Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல்..

Featured Replies

பாடப் புத்தகங்களில் இருந்து கல்வி கற்றல்

நீங்கள் பள்ளிப் பாடப்புத்தகம் படிக்கும்போது என்ன செய்கின்றீர்கள்? எவ்வாறு படிக்கின்றீர்கள்?

நீங்கள் பாடப்புத்தகம் படிப்பதற்கும், மற்றைய புத்தகங்களை உதாரணமாக பொழுதுபோக்கு சஞ்சிகைகளை வாசிக்கும் போதும் உள்ள வித்தியாசங்கள் எவை?

நீங்கள் பாடப்புத்தகம் படிக்கும்போது கடினமாக இருந்தால், அவ்வாறு அது கடினமாகத் தோன்றுவதற்கான காரணங்கள் என்ன?

கீழே பாடப்புத்தகங்களை எப்படி படிப்பது என்பது சம்மந்தமாக சில விடயங்கள் பேசப்படுகின்றது.

1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல்

2. மனதை ஒருமுகப்படுத்தி படித்தல்

3. படித்தபின் படித்தவற்றை மனதினுள் ஒழுங்குபடுத்துதல்

இவற்றின் நோக்கங்கள்

நீங்கள் வாசிப்பதைபற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள உதவுதல்

நீங்கள் உங்கள் நினைவாற்றலைப் பெருக்க உதவுவதோடு பாடப்புத்தகத்தில் படித்தவற்றை விளங்கிக்கொள்ள உதவுதல்

1. படிப்பதற்கு ஆயத்தமாகுதல்

* மனதை பாடப்புத்தகத்தில் ஒருமுகப்படுத்தி வையுங்கள்

* நீங்கள் பாடப்புத்தகத்தில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்துகின்றீர்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்

* படிப்பதற்கு சாதகமான புறச்சூழ்நிலையை உருவாக்கிகொள்ளுங்கள் - அமைதி, சுத்தம்...

* படிப்பதற்கு தேவையான உங்கள் தனிப்பட்ட தேவைகளை அறிந்துகொள்ளுங்கள்

* படிக்கும் கால அளவை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

* படிப்பதற்கு உற்சாகமூட்டும் விடயங்களை செய்யுங்கள் - படிக்கும் மேசையை துப்பரவாக வைத்திருத்தல், குடிப்பதற்கு அருகில்தேனீர் வைத்திருத்தல்

இலக்கை தீர்மானித்தல்

SQ3R (கணிப்புக்கள், கேள்விகள், வாசிப்பு, மூளையினுள் பதிதல்/ மீளநினைவுபடுத்தல், மீளவும் திரும்பப் பார்த்தல் ) முறையை பயன்படுத்துங்கள்

குறிப்பு: SQ3R stands for Survey, Question, Read, Recite and Review

ஏன் கணிப்புக்கள் தேவை?

இது உங்கள் கவனத்தை சரியான திசையில் செலுத்த உதவும்

இது முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ள உதவும்

இது உங்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவும்

உங்கள் பாடப்புத்தகத்தை வாசிக்கக்கூடிய சிறிய பகுதிகளாகப் பிரித்து கொள்ளுங்கள் (பந்திகளை அல்லது பிரிவுகளை வழிகாட்டியாக வைத்திருங்கள்)

1. கணிப்புக்கள்

இது clue களை கண்டுபிடிப்பது போன்றதாகும், அதாவது கீழ்வருவனவற்றை கொண்டது...

Titles, Headings, & Subheadings

Learning Objectives

Preview/Review/Summary Statements

Graphic Highlighting (bold, italics)

Visuals/Graphs/Charts

Examples & Textboxes

இவ்வாறு இன்னும் பல....

2. கேள்விகள்

ஏன் கேள்விகள் தேவை?

ஆர்வத்தை உருவாக்குவதற்கு

அடிப்படை விளக்கத்தை உருவாக்குவதற்கு

பன்முகத் தன்மையை உருவாக்குவதற்கு

மனதை ஒருமுகப்படுத்தி பாடத்தினுள் கொண்டு செல்வதற்கு

எப்படி கேள்விகள் கேட்பது?

