Jump to content

நல்லூரில் நடந்த மாம்பழத் திருவிழா


Recommended Posts

பதியப்பட்டது
நல்லூர்க் கந்தப் பெருமானின் மகோற்சவ காலத்தில் வேற்பெருமானைத் தரிசிக்க இலட் சக்கணக்கான பக்தர்கள் நல்லூர்த் திருப்பதியில் ஒன்று கூடுவர். நல்லூர் முருகனின் கொடி ஏறிவிட்டால் எங்கும் விழாக்கோலம். பக்திமயம், தெய்வீகப் பொலிவு. விரதம், அங்கப்பிரதட்சணம், காவடி, கற்பூர தீபம், தூபம் என எங்கும் ஒரே அருள்மயம்.
 
நேற்றைய தினம் காலைப்பொழுதில் மாம்பழத் திருவிழா இடம்பெற்றது. வசந்தமண்டபத் தில் ஒன்றாய் இருந்த விநாயகனும் முருகனும் சேர்ந்து வெளிவீதி வந்தனர்.
அடியார்கூட்டம் ஒன்றாக நின்றது. அரோகரா என்ற ஒலி எங்கும் பரவியது. முழு வீதி சுற்றி வருகையில்; முருகன் உலகம் சுற்றுவதாக தேர் இருப்பைச் சுற்றி வலம்வர,
விநாயகன் நேரடியாக முகப்புக்கு வருகிறார். 
 
ஒன்றாக வந்த சகோதரர்கள் பிரிந்த போது பக்தர்களும் பிரிந்தனர். ஒருபகுதியினர் விநாயகனோடு வந்து சேர்ந்தனர். மறுபகுதியினர் முருகனுடன் சேர்ந்தே வந்தனர்.
 
முதல் வந்த விநாயகனுக்கு மாங்கனி கிடைத்தது. தாய் தந்தையை வலம் வந்ததன் காரணமாக உலகைச் சுற்றி வந்ததாகப் பொருள் கொண்டு விநாயகனுக்கு மாங்கனி வழங்கப்பட்டது. முருகன் உலகைச் சுற்றி வந்தார். பிந்தி வந்ததன் காரணமாக பந்தயப் பொருளான மாங் கனியை அவர் பெற முடியாமல் போயிற்று. முருகன் முரண்டு பிடிக்கிறான். அறிவுடைய விக்னேஸ்வரன் அமைதியாக மாங்கனியுடன் நிற்கிறார். உன்னைப் பெற்ற தாயும் தந்தையுமே இந்த உலகம் என்ற தத்துவத்தை இவ்வையகத் தாருக்கு எடுத்துக் கூறுவதற்கு இதைவிட்ட தத்துவம் வேறுஎதுவுமாக இருக்க முடியாது.
 
இது மாம்பழத் திருவிழாவின் ஒரு தத்துவம்.  இன்னொரு தத்துவம் இங்கு ஈண்டு கவ னிக்கத்தக்கது.
 
அதாவது விநாயகன், முருகன் என்ற தலைவர்கள் ஒற்றுமையாக இருந்தபோது பக்தர்களாகிய மக்களும் ஒன்றாக; மகிழ்வாக; ஒற்றுமையாக இருந்தனர்.  மூத்தவரும் இளையவரும் பிரிந்தபோது மக்களும் பிரிந்தனர். வென்றவர் பக்கம் ஒரு பகுதியினர். தோற்ற முருகனிடமும் நியாயம் இருக்கிறது என்று உரைத்தவர்கள் முருகன் பக்கம்.
 
இத்தத்துவம் எங்கள் அரசியலின் நிலைமையை எடுத்துரைப்பதுபோல அமைந்திருந்தது.
 
இதற்கு மேலாக  மாங்கனி கிடைக்காததால் கோபம் கொண்ட முருகன் எல்லாம் துறந்து கோவணதாரியாகி தண்டாயுதத்துடன் பழனி மலை செல்கையில், எல்லோரிடமும் இனம் புரியாத கவலை. இதில் அதிசயம் என்னவெனில், மாங்கனி பெற்ற விநாயகனிடமும் கவலை தெரிந்தது.
 
 யாரிடமும் மகிழ்வில்லை. அவர்கள் ஒன்றாக வந்தபோது மக்கள் ஒன்றாக நின்றனர். இருவரும் பிரிந்தபோது மக்களும் தத்தம் அறிவுப்படி, நியாயப்படி பிரிந்தே சென்றனர்.
இதில் எது சரி, எது பிழை என்பதை யாராலும் அளவிட முடியவில்லை.
 
ஆக, ஒற்றுமை ஒன்றுதான் மகிழ்வைத் தரும். உரிமையைத் தரும் என்ற தத்துவத்தை மட்டுமே நாம் இங்கு பார்க்க வேண்டும்.
 
அதிலும் எஜமானார் குமாரதாஸ் மாப்பாணர் அவர்கள் பழனி ஆண்டியின் கோபம் தணிக்க ஒரு வியூகம் அமைத்தார். அதுதான் மகா திவ்ய அபிஷேகம். ஆம், தோற்ற முருகன் வீரன். சூரனை வதம் செய்தவன்.  ஒரு வீரனின் தோல்வியும் வெற்றிதான். அது வெற்றியைத்தான் கொடுக்கும் என்ற தத்து வத்தை உணர்த்துவதாக மாம்பழத்தை இழந்த முருகனுக்கு மகா அபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தது. 
 
நல்லூரில் மாம்பழத் திருவிழா பார்த்த மனநிறைவோடு புதிய பாதை வழி நடந்தேன். 
 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
    • உங்களுக்கு குசும்பு அதிகரித்துவிட்டது, அவர் இனப்பிரச்சினைக்கு (பொருளாதார பிரச்சினை) தீர்வு கூறுகிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.