Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தாயக உறவுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு # 8 : மின்சாரம்

Featured Replies

 

இலங்கையில் இன்றுவரை பெரும்பான்மை மக்கள் மின்சார வசதி இன்றி வாழுகிறார்கள். மின்சாரம் சகல மக்களுக்கும் கிடைத்தால் அவர்களின் வாழ்க்கை தரம் உயரும்.

இந்த நாட்டில் பெரும்பாலான மின்சாரம் நீர்வலுவை கொண்டே பிறப்பிக்கின்றது. ஆனால், நீரோ அருகிவருகின்றது.

எமது மக்களுக்கு மாற்று மின்சார வழிகளை தருவது அவரக்ளின்  பொருளாதார வலுவை உயர்த்தும்  

================================================

இலங்கை மின்சார சபை அதிகாரிகள், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. 

இதனால் இதுவரையில் வருடாந்தம் 80 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துபர்களின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

கொழும்பு - ஜனநாயக இடதுசாரிகள் முன்னணி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அச் சங்கத்தின் இணைப்பாளர் சங்ஜீவ தம்மிக்க மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை மின்சார சபை  தற்போது  ஒரு மின்சார அலகுக்கு வழங்கப்பட்ட செலவு 18 ரூபாவிலிருந்து 23 ரூபா வரை அதிகரித்துள்ளது. மின்சார செலவு  மற்றும் மின்சார கொள்வனவுச் செலவு ஆகியன அதிகரிப்பதற்கான பிரதான காரணம் அவசர கால நிலையில் மேற்கொள்ளப்படும் மின்சார கொள்வனவுகளில் ஏற்பட்ட ஊழல்கள் மற்றும் மோசடிகள் ஆகும். மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விடவும் இது பாரிய மோசடியாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/58193

  • தொடங்கியவர்

மின்சாரம் காற்றாலை

ஏனைய ஆற்றல் முதல்களுடன் ஒப்பிடும் போது காற்று ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறப்படுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைதல் பெருமளவில் தடுக்கப்படுகின்றது. எனினும், காற்று மின்சாரத்தைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் காற்றுச் சுழலிகளுடன் கூடிய தொகுதிக்கான உற்பத்திச் செலவு அதிகமாகும். 2011 ஆம் ஆண்டளவில் டென்மார்க் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. மேலும், உலகின் 83 நாடுகள் காற்று மின்சாரத்தை வணிக நோக்கு அடிப்படையில் பயன்படுத்துகின்றன. 2010 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த மின்சார நுகர்வின் 2.5 சதவீதம் காற்று மின்சாரத்தின் மூலம் பெறப்பட்டுள்ளதுடன், காற்று மின்சாரத்தைப் பயன்படுத்தும் அளவு ஆண்டுக்கு 25 சதவீதத்தால் உயர்வடைந்து செல்கின்றது.

பரவலாக காற்றாலை மின்சாரம் பசுமை மின்சாரம் என்று வர்ணிக்கப்பட்டாலும், காற்றாலை மின்சாரம் சுற்றுச்சூழலை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கிறது. காற்றாலைகளால் ஒலி மாசுபாடு, உயிரினங்களின் வாழ்விடச் சிதைவு, பறவைகளின் வலசைப் பாதையில் இடர் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒரு காற்றாலைச் சுழலியின் மூலம் ஒரு ஆண்டில் ஒன்றிலிருந்து 64 பறவைகள்வரை இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக ஸ்பெயின் நாட்டில் எல் பெர்டோன் (El perdon) என்ற இடத்தில் அமைந்துள்ள காற்றாலையில் ஆண்டுக்கு 64 பறவைகள் ஒரு காற்றாலையால் இறக்கின்றன. அதேநேரம் தங்கள் ஆய்வுக் காலத்தில் பறவைகளின் மரணங்களே நிகழாத காற்றாலைகளும் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் காற்று ஆற்றலைக் கொண்டு, மின்சாரம் உற்பத்தி செய்வது, ஒரு முக்கியமான செயல்பாடாக உருவெடுத்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் கோட்பாடு, மிக எளிமையானதாகும். அடிக்கும் காற்று, டர்பனின் தகடுகளை சுழற்றும் போது, அதனால் ஜெனேரட்டரில் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த தகடும் ஜெனரேட்டரும் (நெசல் என்றும் அமைப்பில் பொருத்தப்பட்டிருக்கும்) ஒரு உயரமான டவரின் மேல் பொருத்தப்பட்டிருக்கும்..

