Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UNDP08232019.jpg

ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது!

பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார்

கொழும்பு ஆகஸ்ட் 23:

புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார்.

download-10.jpg Pungudutivu Food Manufactures Society

புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும்.

புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும்.

813422-1-150x150.jpg

2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது.

download-3-3.jpg Jaffna Palmyrah Handycrafts

யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது.

சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது.

http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/?fbclid=IwAR14_CD9A4vOKQ1bSOE93zy6xUsx-1XYktQ7FeevJoP_9hINk6Y1l6qu3hU

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.