Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் Britain and brexit பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


பிரித்தானியாவும் பிரெக்சிட்டும் 
Britain and brexit
பா.உதயன் 


பிரித்தானியாவில் இன்று அனைவராலும் பேசப்படும்  ஒரு மிக முக்கியமான செய்தியாக இன்று பிரெக்ஸிட் (brexit) இருப்பதை காண முடிகின்றது .சுமார் மூன்று வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறார் .

இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய முன்னை நாள் பிரதமர் தெரசா மே கடந்த மூன்று வருடங்களாக ஐ .யூனியனோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு ஒப்பந்தம் செய்து மூன்று தடைவைகள் பிரித்தானிய பாராளுமன்றத்தினால் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட பின்பு பிரித்தானிய பழைமைவாத நரிகளோடு நாடகம் ஆடிய தெரசா மே  இறுதியில் ஆட்டம் இழந்து பதவி விலகினார் .

இதை தொடர்ந்து இன்னும் ஒரு பழைமை வாத நரியாகிய போரிஸ் ஜோன்சன் பிருத்தானியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்றார்.ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானிய பிரிய வேண்டும் (பிரெக்ஸிட்)என்று ஆரம்பத்தில் இருந்து போராடி வந்தவர் தான் இந்த புதிய பிரதமர்.

பல சட்ட சிக்கல்களையும்,வேல்ஸ் ,வடஅயர்லாந்து ,ஸ்காட்லாந்து போன்ற ஒன்று சேர்ந்த பிரித்தானியாவின் இறைமைக்கும் அதே போல்  பக்கத்து நாடு அயர்லாந்து உடனான பொருளாதார ஒப்பந்தம்,எல்லை கட்டுப்பாடு போன்ற பல பொருளாதார அரசியல் சட்ட சிக்கலோடு ஐரோப்பிய யூனியனோடு இன்றும் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமல் ஒரு இழுபறி நிலையே காணப்படுகிறது . 

பல ஆண்டு வரை  ஐ .யூ உடன் சேர்ந்து  இருந்த பிரித்தானிய முழுமையான ஓர் விவாகரத்தை வேண்டி நிற்கிறது .தெரேசா அம்மையார் தனது மந்திரி சபையுடன் ஒரு முழுமையான யுத்தம் நடாத்தி ஆட்டம் இழந்து சென்றிருக்கிறார்.இதே போன்று புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் பிரெக்ஸிட் ஓடு போராடும் ஒரு நிலைமை ஏற்பட்டு இருகிறது .

பிரித்தானிய அரசியல் வரலாற்றில்இது ஒரு பெரிய சவாலாகவே காணப்படுகிறது .
ஐரோப்பிய யூனியனிடம் இருந்து  பிரித்தானிய பிரிய வேண்டும் என்ற ஒரு பழமை வாத தேசியவாத சித்தனையோடு  ஒரு சாராரும் மற்றொரு சாரார் பிரியக் கூடாது என்ற வாதத்தோடும் இரு பகுதியார்க்கும் இடையே ஒரு இடியப்ப சிக்கல் பிரச்சினையாக பிரித்தானியாவுக்கு பெரும் ஒரு தலை இடியாக பிரெக்ஸிட் மாறியிருகிறது .

ஐ .யூ உடன் இருந்து பிரித்தானிய பிரிந்து போகும் இடத்து பிரித்தானியப் பொருளாதாரம் ஒரு பின்னடைவை  சந்திக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .ஐ .யூ ஊடாக பிரித்தானியாவுக்கு வரும் எந்த வித  நுகர்வுப்  பொருட்களும் வரி விலக்குடனே தான் வந்து சேருகின்றன .ஐ .யூ .இருந்து பிரித்தானிய எந்த விதமான ஒப்பந்தமும் இல்லாமல் விலகுமிடத்து பிரித்தானியாவுக்கள் வந்து சேரும் அனைத்து பொருளுக்கும் பிரித்தானிய வரி செலுத்தியாகவேண்டும் .

