Jump to content

அரசாங்க வங்கியொன்றை தனியார் மயப்படுத்த ஆயத்தம் - ஜே.வி.பி


Recommended Posts

அரசாங்க வங்கியொன்றை தனியார் மயப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவதாக அவர் இதன்போது குற்றம்சாட்டினார்.

http://www.hirunews.lk/tamil/218968/அரசாங்க-வங்கியொன்றை-தனியார்-மயப்படுத்த-ஆயத்தம்-ஜே-வி-பி

மக்கள் வங்கியை தனியார் மயப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் அரசாங்கமும் பல்வேறு உபாயமார்க்கங்களை வகுத்துவருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

நாட்டின் நிதித்துறைக்கும் திறைசேரிக்கும் பாரிய பங்களிப்பை வழங்கி வரும் மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்த இடமளிக்க மாட்டோம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தேசிய சொத்துகளை விற்பனை செய்ய தற்போதைய அரசாங்கம் விசேட பொறிமுறையொன்றை பின்பற்றுகிறது. குறித்த நிறுவனங்களில் தொழில்புரியும் ஊழியர் படைக்குத் தெரியாமல் அந்தச் செயற்பாட்டை செய்கின்றனர். தேசிய சொத்துக்கைள தாரைவார்க்கும் செயற்பாடு எவ்வாறு துரிதமாகவும் சூட்சமமாகவும் நடைபெறுகிறதென கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் வழங்கியதிலிருந்து தெரிந்துக்கொள்ள முடியும். அதேபோன்று செவனகல மற்றும் பெலவத்தை சீனித் தொழிற்சாலைகளையும் விற்பனை செய்துள்ளனர்.

தற்போது மக்கள் வங்கியை தனியார்மயப்படுத்தும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். எமது நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தும் ஒரு வங்கியே மக்கள் வங்கி. அரசாங்கத்தின் நிதிக் கட்டமைப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததென 1997ஆம் ஆண்டு ஆசியாவிலும் 2008 அமெரிக்காவை மையமாக கொண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் மூலம் அறிந்துக்கொள்ள முடியும்.

ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது வளர்ச்சியடைந்து வந்துக்கொண்டிருந்த இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சிகண்டது. 2008ஆம் ஆண்டு பல உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்தமையை நாம் கண்டோம். ஆனால், அரச நிதிக் கட்டமைப்பு பலமாகவிருந்த நாடுகள் அன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்திருந்தன.அரச வங்கிகள் நாட்டின் நிதிக் கட்டமைப்புக்கு அப்பால் நாட்டின் அனைத்து பொருளாதார துறைகளிலும் தாக்கம் செலுத்துகின்றன. பொருளாதாரத்தை பாதுகாக்க முப்படைகளை அனுப்ப முடியாது.

அதற்குத் தேவையானது, அரச நிதிக் கட்டமைப்பை போன்று அரச நிதிக்கொள்கைகளை பலப்படுத்துவதாகும். கடந்த 15 வருடங்களாக ஆட்சிபுரியும் அரசுகள் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளுக்கு அமைய அரச வங்கிகளை தனியார்மயப்படுத்த முயற்சித்துள்ளன.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

https://www.thinakaran.lk/2019/06/24/உள்நாடு/36250/மக்கள்-வங்கியை-தனியார்-மயப்படுத்த-இடமளியோம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.