 

தொழில்நுட்பம்

பொதுவாக டர்பனில் காற்று வீசும் போது, சுழலக்கூடிய மூன்று தகடுகள் நேரடியாக ஜெனேரட்டர் உடனோ அல்லது கியர் பாக்ஸ் மூலமோ இணைக்கப்பட்டிருக்கும். சுழலக்கூடிய மூன்று தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும் தலையானது நெசலின் உள் அமைக்கப்பட்டிருக்கும் ஜெனேரட்டருடன் இணைக்கப்படும். வேறு பல மின்னனுவியல் பகுதிகளையும், காற்று திசையை, டர்பைன் எதிர் கொள்ளும் விதத்தில் திருப்பும் இயந்திர நுட்பத்தையும் நெசலினுள் அமைக்கப்பட்டிருக்கும். காற்று திசையை அறிந்து கொள்ள உணரிகள் அமைக்கப்பட்டு, டவரின் தலைபகுதியை காற்று திசைக்கு ஏற்ற வகையில் திருப்பப்படும்.

ஜெனேரட்டரினால் உற்பத்தியாகும் ஆற்றல், காற்றின் வேகத்திற்கு ஏற்ப தானாகவே கட்டுபடுத்தப்படும். ரோட்டரின் விட்டம் 30 மீ - 90 மீட்டர் வரையும், டவரின் உயரம் 25 - 80 மீட்டர் வரை வேறுபடும். வட்டார கிரிடுக்குக் செலுத்தும் வகையில் உற்பத்தியான மின்சாரம் சரிபடுத்தப்படும். ஒரு காற்றாலை ஜெனேரட்டர் கொண்டு 225 kW மின்சாரத்திலிருந்து 2 மெகாவாட் மின்சாரம் வரை உற்பத்தி செய்யலாம். மேலும் இவைகளை, ஒரு நொடிக்கு 2.5 மீட்டரிலிருந்து 25 மீட்டர் வரை வீசக்கூடிய காற்றின் வேகத்தில் இயக்கலாம்.

காற்றுச் சக்தியானது வளியின் அசைவின் இயக்கசக்தியாகும்.ஓரலகு நேரத்தில் குறித்த கற்பனைப் பரப்பை வாரிச்செல்லும் மொத்த காற்று சக்தி பின்வரும் சமன்பாட்டினால் தரப்படுகின்றது.

Ε= ½mν^2 =½(Aνtρ)ν^2 = ½Aρν^3

ρ=காற்றின் அடர்த்தி
ν=காற்றின் வேகம்

ஆற்றுதிறன் அல்லது வலு(P) = (ஆற்றல்)/(கால இடைவெளி) = (வேலை)/(கால இடைவெளி)

P = Ε/t = ½Aρν^3.[2]

காற்றுச் சக்தியானது ஒரு திறந்த வளிப்பாய்ச்சலாகும். எனவே,காற்றின் வலு வேகத்தின் மூன்றாம் அடுக்குக்கு நேர்விகித சமனாகும். காற்றின் வேகம் இருமடங்காகும் போது வலு 8 மடங்கினால் அதிகரிக்கும்.

காற்றாலை நிறுவுதல்

காற்றாலை நிறுவ தகுந்த இடங்களின், 3-4 வருட காற்று வேகத்தின் புள்ளி விவரங்களை சேகரித்து, நிறுவுவதற்கான தகுந்த இடத்தை தேர்வு செய்து பின்னர், நிறுவுவதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகலாம். இரு காற்றாலைக்களுக்கிடையே ஆன இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது. காற்றாலை கருவியினை நிறுவனங்கள் சோதித்து, குறிப்பிட்ட தரம், தேவைக்குறிப்பு செயற்பாங்கு ஆகியன இருப்பதற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும். காற்றாலைகளை நிறுவியதற்கு பின்னர், அதன் உற்பத்தியாளரே அதனை பராமரிக்க வேண்டும்.