Use titles, headings, and subheadings to create questions

பாடப்புத்தகம் அல்லாத வேறு மூலங்களில் இருந்தும் கேள்விகளை தயார் செய்யுங்கள்

வாசிக்கும் போது வரும் கேள்விகளை எழுதுங்கள்

கேள்விகளை இலக்கை அடைவதற்குரிய குறியாக அமைத்தல்

Stick to your time limits for the session

Pay attention to the visual layout

Use questions help with focus

Use highlighting sparingly

3. வாசிப்பு

பாடப்புத்தத்தின் அலகுகளை சிறிய பகுதிகளாக பிரித்து படியுங்கள்

வாசித்த பகுதியை விளங்கிக் கொண்டபின்பே அடுத்த புதிய பகுதியினுள் வாசிப்பதற்கு செல்லுங்கள்

வாசிக்கும் போது பாடம் சம்மந்தமாக உங்கள் மனதினுள் எழும் வினாக்களிற்க்கு உங்களால் பதில் கூறக்கூடியதாக இருக்க வேண்டும்

தற்போது நீங்கள் வாசித்த பகுதியை/பந்தியை முன்னம் நீங்கள் வாசித்த பகுதியுடன்/பந்தியுடன் உங்களால் தொடர்புபடுத்தக் கூடியதாக இருக்கவேண்டும்

4. மூளையினுள் ஒழுங்காக பதிதல்/ மீள்நினைவூட்டுதல் ***மீள்நினைவூட்டுதல் மிக முக்கியம்***

நீங்கள் என்ன வாசித்தீர்கள் என்பதை உங்கள் சொந்த மொழிநடையில் உங்களுக்கு விளங்கப்படுத்துங்கள்

உங்களால் எந்தவகையில் நினைவுபடுத்துவது உங்கள் மூளைக்கு இலகுவாக இருக்கின்றதோ அந்த வழியில் படிக்கும் விடயங்களை உங்கள் மூளையினுள் பதியுங்கள்

ஒரு குறிப்பிட்ட அலகின் வெவ்வேறு பகுதிகள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதை உங்களுக்கு விபரியுங்கள்

உங்களிற்கு எழும் கேள்விகளிற்கு விடை அளியுங்கள்

5. மீளவும் திரும்பிப் பார்த்தல் (வாசித்த பிற்பாடு) ***மிக முக்கியம்***

நீங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியை வாசித்து முடித்ததும் செய்யவேண்டும்

பேராசிரியரினால் தரப்படும் விரிவுரையுடன் பாடப்புத்தகத்தில் படித்ததை ஒருங்கிணைத்து பார்க்கக்கூடியதாய் இருக்க வேண்டும்

உங்கள் பேராசிரியரிடம் கேட்பதற்கு கேள்விகளின் பட்டியலை தயார் செய்யுங்கள்

நீங்கள் என்ன வாசித்தீர்கள் என்பதை பற்றிய ஒரு சுருக்கத்தை எழுதுங்கள்

SQ3R பயிற்சி:

ஒரு பந்தியை வாசித்து அதில் clue களை தேடுங்கள்

இலக்கு: குறிப்பிட்ட பந்தியில் கூறப்படும் அடிப்படை விடயத்தை கண்டுபிடியுங்கள்

பாடப்புத்தக தகவல்களை கட்டுக்கோப்பாக கொண்டுவருவதற்கான நுணுக்கங்கள்:

குறிப்பு எடுத்தல்

வரைபடங்களை பாவித்தல் - Flow Charts/Concept Maps

தொடர்ச்சியான காலக் கணிப்பை பின்பற்றல் - Continuums/Time Lines

அடிப்படை தத்துவத்தை விளக்கும் ஒரு வரைபடத்தை உருவாக்கல் - Sample Concept Map

ஒரு விடயத்திற்கு குறிப்பு எடுக்கும் போது பின்வரும் கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள், உதாரணமாக சூழல் மாசடைதல் என வைத்துக்கொண்டால்

அப்படியென்றால் என்ன?

