Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் ஒரு வரலாற்று அபூர்வம்!

July 5, 2019

image

இன்று கரும்புலி நாள். எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள். இன்றைய நாள்குறித்த சிறப்புக் கட்டுரையே இது. ஒருமுறை பொறுமையோடு இதனை நோக்குவோம்…!

தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல இடையில் வெம்பிப் பழுத்தவை போலாகிவிட்டன.

அமைதி என்ற மாயத்திரைக்குள் சமரசங்களும் இயலாமையும் தாண்டவமாடுகின்றன. இப்படியான இன்றைய உலகிலே பனிப்போர் கால கட்ட நெருக்கடிகளையும் தாண்டி புதிய உலக ஒழுங்கினுள்ளும் புகுந்து அதன் அழுத்தங்கட்கும் முகம் கொடுக்கத் தயாராகும் விடுதலைப்புலிகள்; இயக்கம் ” கரும்புலிகள் ” எனும் படையணியைப் போராட்ட வரலாற்றின் புதுவிசையாக அறிமுகம் செய்துள்ளது. தன்னலத்தை தனிநபர் சுதந்திரம் என்றும், மனித விழுமியகங்கள் அற்ற மேற்குலக அதிநவீன இயந்திர வாழ்க்கை முறையை ” அறிவியல் வெளிப்பாடு ” என்றும் கருதி தற்போதைய புதிய முதலாளிய பொருண்மிய ஒழுங்கின் கவர்ச்சியில் இருந்து விடுபட முடியாதோருக்கு இச் செய்தி ஏற்க முடியாத, ஏன் நம்ப முடியாத செய்தியாகத்தான் இருக்கும். ஏனேன்றால் மனித குலம் காணத மனித ஈகத்தின் அதி உயர் உச்ச வடிவமல்லவா இது !

இன்று கரும்புலிகள் போராட்ட வடிவத்தின் வரைவிலக்கணம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

முன்னர் சீனப் புரட்சியின் போது மாவோ, பாரிய மரபுவழி இராணுவங்களிற்கு எதிராகப் போரிட எவ்வாறு |கெரில்லா| போராட்ட முறையில் பல்வேறு உத்திகளைச் சூழ்நிலைக்கேற்ப புகுத்தினரோ, அவ்வாறு இன்று நவீன போர்முறைகட்கு எதிராகப் போராடும் ஒரு சிறிய தேசிய இனம் தனது ஆன்மீக பலத்தை மட்டும் நம்பிப் புகுத்திய புது வடிவம்தான் ” கரும்புலி ” படையணியாகின்றது. ” தன்னை இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரியின் பலம் மிக்க இலக்கினையோ அழிக்கும் படையணியை ” உருவாக்கும் எண்ணத்தை தலைவர் திரு வே. பிரபாகரன் தொடக்ககாலம் தொட்டே தனது மனதில் அடைகாத்து வந்துள்ளார். எண்ணிக்கை, படைபலம், கருவிகள் போன்றவற்றில் எதிரியைவிட அளவில் குறைந்த ஓரு போராட்ட அணி வெற்றியடைவதற்கு வெறும் வீராவேசத்திற்குப் பதிலாக விரக்தியையும், வீரத்திற்குப் பதிலாக மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட போர்த்திட்டமொன்றையும் அதேவேளை தன்னை இழப்பதன் முலம் இலக்கை வெற்றி கொள்ளும் உத்தியையும் இணைத்தே தலைவர் திரு வே.பிரபாகரன் கரும்புலிகள் என்ற புதிய போராயுதத்தை வடிவமைத்துள்ளார் என்பது வரலாறு சொல்லும் செய்தியாகும்.