 

 

 

Edited by ampanai

  • தொடங்கியவர்

சூரிய ஒளியில் மின்சாரம் : 
குறைந்த விலையில் சூரிய ஒளி வீடு

 

  • தொடங்கியவர்

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

 

 

  • தொடங்கியவர்

சூரிய சக்தி மூலமான மின்சக்தி திட்டம் வவுனியாவில் 
 

இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள Vydexa (lanka) power corporation (Pvt.) Ltd என்ற நிறுவனம் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 10 மெகா வோல்ட் மின்சக்தி திட்டத்தை வவுனியாவில் காத்தான் சின்னக்குளம் என்ற இடத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

vydexa_1.jpg

இந்த தொகுதி திட்டம் 54 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கிராம மக்களுக்கு முழு அளவில் மின்சாரத்தை வழங்கக்கூடிய திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த திட்டத்துக்கு நாளாந்தம் சூரிய ஒளி முறையாக கிடைப்பதற்கான வசதிகள் இங்கு இருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 3800 மெற்றிக்தொன் டீசல் மூலமாக பெறப்படும் மின்சாரத்திற்கான செலவு சேமிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீதி விளக்குகள் வழிபாட்டு தலங்களுக்கான மின்சாரம் உள்ளிட்ட உள்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் இச்செயற்திட்டத்தின் மூலம் மேம்படையக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/59837

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

அமெரிக்காவிற்க்கு நார்வே உற்பத்திசெய்யும் சுத்தமான மின்சாரம்....

கடந்தாண்டு நார்வே நாட்டின் பகாசுர அரசு எண்ணெய் நிறுவனம் Statoil தான் பெயரை Equinor என்று மாற்றிக்கொண்டது, ஆயில் என்பது நிரந்தரம் அல்ல மேலும் ஆண் பெண் அனைவரும் சமம் என்பதை குறிக்கும் Equality என்பதை பெயராக மாற்றிக்கொண்டது. மேலும் ஆழ்கடல் எண்ணெய் உற்பத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நோக்கி நகர்கின்றது.

கடந்தவாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் 5லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் கடல் காற்றாலை(Offshore Wind Farms) புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில்(Renewable Energy Sources) இருந்து உற்பத்தி செய்ய ஒப்பந்தம் 3பில்லியன் டாலர்களுக்கு கையெழுத்தானது.

ஆபத்து நிறைந்த கூடங்குளம் மின் திட்டமும் ஆபத்தும் அணுக்கழிவு அபாயம் இல்லாத மேலே சொன்ன கடல் காற்றாலை பொருளாதார ஒப்பீட்டு அட்டவணை கீழே..

கூடங்குளம் அணுவுலை யூனிட்-1 மற்றும் யூனிட்-2, 2x1000MW = US$ 2.50 billion
கூடங்குளம் அணுவுலை யூனிட்-3 மற்றும் யூனிட்-4, 2x1000MW= US$ 5.75 billion

அமெரிக்க கடல் காற்றாலை மின்சார திட்டம் 1200MW = US$ 3 billion

அமெரிக்காவின் GE நிறுவனம் மூலம் நமக்கு அணுவுலை விற்கும் அமெரிக்க அவர்களின் நியூயார்க் மாநிலத்திற்கு 9000MW மின்சாரத்தை அதாவது 100% கடல் காற்றாலை மூலம் 2040ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற தொலைநோக்கு திட்டம் வியக்கவைக்கிறது...

நாம் காசை கொடுத்து கருமத்தை வாங்குகிறோம்....

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: à®à®®à¯à®¤à¯à®¤à®¿à®°à®®à¯, வானமà¯, வà¯à®³à®¿à®ªà¯à®ªà¯à®±à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தணà¯à®£à¯à®°à¯

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.