அதை ஏற்படுத்துவது எவை?

அதைத் தடுப்பதற்குரிய வழிவகைகள் எவை?

சுய பரிசோதனை

நான்கு விதமான கேள்விகளிற்கான படிமுறைகள்:

படிமுறை ஒன்று - தரவுகள், தேற்றங்கள்

SWOT என்றால் என்ன? இதை எப்போது, யார் அறிமுகப்படுத்தினார்?

படிமுறை இரண்டு - ஆராய்தல்

எவ்வாறு SWOT முடிவுகள் எடுக்கும் தீர்மானத்தில் உதவுகின்றது?

படிமுறை மூன்று - எடுகோள்

SWOT விளக்கம் மூலம் நான் எவ்வாறு எனது கம்பனியின் விற்பனை அளவை அதிகரிக்க முடியும்?

படிமுறை நான்கு - மதிப்பீடு

SWOT விளக்கத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் எவை?

அடிப்படை திட்டம்

* கல்விகற்பதில் உங்கள் இலக்குகளை உருவாக்குங்கள்

* எதை கற்கக் போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள்

* கற்றலுக்குரிய ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்

* எப்படி கற்கப் போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள்

* கற்ற விடயங்களை அளவுகோலிடுவதற்கு வழிகள் தேடுங்கள்

* உங்கள் கற்றல் திட்டம் எப்படி வேலை செய்கின்றது என்பதை கண்டறியுங்கள்

கீழ்க்கண்ட சில பிரச்சனைகளிற்கு தீர்வு கண்டு நீங்களே உங்கள் கற்றலுக்கான ஒரு நிபுணராக இருங்கள்

பிரச்சனை 01: ஒவ்வொரு முறையும் பாடப்புத்தகத்தை கற்கும் போது உங்களுக்கு தூக்கம் வருதல்

பிரச்சனை 02: உங்களால் ஒரு பாடப்புத்தகத்தில் உள்ள தனித்தனி அலகுகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளிற்கு விடைகூறக்கூடியதாக இருத்தல். ஆனால், முழு அலகுகளையும் இணைத்து அல்லது ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி கேட்கப்படும் கட்டுரை வினாக்களிற்கு பதில் அளிக்க முடியாது இருத்தல்

பிரச்சனை 03: பாடப்புத்தகத்தை வாசிக்கும்போது படிக்கும் விடயங்கள் உடனடியாக மறந்துபோதல்

பிரச்சனை 04: படிக்கும்போது மனம் அலைபாய்தல்

பிரச்சனை 05: ஒரு விடயத்தை படிப்பதற்கு அல்லது விளங்கிக்கொள்வதற்கு நீண்டநேரம் எடுத்தல்

பாடசாலை அல்லது பல்கலைக்கழக பாடப்புத்தகங்களை வாசிக்கும் போது நீங்கள் பாவிக்கும் நுணுக்கங்களை, இது சம்மந்தமான பிரச்சனைகளை மற்றும் சந்தேகங்களை மற்றைய கள உறவுகளுடன் பரிமாறிக்கொள்ளவும். மேலும் மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்களில் பிழைகள் இருந்தாலும் சுட்டிக் காட்டவும். நன்றி!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

படிப்பு என்றால் இங்கு சூனியம் மாதிரி இருக்கு? :blink: யாராவது ஏதாவது எழுதி விடயத்தை சூடாக்குங்கோ! யாழ் களத்தில் உள்ள சக மாணவர்களிற்காக இன்னொரு மாணவனால் இந்த தலைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாராவது ஆசிரியர்கள் இங்கு இருந்தால் மாணவர்களாகிய எமக்கு உற்சாகம் தரவும். :P

மாப்பி இந்த கட்டுரையை மோகண் அண்ணாவிடம் கொடுத்து யாழ் சிறுவர் பக்கத்தில் இணைக்கலாம்

  • தொடங்கியவர்

இந்த கட்டுரை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களிற்கும் உதவக்கூடும்.

