Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மைத்திரி வடக்கிற்கு பயணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mithiri-720x450.jpg

ஜனாதிபதி மைத்திரி வடக்கிற்கு பயணம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளார்.

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.  அங்கு செல்லும் அவர் இன்று இடம்பெறவுள்ள 8 நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் அங்கு திறப்பார். காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டக் குடி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

முற்பகல் 10.30 மணிக்கு சுன்னாகம், திண்ணை இயற்கை விவசாயப் பண்ணையில் இடம்பெறும் தேசிய நீர் இணைப்புக்கான ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவுள்ளார்.

முற்பகல் 11 மணிக்கு யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையில் அமைக்கப்பட்ட கட்டடத்தைத் திறந்துவைக்கவுள்ளார்.

முற்பகல் 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.

பிற்பகல் 2.15 மணிக்கு கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியைத் திறந்து வைக்கவுள்ளார்.

அதன்பின்னர் பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நாட்டுக்காக ஒற்றிணைவோம் நிகழ்ச்சித்திட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

http://athavannews.com/ஜனாதிபதி-மைத்திரி-வடக்கி/

############   #############   #############

 கூட்டமைப்பு எம்.பி.க்கள் ... தங்கள்  பிள்ளைகளின்  பிறந்தநாள் விழாவுக்கு, மைத்திரியை அழைக்கவும்.  

6 hours ago, தமிழ் சிறி said:

முதல் நிகழ்வாக பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை மைத்திரிபால சிறிசேன நாட்டவுள்ளார். தொடர்ந்து அலுவலகம் ஒன்றையும் அங்கு திறப்பார். காலை 10 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டக் குடி தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பதற்காக வடமராட்சியில் அமைக்கப்பட்டவுள்ள பெரும் நீர்த் தேக்கத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இதன் மூலம் சிங்கள குடியேற்றம் நடக்க வாய்ப்புக்கள் உள்ளன 😞 

SL President Maithiripala Sirisena has come up with a promotional video advertising the launch of the so-called development of a fisheries harbour at Point-Pedro in Jaffna. The video itself turns out to be the “proof of concept” of Sinhala colonisation of Tamil fisheries industry in the North. A similar project was abandoned at Peasaalai in Mannaar recently. However, the SL Governor in North Suren Raghavan is determined to speedily commence the project amidst the objections from the grassroots including the three fisher associations and two prominent colleges of Eezham Tamils in the area. SL President Maithiripala's promo video exposes the agenda by featuring the intruding Sinhala fishers in Point Pedro. The Asian Development Bank is abetting the genocidal project, branded as a mega port project.

https://tamilnet.com/art.html?catid=13&artid=39558

 

‘பருத்தித்துறை மீனவர்களுக்கு பயிற்சி வழங்கவும்’

-எஸ்.நிதர்ஷன்

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல், தமது மீனவர்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள், பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

பருத்துறைதுறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், “இந்த துறைமுக அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்ட பாலத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. அவை தொடர்பாக பல தடவைகள் நாம் இங்குவந்து பேசிய நினைவுகள் இருக்கிறது.

“இன்று இந்த துறைமுகம் எந்தக் குழப்பமும் இல்லாம் மக்களுடைய விருப்பத்துடன், அபிவிருத்தி செய்யப்படுவதை நான் மகிழ்வுடன் பார்க்கின்றேன். இறுதி நேரத்தில் எழுந்த குழப்பங்களை தீர்த்துவைத்த ஆளுநருக்கும் நான் இந்த இடத்தில் நன்றி கூறுகிறேன். 

“சுமார் 175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. முதல்கட்டமாக 80 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது.

“மிக பெருமளவு முதலீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டம் எமது பருத்துறை மக்களுக்கு, மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக அமையும். 

“சரித்திர காலம் தொடக்கம் இந்த துறைமுகம் ஒரு வியாபார துறைமுகமாக இருந்துவந்துள்ளது. இங்கே சுங்க அலுவலகங்கள் இயங்கிக் கட்டடங்களை இப்போதும் காணலாம். மேலும் பருத்தி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை கொண்டிருந்தமையே, இந்த ஊருக்கு பருத்திதுறை என பெயர்வர காரணமும் ஆனது. 

