Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா

Featured Replies

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தினார்.

தேசிய தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/31874

  • தொடங்கியவர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதில் இழுபறி

தோட்டத்தொழிலாளர்களுக்கு 50ரூபா வழங்க திறைசேரியினால் தெரிவிக்கப்பட்ட 600 மில்லியன் ரூபாவை தருவதாக எழுத்து மூலம் அறிவித்தால் தேயிலை சபையினால் வாக்குறுதியளித்த  600 மில்லியனையும் விடுவிக்க தயார் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

up_contry.jpg

அத்துடன் இந்த அதிகரிப்பை தொழிலாளர்களின் சம்பளத்துடன் இணைப்பது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60687

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சைக்காரனுக்கே குறைந்தது 100 ரூபா கொடுக்காட்டி தூக்கி வீசுறாங்கள். 

அந்த நாட்டில் 50 ரூபாவுக்கு என்ன வாக்க முடியும்.

அமைச்சர் இன்னும் எந்த நாட்டில் வாழ்கிறார்..??! 

  • தொடங்கியவர்

50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு, சம்பளம் அல்ல.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முதுகெலும்பாய் இருக்கும் இந்த மக்கள் நீநீநீநீநீண்ட காலமாமக எல்லோராலும் புறக்கணிக்கப்படுபவர்கள்.      

  • தொடங்கியவர்

Hotel near Buckingham Palace serves $ 200 cup of Ceylon tea by P.M. David Silva & Sons

image_31ba59c2d4.jpg

The rare tea is weighed with scales and brewed in a silver tea pot. It’s served to customers using gold tweezers – Courtesy The Rubens At The Palace

 

CNN: It’s no secret that the British are very serious about their tea.

Now a London hotel has taken this dedication to new heights by offering what’s been dubbed the UK’s most expensive cuppa. The Rubens at The Palace is now serving a rare tea blend for £ 500 ($ 620) per pot, which works out to around $ 200 a cup.

http://www.ft.lk/front-page/Hotel-near-Buckingham-Palace-serves-200-cup-of-Ceylon-tea-by-P-M-David-Silva-Sons/44-682175

 

  • தொடங்கியவர்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க முடியாது – அமைச்சர் நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து கொடுப்பது முடியாத காரியம் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அடுத்த முறை வேதன அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை இடம்பெறும் போது அந்த ஐம்பது ரூபாயையும் சேர்த்து அதன் அடிப்படையிலேயே வேதனை அதிகரிப்பு கோரப்படும். அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தாம் வழங்குவதாக ஒப்புகொண்ட 600 மில்லியன் ரூபாவை வழங்க தயாராக இருக்கின்ற போதும் திறைசேறி வழங்குவதாக ஒப்புக்கொண்ட 600 மில்லியன் ரூபாவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த தொகையை வேதனத்தோடு அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையிலேயே வழங்க முடியும். அதேநேரம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேயிலை ஏற்றுமதியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைச்சர்களின் செலவினங்களை 15 சத வீதத்தால் குறைக்குமாறு திறைசேரி அறிவித்திருக்கிறது.

ஏப்ரல்21 தாக்குதலுக்குப் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து வழங்குவது கடினமான காரியம். அதற்கு தம்மால் இணங்க முடியாது.  இதனை தாம் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220589/பெருந்தோட்ட-தொழிலாளர்களுக்கு-50-ரூபாய்-மேலதிக-கொடுப்பனவை-வழங்க-முடியாது-அமைச்சர்-நவீன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.