Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிசாரின் துப்பாக்கி அபகரிப்பு ; மட்டக்களப்பில் குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம் - இது வரை இருவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாரின் துப்பாக்கி அபகரிப்பு ; மட்டக்களப்பில் குவிக்கப்பட்ட இராணுவத்தினரால் பதற்றம்  - இது வரை இருவர் கைது

மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் இன்று பகல்  சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கைதுப்பாக்கியை குறித்த இருவரும் பறித்துச் சென்றதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

vlcsnap-2019-07-04-16h11m19s794.png

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான இன்று வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

vlcsnap-2019-07-04-16h11m30s563.png

இந்நிலையில் இருவர் தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது மோட்டர் சைக்கிளை செலுத்தி சென்றவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரும் காயமடைந்தனர்

vlcsnap-2019-07-04-16h12m19s226.png

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடயில் ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து பொலிசார் மீது தாக்க முற்பட்டவேளை பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்றை இனம் தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார் இதனையடத்தே. அங்கு பதற்றம் ஏற்பட்டது 

vlcsnap-2019-07-04-16h11m54s320.png

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த இருவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர் 

vlcsnap-2019-07-04-16h12m19s226.png

இதேவேளை புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேவதிகமாக இராணுவத்தினர் பொலிசார் அழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மற்று விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/59742

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர் 

அடுத்து என்ன? இருவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்ற விடயம் ஊடகங்கள் அனைத்தையும் ஊடுருவிப் பாயலாம். அல்லது சம்பந்தரின் ஆயுத்போராட்ட அறிவிப்பு ஆரவாரப்படலாம்.😆

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அடுத்து என்ன? இருவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் என்ற விடயம் ஊடகங்கள் அனைத்தையும் ஊடுருவிப் பாயலாம். அல்லது சம்பந்தரின் ஆயுத்போராட்ட அறிவிப்பு ஆரவாரப்படலாம்.😆

அது முன்னர்.இப்போ வேறு ஆட்களை தேடுகிறார்கள்.நெடுக ஒரே ஆட்களைத் தேடி போர் அடிக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு- புதூரில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை: 21 பேர் கைது

batti-22-720x450.jpg

மட்டக்களப்பு புதூரில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதுடன் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு- புதூர்,  திமிலைதீவுப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில்  பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் நேற்று  முயற்சித்துள்ளனர்.

எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும்  பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.

இதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையிலேயே இன்றும், படையினர் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.