Jump to content

சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை இந்தியாவுக்கு இழுக்க அரசு அதிரடி: சலுகைகளை அள்ளிவிட திட்டம்


Recommended Posts

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடப்பதால் தொழில் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. இந்நிலையில், இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் தொழிலை தொடர்ந்து நடத்தவும் வசதியாக சீனாவில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேற திட்டமிட்டுள்ளன.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களுக்கு பல்வேறு வர்த்தகச் சலுகைகள்,  ஊக்கத் தொகைகள் கொடுத்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.நிதி சலுகைகள், ஊக்கத் தொகை மற்றும் வியட்நாம் அளிப்பது போல் வரி விடுமுறை காலம் போன்றவற்றை அளித்து தொழில் நிறுவனங்களை கவர்ந்து இழுக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், காலணிகள், பொம்மைகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் அளித்து இங்கு தொழில் தொடங்க வருமாறு அழைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் வர்த்தக துறை அமைச்சகத்தின் ஆவணங்கள் அடிப்படையில் மேற்கண்ட தகவலை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வரிச்சலுகைகள் அளி  த்து தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை வியட்நாம், மலேசியா போன்ற நாடுகள் அடைந்துள்ளன. இந்த வழியில் இந்தியா தொழில் முதலீடுகளை கவர்வதில் பின்தங்கியுள்ளது. வர்த்தக துறை அமைச்சகம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்றால் புதிய நிதியமைச்சரின் ஒப்புதலை பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்பாக வர்த்தக துறை அமைச்சகம் உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நாடு முழுவதும் தொழில் தொடங்குவதற்கு வசதியாக, கடற்கரை நகரங்களில் தொழிற்சாலை மண்டலங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இதன் மூலம் ஊக்கத் தொகை கொடுத்து அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதற்கு வசதி ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு சுற்றறிக்கையை வர்த்தக துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இந்த திட்டம், இந்தியாவின் உற்பத்தி தொழிலை மேம்படுத்த உதவும் இதன் மூலம் பிரதமரின் முன்னுரிமை திட்டமான ‘மேக் இன் இந்தியா’ பெரிதும் பயன்படும். வரும் 2020ல் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி துறையின் பங்கு 25 சதவீதம் அதிகரிக்கும். இதன் மூலம் சீனாவுடனான பெரும் வர்த்தக பற்றாக்குறை குறையும் என்று நம்பப்படுகிறது.

சீனாவில் இருந்து 95 சதவீதம் அளவுக்கு இறக்குமதி செய்யப்படும் .ஸ்மார்ட் போன், நுகர்வோர் வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள், பேர்பார்ட்ஸ், தினசரி பயன்படுத்தப்படும் பெட் லினென், கிச்சன்வேர் ஆகிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்களில் சீன கம்பெனிகள் முதலீடு செய்யும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று அந்நிய நேரடி முதலீடு கொள்கையை கவனிக்கும் தொழில் துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505483

 

வியட்னாம்  தான் அமெரிக்க - சீன வர்த்த பிரச்சனையில் அதிகம் பயன்பெறுகின்றது என கீழுள்ள இணைப்பு கூறுகின்றது. சீனாவிற்கு எதிராக தென் சீன கடலில் வியட்னாமை வளர்க்க அமெரிக்க விரும்பலாம். 

MADE in VIETNAM 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.