Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Maithiri-Britain-714x450.jpg

மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பிரித்தானியா மறுப்பு!

இலங்கையில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பயங்கரவாத முறியடிப்பு உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினமென பிரித்தானியா எச்சரித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (புதன்கிழமை) ஒப்புதல் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே பிரித்தானியாவின் வெளிவிவகாரப் பணியக பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தனது நீண்டகால தடையை இலங்கை கைவிட விரும்புகிறது என்ற தகவல்கள் கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை அனைத்து சூழ்நிலைகளிலும் கொள்கை விவகாரமாக பயன்படுத்துவதை பிரித்தானியா எதிர்க்கிறது என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐ.நா பொதுச் சபையில் மரண தண்டனைக்கு எதிரான உலகளாவிய தடைக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ள நிலையில், இந்தக் கொள்கையை மாற்றியமைப்பது ஒரு பிற்போக்கு நடவடிக்கையென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இலங்கையின் அனைத்துலக நிலை மற்றும் சுற்றுலா தலமாகவும் வணிகத்திற்கான வளர்ந்து வரும் மையமாகவும் காணப்படும் அதன் நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/மரணதண்டனை-நடைமுறைப்படுத/

20 minutes ago, தமிழ் சிறி said:

மேலும் மரணதண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், பொலிஸ், பாதுகாப்பு மற்றும் பிற பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை பிரித்தானியா மறுபரிசீலனை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டால் நிச்சயம் மரணதண்டனையை நிறைவேற்றுவார். அதன்மூலம் தான் ஒரு 'பலமான' ; ' சட்டத்தை பாதுக்காக்கும் திறன் கொண்ட' தலைவராக காட்ட முனைகிறார். 

தேவையானால் மீண்டும் வென்ற பின்னர் மரண தண்டனையை நிறுத்தி விடுவார். அரசியலில் இதெல்லாம் சாகசம் இல்லை சகசம் . 

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனையை ஏனைய குற்றங்களுக்கும் இலங்கையில் பரிந்துரை செய்திடல்வேண்டும். 

தவிர ப்லம்பெயர் தேசங்களில் ஆவா, சைபர் எனக்குறூப்புகள் பெயரில் முகநூல் போன்ற பக்கங்களைப் பராமரிப்போரை இனங்கண்டு இருபத்துநாஙு மணி நேரத்தில் நாடுகடத்திடல்வேண்டும். 

அதைவிட இப்படியான குற்றப்பின்னணி உடையவர்களை ஆதரிக்கும் அப்புக்காத்துமார்களை தேசவிரோதிகளாக அறிவிக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Elugnajiru said:

மரணதண்டனையை ஏனைய குற்றங்களுக்கும் இலங்கையில் பரிந்துரை செய்திடல்வேண்டும். 

தவிர ப்லம்பெயர் தேசங்களில் ஆவா, சைபர் எனக்குறூப்புகள் பெயரில் முகநூல் போன்ற பக்கங்களைப் பராமரிப்போரை இனங்கண்டு இருபத்துநாஙு மணி நேரத்தில் நாடுகடத்திடல்வேண்டும். 

அதைவிட இப்படியான குற்றப்பின்னணி உடையவர்களை ஆதரிக்கும் அப்புக்காத்துமார்களை தேசவிரோதிகளாக அறிவிக்கவேண்டும்.

ஆசை... தோசை... அப்பளம்... வடை.... என்ற கதையாக இருக்கு. :grin:
இதெல்லாம்... நடக்கிற காரியமா... ?  😄

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.