இந்த கட்டுரை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுவர்களிற்கும் உதவக்கூடும்.

எமக்காகவா? லெக்ஷர் நேரத்திலையே பாடத்தை படிப்பதில்லை அதை விட்டு விட்டு புத்தகத்தில் எல்லாம் நாம் படிக்கப் போகின்றோமா :blink:

எமக்காகவா? லெக்ஷர் நேரத்திலையே பாடத்தை படிப்பதில்லை அதை விட்டு விட்டு புத்தகத்தில் எல்லாம் நாம் படிக்கப் போகின்றோமா :lol:

அப்படி போடுங்கோ அரிவாள,மாப்பிக்கு என்ன ஆச்சு

மாப்பி நாங்க புத்தகத்தை தொடுறதே இல்லை,லெக்சர்ஸ் நேரமும் எங்கன்ட பாடு ஆனால் டியூரோரியல்க்கு மட்டும் ஒழுங்கா சென்று அவை தாறது எல்லாத்தையும் படிப்போம்,

அது நம்மளை டிஸ்சின்சன் எடுக்க பண்ணிடும்

:P

  • தொடங்கியவர்

நீங்கள் சொன்ன முறையில் படித்தால் 60 + எடுத்து சோதனை பாஸ் செய்வதே பெரிய திண்டாட்டமாக இருக்குமே? அப்பா, அம்மா தரும் காசிலும், கடன் எடுத்தும் படித்துக்கொண்டு இப்படி துரோகம் செய்யலாமா?

மாப்பி என்னொடு படிப்பவர்கள் இங்கே அப்படி தான் படிக்கிறார்கள் இங்கே வந்த புதிதில் எனக்கு மிகவும் கடினமா தான் இருந்தது,ஏனுடைய சீனியர்கள் தான் இந்த வழியை பின்பற்ற சொன்னவர்கள்

மற்றும் புத்தகத்திலும் லெக்சர் சொல்லுவார் மார்க் பண்ண சொல்லி அதையும் தான் நான் படித்து போன செமிஸ்டர் எனக்கு 5பாடதிலும் டிஸ்சின்சன் கிடைத்தது ஒரு பாடம் கிரடிட் கிடைத்தது ஆகவே முழுக்க புத்தகத்தை நாங்கள் இங்கே பார்ப்பது இல்லை அது ஒரு 10% தான் நான்.சிட்னியில் கனபேர் இவ்வாறு தான் படிப்பார்கள் வேண்டுமென்றா கேட்டுபாருங்கோ இதை தான் எங்களுக்கு யூனியில சொல்லி தருவீனம்

  • தொடங்கியவர்

ஆனால் நீங்கள் பாடப்புத்தகத்தை படிக்காது, புள்ளி பெறுவதை மையப்படுத்தி மட்டும் படிக்கும் போது அது உங்களுக்குத்தான் கூடாது. அதாவது அந்த அந்த செமஸ்டர் முடிந்ததும் உங்களுக்கு ஒரு செமஸ்டரில், அதாவது மூன்று மாதங்களில் என்ன படித்தீர்கள் என்பது விரைவில் மறந்து போகும். எனவே, எதிர்காலத்தில் தொழிலில் அல்லது அடுத்த கட்ட படிப்பில் இவற்றை பிரயோகிப்பது மிகக்கடினமாக இருக்கும். உந்த பாலாய்ப் போன சீனியர்கள் தான் இந்த நல்ல பிள்ளைகளை பழுதாக்குவது! சீனியர் மாணவர்களின் தலையில் ரெண்டு போடு போட்டால் தான் மற்றையவர்கள் உருப்படுவார்கள். :angry:

மனுசனை யுனிலதான் வாத்திமர் களுத்தறுக்கிறாங்கள் என்று யாழ் வந்தால் இந்த மாப்பி ஓவர கழுத்தறுக்குது :angry:

ஆனால் நீங்கள் பாடப்புத்தகத்தை படிக்காது, புள்ளி பெறுவதை மையப்படுத்தி மட்டும் படிக்கும் போது அது உங்களுக்குத்தான் கூடாது. அதாவது அந்த அந்த செமஸ்டர் முடிந்ததும் உங்களுக்கு ஒரு செமஸ்டரில், அதாவது மூன்று மாதங்களில் என்ன படித்தீர்கள் என்பது விரைவில் மறந்து போகும். எனவே, எதிர்காலத்தில் தொழிலில் அல்லது அடுத்த கட்ட படிப்பில் இவற்றை பிரயோகிப்பது மிகக்கடினமாக இருக்கும். உந்த பாலாய்ப் போன சீனியர்கள் தான் இந்த நல்ல பிள்ளைகளை பழுதாக்குவது! சீனியர் மாணவர்களின் தலையில் ரெண்டு போடு போட்டால் தான் மற்றையவர்கள் உருப்படுவார்கள். :angry:

மாப்பி தொழில் செய்யும் போது அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை,நான் படிக்கிறது முகாமைத்துவமும்,கணக்கியலும் அதை நாங்கள் ஓரளவு பிரயோகித்தாலே காணும் என்பது எனது அபிப்பிராயம்,சீனியர்சை பற்றி தப்பா சொல்லதயுங்கோ அவை தான் சரியான உதவி

:angry:

மனுசனை யுனிலதான் வாத்திமர் களுத்தறுக்கிறாங்கள் என்று யாழ் வந்தால் இந்த மாப்பி ஓவர கழுத்தறுக்குது :angry:

அது தான் மாப்பியும் வாத்தியோ தெறியாது

:P

  • தொடங்கியவர்

அட அப்படியா? அவுஸ்திரேலியாவில் முகாமைத்துவம், கணக்கியல் படிப்பவர்கள் பாடப்புத்தகம் படிக்கத் தேவையில்லையா? நல்ல விடயம்! :rolleyes:

இங்கு முகாமைத்துவம், கணக்கியல் புத்தகங்கள் கிலோ கணக்கான பாரமாக இருக்கும். முகாமைத்துவம் பாடத்தில் பொதுவாக பரீட்சை என்றால் சுமார் 100 M.C.Q கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். பாடப்புத்தகம் ஒழுங்காக படிக்காவிட்டால் நிலமை அம்போதான்.

கணக்கியல் பிரக்க்டிகலாக இருந்தாலும் பாடப்புத்தகத்தை ஒருமுறை வாசித்தால் தான் ஒழுங்காக பிழையின்றி கணக்கு போட முடியும் என்பதோடு, ஒரு பதிவை இடும் போது ஏன் அவ்வாறு செய்கின்றீர்கள் என்ற விளக்கமும் தெரியும். அடிப்படை விளக்கம் தெரியாமல் சோதனையை மாத்திரம் மனதில் வைத்து இப்படியென்றால் அப்படிப் பதிவு, அப்படியென்றால் இப்படிப் பதிவு என்று சும்மா கடைக்கணக்கு பதிவது போல் பதிந்து சோதனையில் நல்ல புள்ளிகள் பெறுவதில் பிரயோசனம் இல்லை.

ஏதோ உங்கள் மூளை போன போக்கில், உங்கள் சீனியர்களின் குறுக்கு வழிகாட்டலில் உங்களுக்கு தெரிந்தமாதிரி பாடத்தை நடத்துங்கோ! வாழ்த்துக்கள்! :lol:

மாப்பு ஒருவருக்கு ஒவ்வொரு வழி இலகு உங்களுக்கு புத்தகத்தை முழுவதும் வாசிப்பதால் முடியுது மற்றைய சில மேலோட்டமாக பார்த்துவிட்டு செய்வார்கள்,ஆகவே முகாமைத்துவம் படிக்கிறவர்கள் புத்தகத்தை மட்டும் நம்பி பரீட்சைக்கு போவார்களாயின் நிச்சயம் அவர்கள் பெயில் விடுவார்கள் என்பதை நான் சொல்லவில்லை என்னுடைய லெக்சரர் தான் சொல்லுவார்,ஆகவே உங்களுக்கு தனிபட்ட ஆளுமை திறமை முகாமைத்துவத்தில் இருக்கும் போது நான் சொன்ன 10% படிப்பும் தேவையில்லை போய் பரீட்சையில் இலகுவாக சித்தி அடையலாம்