இதனால் அங்கு வாழும் மக்கள் பெரிதும் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தள்ளப்படுவர் .எல்லா வித நுகர்வுப் பொருட்களின் விலை முன்பை விட அதிகரித்தே காணப்படும் .இந்த நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் பெரிதும் பாதிப்பு அடைவர் .இது மட்டும் இன்றி பல தொழிற்சாலைகள் தாங்கள் இறக்குமதி செய்யும் உற்பத்தி சாதனங்களுக்கு முன்பை விட கூடுதலான பணம் செலுத்த வேண்டும் . இது மாத்திரம் இன்றி  தோழிலாளர் பற்றா குறையும் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

இவை அனைத்தையும் விட முக்கியமான பிரச்சினையாக இருப்பது(backstop )என  பேசப்படும் அயர்லாந்துக்கும் பிரித்தானியாவோடு சேர்ந்து இருக்கும் வட அயர்லாந்துக்கும் இடையிலான(boder) எல்லை பிரச்சினையாகும்  இது காலவரைக்கும் இரு நாடுகளுக்கு இடையிலான மக்கள் நடமாட்டம் நுகர்வு பொருட்கள்   என்பன கட்டுபாடு இல்லாமால் நடை பெற்று வந்தன .பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து போகுமிடத்து பிருத்தானியாவுடன் சேர்ந்து இருக்கும் வட அயர்லாந்துக்கும் அருகில் இருக்கும் அயர்லாந்து இடையிலான மக்கள் நடமாட்டம் பொருளாத ஒப்பந்தம் நுகர்வு பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத 
சேவை முதலிய முக்கிய சேவைகளை எப்படி தீர்ப்பது என்ற சிக்கலே இன்றும் ஐரோப்பிய யூனியனோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள முடியாத தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்கிறது .

இது இப்படி காணப்படும் இடத்து பிருத்தானியா ஏதோ ஒரு வழியில் ஐ .யு உடன் ஒரு ஒப்பந்தத்துக்கு போக வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது .
ஐ .யூ உடன் அங்கத்துவம் பெறும் எந்த ஐரோப்பிய நாடுகளும் அதன் சட்ட வரைபுக்கு உட்பட்டே ஆக வேண்டிய தேவை இருக்கிறது . அப்பொழுது தான் அவரகள் single market எனப்படும் ஒற்றை சந்தையிலோ அல்லது customs union ஒரு வரி விலக்கு சந்தையிலோ தம்மை இணைத்து கொள்ள முடியும் .

இவை மாத்திரம்இன்றி  ஐ .யூ .நின் நான்கு முக்கிய ஒப்பந்தங்களாக 
The free movement of goods ,services,capital,and persons within the e.u.are the famous four freedom the treaty of Rome அதாவது ஐ.யூநாடுகளுடையே பொருட்கள்,சேவைகள்,மூலதனம் ,மக்கள் ,இலகுவாக போய் வர வேண்டும் .ஆனால் பிரித்தானிய முதல் மூன்று சேவைகளுக்கு மாத்திரமே தாங்கள் உடன் படுவதாகவும் நான்காவதான ஐரோப்பிய மக்களின் சுதந்திரமாக  பிரித்தானியாவுக்குள் வந்து  குடி உரிமை  தொழில் வாய்ப்புகள் என்பன முழுமையாக தடை செய்யப்படும் என்றும் கூறி வருகின்றது . இது சுய நலன்களோடு கூடிய ஒரு cherry picking போன்றது என்று ஐ .யூ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றது .ஐரோப்பிய யூனியனின் ஒற்றை சந்தைக்கான (single market )ஒப்பந்தங்களில் இருந்து மீறுவதாகவே இது அமையும் என்று 
ஐரோப்பிய யூனியன் தொடர்ந்து மறுத்து வருகின்றது 

பிரித்தானியாவின் புதிய உள்நாடு அலுவலக அமைச்சராக பதவி ஏற்று இருக்கும் பிரீதி பட்டேல் பிருத்தானியாவில் புலம்  பெயர்ந்து வாழும் மக்களுக்கும் இனிமேல் புதிதாக பிரித்தானியாவுக்குள் வேலை தேடியோ  அல்லது அங்கு வந்து நிரந்தர குடி உரிமை பெறுவதற்வதற்காக  வரும் ஐரோப்பிய யூனியன் மக்களுக்கும் புதிய குடிவரவு சட்டங்களை அமுல் படுத்தவுள்ளார் . பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து எந்தவித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் 31ம் திகதி ஐப்பசி மாதம் முழுமையாக விலக்குமிடத்து அந்த நாளில் இருந்தே ஐரோப்பிய யூனியனில் இருந்து வரும் மக்களின் சுதந்திரமான நடமாட்டம்(freedom of movement )நிறுத்தப்படும் என்று மிகவும் கண்டிப்பான ஒரு சட்டத்தை அமுலாக்குவதாக கூறி இருக்கிறார் .இவரின் இந்த கருத்துக்கு எதிர் கட்சியான தொழிலாளர் கட்சி உட்பட பல சட்டவாக்க அறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டும் அன்றி இது உடனடியாக 
நடை முறைக்கு சாத்தியப்படாததென்றே கூறி வருகின்றனர் .