“ஆகவே, இப்போது அபிவிருத்தி செய்யப்படும் இந்த துறைமுகம் எங்களுடைய மக்களால் பூரணமாக பயன்படுத்தப்பட வேண்டும். இங்குள்ள மீனவர்களை காட்டிலும் இந்த துறைமுகத்தால் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நன்மையடைவார்களோ என்ற அச்சம் மீனவர்களிடம் இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது. 

“ஆனால், எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எமது மீனவா்கள் அனுபவிக்க வேண்டும். ஆனால் சில ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆளுநர் கூறினார். அது மகிழ்ச்சியான விடயம். இந்த துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான தீர்மானத்தை எடுத்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன். 

“காலத்துக்கு காலம் பொறுப்பு வகித்த கடற்றொழில் அமைச்சர்களும் கூட இந்த துறைமுக அபிவிருத்தி விடயத்தில் மிக தெளிவாக இருந்தனர். அவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் அரசாங்கம் விசேடமாக துறைசார் அமைச்சு இந்த துறைமுகத்தை எமது மீனவர்கள் பயன்படுத்தகூடியவாறு, எமது மீனவர்களுக்கு பாரிய படகுகள், பயிற்சிகளை வழங்க முன்வரவேண்டும். கடல்வளத்தை கொண்டு எங்கள் பொருளாதாரத்தை நாங்களே கட்டியெழுப்பவேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பருத்தித்துறை-மீனவர்களுக்கு-பயிற்சி-வழங்கவும்/71-237623

வடக்கு,தெற்கு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்
 

புதிய அரசியலமைப்பு எனக் கூறி கோடிக்கணக்கில் பணம் வீணடிப்பு

கடந்த நான்கரை வருடகால ஆட்சியில் நான்கு வருடங்களாக பல கோடி ரூபாய் பணத்தை செலவிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியலமைப்பு வல்லுனர்களும் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

ஆனாலும், நாட்டுக்கு எந்தவித பயனும் ஏற்படவில்லை.

இதன் மூலம் வட மாகாண மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, தெற்கு வாழ் மக்களும் பகைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (30) யாழ்ப்பாணம் முற்றவெளி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் யாழ். மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும், இந்த குற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

2020ல் ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம் நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால் மேற் குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்த ஜனாதிபதி , அந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுமாறு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றம் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளேன்.

19 ஆவது திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளது. மூன்று தலைவர்களுக்கு ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் தெரிவித்தார். ”நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டம் கடந்த 23ஆம் திகதி யாழ். மாவட்டத்தை மையமாகக்கொண்டு ஆரம்பமானதுடன், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் பல மக்கள் நலன்புரி நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மாவட்டத்தில் வாழும் ஆறு இலட்சத்து பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கிடையில் நான்கு இலட்சத்தி ஐம்பாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளதுடன் இங்கு முன்னெடுக்கப்பட்ட ஐயாயிரத்து தொல்லாயிரம் வேலைத்திட்டங்களுக்காக 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட வேலைத்திட்டமொன்றினை எதிர்வரும் மாதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தார்.

யுத்த காலங்களில் பாதுகாப்புத்துறையினர் அபகரித்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு மீதமுள்ள காணிகளையும் அடுத்த மாதமளவில் முழுமையாக விடுவிப்பதற்கு தான் பணிப்புரை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

யார் எந்த விமர்சனங்களை முன் வைத்தாலும் அரசியல் காரணங்களுக்காக எவர் மீதும் துப்பாக்கிச் சூடுகளை மேற்கொள்ளாத ஒரே யுகம் தனது ஆட்சி காலமாகும். எதிர்காலத்திலும் அந்த சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் மற்றும் சமத்துவத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.

எஸ்.நிதர்சன், சுமித்தி தங்கராசா

https://www.thinakaran.lk/2019/08/31/உள்நாடு/39554/வடக்குதெற்கு-மக்கள்-ஏமாற்றப்பட்டுள்ளனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.