ஆனால் ஆளுமை திறமை உங்களிடம் இல்லாம புத்தகத்தை நம்பி தாம் முகாமைத்துவ பரீட்சை எடுக்க போறீங்க என்றா நான் சொல்லுவேன் அந்த பரீட்சையில் கிரடிக்கு மிஞ்சி நீங்க அடைய போவது வேறோன்றுமில்லை,இதை நான் உங்களுடன் வாதாட வேண்டும் என்று சொல்லவில்லை நான் இந்த பாடத்தை 2வருடமாக கற்கிறவன் என்ற முறையிலும் லெக்சர்ஸ் சொன்னதையும் மனதில் வைத்து சொன்னேன்

  • தொடங்கியவர்

அதாவது நான் கூறவருவது என்னவென்றால் முகாமைதுவ பாட புத்தகத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்பதேயொழிய, பாடப்புத்தகத்தை மாத்திரம்தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வெறும் புத்தகப்படிப்பு மூலம் பயன் இல்லை. இதைத்தான் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று கூறினார்கள். ஆனால், அடிப்படை புத்தக அறிவு இல்லாமல் வெறும் லெக்சர் நோட்ஸ் மற்றும் சீனியர்கள் தரும் குறுக்குவழிகளை வைத்து முகாமைத்துவம் படிப்பது நல்லதல்ல. இங்கு முகாமைத்துவம் சோதனையில் Mid Term, Final Exam களில் சுமார் 75, 100 M.C.Q கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு 20 + 40 = 60 புள்ளிகள் பொதுவாக ஒதுக்கப்படும். ஆனால், மிகுதி 40 புள்ளிகள் பிரக்டிக்கல் ஆக இருக்கும். அதாவது, நான் கூறவரும் விடயம் என்னவென்றால் பாடப்புத்தகதை -Text Book- எவ்வாறு திறமையாக படிப்பது என்பதாகும்.

அப்ப, நீங்கள் சோதனைக் காலத்தில் மட்டும்தான் பாடப்புத்தகத்தை தூக்கிப் பார்ப்பீங்களா?

  • தொடங்கியவர்

எங்கே மாணவர்கள் ஒருவரையும் காணவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட ஜம்மு சொல்லுற மாதிரி அவையின்ட குரூப்பில இருக்கிற 10 ஊற்சுற்றுற ஆட்களுக்கு சரி,

பரீட்சையில் கேள்விகளுக்கு பிழை விடும்போது மைனஸ்சில மார்கஸ் போகும் ஆகவே வடிவா புத்தகத்தை படித்து இருந்தால் தான் நல்ல புள்ளிகளை எடுக்க முடியும்,இல்லாவிடில் மைனசில் மார்கஸ் போய் கொண்டே இருக்கும்.

ஆனால் ஜம்மு கோஷ்டி ஊர் சுற்றி புத்தகத்தை கடைசி கிழமை எடுத்து இரவு இரவா லைபரியில இருந்து படித்து எங்களை விட மார்க்ஸ் எடுப்பார்கள் அது எப்படி என்று தான் விளங்கவில்லை,நாங்கள் கஷ்டபட்டு படித்து கிரடிட்டில தான் வந்து இருக்கும்

ஆனால் அந்த வழியை பின்பற்றுவது கலைஞன் சொல்வது மாதிரி மிகவும் பிழையானது

:blink:

  • தொடங்கியவர்

ஓம் நீங்கள் சொல்வது சரி, நிறையப் பாடங்கள் குறிப்பாக மருத்துவம், உயிரியல் செய்பவர்கள் முழுப்புத்தகக்தையும் கரைத்துக் குடிக்க வேண்டி இருக்கும். இதில் M.C.Q இல் பிழையான விடைகளிற்கு மைன்ஸ் புள்ளிகள் வழங்கப்படும். எனவே, இதைத் தவிர்ப்பதற்குரிய ஒரே ஒரு முறை, சிறிது சிறிதாக தினமும் பாடப்புத்தகத்தை படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கும் விளையாட்டெல்லாம் இங்கு வேலை செய்யாது.