எனவே மனித குலத்தின் உன்னத விழுமியமாக, உயரிய ஈகமாக பிறர்காகத் தன்னை அழித்தல் எனும் தற்கொடைப் பண்பாளர்களைக் கொண்ட படையணியை வரலாற்றில் சமகாலத்திலோ அல்லது முன்னரோ வேறேங்கும் காணமுடியாது. ” விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் ” பற்றி ஆய்வு செய்வோர் இதன் தோற்றுவாயைப் பழந்தமிழரின் மறவர் போர்ப் பரம்பரையில், யப்பானிய போர் மரபுகளில் தொட்டுகாட்ட முனைகின்றார்கள். யப்பானிய நிலமானிய முறைச் சமுதாய காலகட்டத்தில் யப்பானிய சக்கரவர்த்திகளின் முழு நம்பிக்கைக்குரிய போர் மரபுவழிப் பண்பாட்டைப் பின்பற்றும் ” சமுராய் ” எனப்படும் போர்வீரர்கள் தமக்குரிய போர் மரபாக தமக்கிட்ட ஆணைகளைச் செய்து முடிக்க முடியாத போது தமது மன்னர் தோல்வியைத் தழுவும் போது தாமும் தம்முயிரை மாய்ப்பது வழக்கம். இது அக்காலகட்ட நிலவுடமைச் சமுதாய மரபாக இருந்த போதும் யப்பானிய சமூகத்தில் இன்றும் தற்கொலை செய்யும் பழக்கம் ஒன்று நிலவுகின்றது. செப்படு| என்றும் பொது வழக்கில் ‘தராசி” என்றும் அழைக்கப்படும் பண்டைய போர் மரபின் தற்கொலைச் செயற்பாடு இன்று அழுத்தங்களிலிருந்து விடுபட யப்பானியர் பின்பற்றும் அவல நிலையாகிவிட்டது. எனவே இதனை விடுதலைப் புலிகளின் பண்பாட்டோடு ஒப்பிட முடியாது. 2ம் உலகப் போரின் போது 1941ம் ஆண்டு மார்கழியில் அமெரிக்க கடற்ப்படைக் கப்பல்களைப் பேர்ள் துறைமுகத்தில் தாக்கியழிக்க விமானமோட்டி யோருவர் தனது விமானத்தைப் போர்கப்பலுக்குள் செலுத்தியமைப் போன்று அபூவமான சம்பவங்கள் யப்பானிய வரலாற்றில் உண்டு. ஆனால் தற்கொலை வீரர்களைக் கொண்ட ஒரு படையணியை அதன் தொடர்ச்சியான செயற்பாட்டை அங்கு காணமுடியாது.

இது போலவே பழந்தமிழர் போர்ப்பரம்பரையானது மறவர் பரம்பரையின் அரசனுக்காக தன்னை ஈகம் செய்யும் போர்மரபாக் கொள்ளப் பட்டதாக அறிய முடிகின்றது. உண்மையான தமிழ்பண்பாடு எதுவேன அறிய முயன்ற தமிழறிஞர்கள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இரத்தம் சிந்திப் போர் புரியும் வீரப் பண்பாட்டையே தமிழர் பண்பாடாக விதந்துரைக்க நேரிட்டது. வீரப் போரில் வீரச்சாவடைவதே ஆண்மகனின் கடமையேன இளவயதிலேயே கற்பிக்கும் வீரத்தாய்ப் பண்பாடு, போரில் புறமுதுகு காட்டாது போரிட்டு உயிரை இழந்தோரை நடுகற்களால் நினைவு கூர்ந்து அவர்களைத் தெய்வங்களாக மதித்து வருவது போன்றன பழந்தமிழர் பண்பாடாகும்.

அதுபோலவே தமது அரசின்மேல் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தம்மை இழக்க முன் வருவதும் அவர் தோல்வியைத் தழுவும் போதும் இறக்கும்போதும் தாமும் ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க” இறத்தலும் அத்துடன் அவிப்பலி, தன்னை வெட்டல் என்பன பல போர் ஒழுக்கங்களாகவும் அந்தப் போர் மரபு பேணப்பட்டிருந்தது. அதேபோல போரில் தமது சேனைத் தலைவன் வெற்றியீட்ட வேண்டும் என்பதற்காக “கொற்றவை” க்குத் தனது தலையைத் தாமே வெட்டிப் பலி கொடுக்கும் வழக்கமும் இருந்தது. அத்தோடு போரில் தோல்வி, சிறைப்பட நேரும் அவமானம் போன்றவை ஏற்படும் போது அரசனானவன் உண்ணாநோன்பிருந்து உயிரை விடும் “வடக்கிருத்தல்” எனும் போரோழுக்கமும் இருந்திருக்கின்றது. இதனை யப்பானிய மரபோடு ஆய்வாளர் ஒப்பிடுவர். ஆனால் தற்கொடை என்பதை இத்தகைய சூளுரைத்தல், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் அவமானத்தில் இருந்து விடுபடல் என்கிற நிலைகளிருந்து விடுவித்து, அதையொரு பரந்த அடிப்படையில் மக்களுக்கான போராட்ட அணியாக்கியமை இங்கே பாரிய குணாம்ச வேறுபாடாகின்றது. ஏனேன்றால் இத் பழந்தமிழர் பண்பாடெல்லாம் இடையில் பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டு. வந்தவனெல்லாம் எமது இனத்தை அடிமைப் படுத்தி அடிமை வாழ்வே தமிழர் பண்பாடாகிய வரலாறும் தமிழர்க்குரியது அல்லவா ?

