பணியாளராக இணைந்து உள்ளீர்கள் என கூறினார். 

நாங்களும் அதனை நம்பி மறுநாள் எமது நியமன கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த அரச வங்கியின் கிளைக்கு நியமன கடிதத்துடன் பணிக்கு சென்றோம். 

அங்கு எமது கடிதத்தை பார்த்த வங்கி முகாமையாளர் இது தமது வங்கியின் நியமன கடிதம் இல்லை எனவும் இது போலியானது எனவும் கூறும் போதே நாம் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். 

அதன் பின்னர் எமக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பணத்தினை வாங்கிய நபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்த போது தனக்கு அது பற்றி தெரியாது எனவும் தமக்கு வேறு நபரே வேலை வாய்ப்பு இருப்பதாக கூறியதனாலையே அவரிடமே உங்களை அழைத்து சென்றேன். அவரிடம் தான் அது தொடர்பில் கேட்க வேண்டும் என கூறி தொலைபேசியை துண்டித்துள்ளார். அதன் பின்னர் அவரது தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்படுவதாக பாதிக்கபட்ட ஒருவர் தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/57063

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.