எங்கே மாணவர்கள் ஒருவரையும் காணவில்லை?

பிரசன்ட் மாப்பிசார்

:P

அட ஜம்மு சொல்லுற மாதிரி அவையின்ட குரூப்பில இருக்கிற 10 ஊற்சுற்றுற ஆட்களுக்கு சரி,

பரீட்சையில் கேள்விகளுக்கு பிழை விடும்போது மைனஸ்சில மார்கஸ் போகும் ஆகவே வடிவா புத்தகத்தை படித்து இருந்தால் தான் நல்ல புள்ளிகளை எடுக்க முடியும்,இல்லாவிடில் மைனசில் மார்கஸ் போய் கொண்டே இருக்கும்.

ஆனால் ஜம்மு கோஷ்டி ஊர் சுற்றி புத்தகத்தை கடைசி கிழமை எடுத்து இரவு இரவா லைபரியில இருந்து படித்து எங்களை விட மார்க்ஸ் எடுப்பார்கள் அது எப்படி என்று தான் விளங்கவில்லை,நாங்கள் கஷ்டபட்டு படித்து கிரடிட்டில தான் வந்து இருக்கும்

ஆனால் அந்த வழியை பின்பற்றுவது கலைஞன் சொல்வது மாதிரி மிகவும் பிழையானது

:lol:

என்ன நக்கலா சுற்றியும் படித்து உங்களை விட கூட எடுக்கிறொம் தானே பிறகு என்ன

:angry:

ஓம் நீங்கள் சொல்வது சரி, நிறையப் பாடங்கள் குறிப்பாக மருத்துவம், உயிரியல் செய்பவர்கள் முழுப்புத்தகக்தையும் கரைத்துக் குடிக்க வேண்டி இருக்கும். இதில் M.C.Q இல் பிழையான விடைகளிற்கு மைன்ஸ் புள்ளிகள் வழங்கப்படும். எனவே, இதைத் தவிர்ப்பதற்குரிய ஒரே ஒரு முறை, சிறிது சிறிதாக தினமும் பாடப்புத்தகத்தை படிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கும் விளையாட்டெல்லாம் இங்கு வேலை செய்யாது.

யார் அப்படி சொன்னது லெக்சர்சை வடிவா கேட்டு அதில் சில பகுதிகளை எழுதி வையுங்கோ அதை ஒவ்வொருகிழமையும் பாருங்கோ பின் அதை டேஸ்ட் நடக்க போகும் கடைசி கிழமைக்கு முன்னம் நன்றாக பார்த்துவிட்டு பயமில்லாம பரிட்சைக்கு போங்கோ

பயக்ட்துடன் பரிட்சைகு போனீங்கள் என்ற முகாமத்துவ பரிட்சை பெயில் என்று மட்டும் நினைவில் வைத்து கொள்ளுங்கோ

  • தொடங்கியவர்

பயத்துடன் எந்தப்பரீட்சைக்கு போனாலும் அதில் வெற்றி பெறமுடியாது.

நீங்கள் தலைப்பை பிழையாக விளங்கிவைத்து இருகின்றீர்கள். அதாவது இந்தக் கட்டுரையின் நோக்கம் பாடப்புத்தகத்தை மாத்திரம் படிப்பதல்ல. பாடப்புத்தகத்தையும் படிப்பதாகும்.

லெக்சர் நோட்ஸை எப்படி கையாள்வது என்பது சம்மந்தமாக விரைவில் இன்னொரு கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன்..

ஆனால், இங்கு பாடப்புத்தகங்களை படிக்கும்போது வரும் சிக்கல்கள், பிரச்சனைகள், குறுக்குவழிகள், உங்கள் தனிப்பட்ட அணுகுமுறைகள் என்பன பற்றி விவாதிக்கலாம்...

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.