இது முன்னைய காலம். சமகாலத்தை நோக்கும் போது உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தற்கொடைப் போராளிகளின் தாக்குதலை அவதானிக்க முடியும். குறிப்பாக லெபனான் தலைநகரான பெய்ரூட்டில் அமெரிக்க படைத்தளம் மீது வாகனத் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமையைக் குறிப்பிட முடியும். இப்போது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இஸ்லாமிய கமாஸ் இயக்கப் போராளிகள் சில தற்கொடைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இத்தாக்குதல்கள் ‘கொலைக்கு கொலை என்கின்ற வகையில் உடனடியாக எழும் பழிவாங்கல் உணர்வின் காரணமாகத் தூண்டப்படுவதால் பல தடவைகளில் எதிர்பார்த்த விளைவுகளைத் தராமல் தாக்கங்களை விளைவிக்காமலேயே போய்விட்டன. முழுமையான போர்த்திட்டமொன்றின் பகுதியாக அல்லாமல் தனித்தனி உதிரிச் சம்பவங்களாக இவை அமைவதால் இவை தோற்றுவிக்க வேண்டிய பாரிய அச்ச உணர்வு, ஆழமான தாக்கங்கள் இஸ்ரேல் தரப்பில் ஏற்படவில்லை. இப்போராளிகளின் ஈகத்தைப் போற்றும் அதே வேளை, எமது கரும்புலிகள் போராட்ட வடிவம் எத்தகைய தாக்கத்தை எதிரியின் தரப்பில் எற்படுத்தியுள்ளது என்பதையும் கருத்தில் எடுக்க வேண்டும். சிங்கள இராணுவத்தரப்பில் தோற்றுவிக்கப் பட்டுள்ள பெரும் பீதி உணர்வு இத்தாக்குதல்களை என்ன பாடுபட்டாலும் தடுக்க முடியாது என்கிற அவநம்பிக்கை உணர்வு என்பவற்றை வரலாற்றில் வேறேங்கும் கரும்புலிகளின் தற்கொடைத் தாக்குதல்கள் தோற்றுவித்தமை போல் காண முடிவதில்லை.

அத்தோடு இன்றைய நவீன உலகில் போர்முறைகளும் வெகு நவீனமாகின்றன. இனிவரும் போர்முறைகளில் இயந்திர மனிதன், கணணிகள் என்பனவே மிகக் கூடிய பங்கினை வகிக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால் எந்த உயர் தொழில் நுட்பத்தாலும் கரும்புலித்தாக்குதல் முறையைத் தடுக்க முடியாது என்பதே உண்மை நிலையாகும். ஏனேன்றால் உணர்வும் ஈகமும் மட்டுமல்லாமல் மனிதக் கணணியாகும் அல்லவா கரும்புலிகள் செயற்படுகின்றனர். இம்மியளாவும் இலக்கு பிசகாத, நேரம் தவறாத இடியோசை போல், சூறாவளி போல் மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் இவ்வுலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டன.

எனவே இத்தகையதொரு வியத்தகு மனோபலத்துடன் மேற்கொள்ளப்படும் கரும்புலித் தாக்குதல்கள் உலக வரலாற்றில் மிக அப+வமாகத் தெறிக்கும் ஒளிக்கீற்று என்பதே என்றும் வரலாறு சொல்லும் செய்தியாக இருக்கப் போகின்றது. விடுதலைப் புலிகளின் புதிய போர் மரபாக தோற்றுவிக்கப்பட்ட கரும்புலிப்படையணி தமிழ் இனத்தின் விடுதலை வெகு தூரத்தில் இல்லை என்பதை கட்டியமாகின்றது.

இச் சிறிய தேசத்திற்குள்ளிருந்து தோன்றிய இப்படையணியின் பேரொளி எதிரியைக் குருடாக்;கி விடுவதோடு இதனைப் புரிய முடியாத எம்மவரையும் வரலாற்று குருடராக்கிவிடும் அபூர்வத்தன்மை கொண்டது. காலிக் கீழ் நசுக்கப்பட்ட இனத்தின் இதயத்தில் இருந்து தோன்றிய தீப்பழம்பாகத் கனன்று ஏரியும் விடுதலைத் தீ தான் ”கரும்புலிகள் ” ஆகும்.

– உயிராயுதத்திலிருந்து…..

 

http://www.errimalai.com/?p=6158

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகளுக்கு வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

65747132_10157093306193801_5163860740716

 

அவர்கள் ஓட்டிய படகுகளை
அவர்கள் ஓட்டிய விமானங்களை 
பட்டமாய் பறக்க விடுமெனது 
சிறுவர்களுக்கு தெரியும் 
இது யாருடைய வானமென

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.