எதிர் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் நடுத்தர வர்க்க ஏழை தொழிலாளிகளினதும் ,அகதிகளாக தஞ்சம் கேட்டு வருவோரும் மிகவும் கடுமையான சட்ட கொள்கைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் நிலைமை ஏற்படலாம் . எது எப்படி இருப்பினும் பிரித்தானியாவின் அரசியல் பொருளாதார சுய நல அடிப்படையில் எப்படியான புதிய ஒழுங்குகள் சட்டங்கள் வர இருக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

பிருத்தானியாவை 1509 தொடங்கி 1547 வரை ஆண்ட 8 ம் ஹென்றி மன்னன் ஒரு சர்வாதிகார ஆட்சியை( authoritarian rule) நடத்தினான் 6 தடவை திருமணம் செய்த இவன் தனது இரு மனைவிமாருக்கு கழுத்தைஅறுத்து (behead) கொலை செய்தான் .அன்று அரசனாய் இருந்த ஹென்றி மன்னன் போலவே இன்றைய பெரிய இராச்சியத்தின் பிரதமராய் இருக்கும் போரிஸ் ஜோன்சன் செயல் படுவது போல் தெரிகின்றது .

பாராளுமன்றுக்கு எதிரான ஒரு அரசியல் சட்ட மரபுகளை மீறி பாராளுமன்றத்தை கூட்ட விடாமல் பல வாரங்களுக்கு ஒத்தி வைக்கும் அனுமதியை பிரித்தானிய மகா ராணியிடம் இருந்து அனுமதி பெற்று இருக்கிறார் .இது எதிர் காலத்தில் பெரும் சிக்கலை இவருக்கு ஏற்படுதும் என்பது தெரிகிறது .இவர் ஐரோப்பிய யூனியனோடு ஒரு புதிய ஒப்பந்தத்தை செய்து கொள்வாரா,அல்லது எந்த ஒப்பந்தமும் இன்றி வெளியேறுவாரா , ஆட்டம் இழப்பாரா ,அல்லது புதிய தேர்தல் ஒன்றை பிரித்தானிய மக்கள் எதிர் கொள்வார்களா என்று எதிர் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .இது சார்ந்த விவாதம் எல்லாம் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றன .பாராளுமன்றமே ஒரு யுத்த களமாக மாறி ஒருவரை ஒருவர் 
குற்றம் சுமத்தி வருகிறார்கள் .

எது எப்படி இருப்பினும் பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழ தமிழ் மக்கள் பிரெக்ஸிட்(Brexit) பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வது 
முக்கியமாகும் .எதிர் காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட போகும் அரசியல் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் எப்படியான ஒர் தாக்கத்தை அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுத்தும் என்பதை சரியான தெளிவான கண்ணோடத்தில் இருந்து பார்த்து இனி வரப்போகும் பாராளுமன்ற தேர்தல்களில் சரியான கட்சிக்கு வாக்கு அளிப்பதன் மூலம் உங்கள் அரசியல் கலாச்சார பொருளாதர உரிமைகளுக்கு உத்தரவாதம் ஆக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .

கட்சியின் தலைவர்களால் ஏன் தமது கட்சி உறுப்பினர்களை கையாள முடிவதில்லை?


(இவர்கள் எவ்வாறு இந்த உலகையே ஆண்டார்கள்? பிரித்து ஆளும் கொள்கை இவர்களையே இன்று பிரித்துள்ளதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

கட்சியின் தலைவர்களால் ஏன் தமது கட்சி உறுப்பினர்களை கையாள முடிவதில்லை?


(இவர்கள் எவ்வாறு இந்த உலகையே ஆண்டார்கள்? பிரித்து ஆளும் கொள்கை இவர்களையே இன்று பிரித்துள்ளதா?

பழமைபேண் கட்சி உறுப்பினர்களிடையே பல வித்தியாசமான கொள்கைகளை கொண்ட உறுப்பினர்கள் உள்ளார்கள் . பழமை வாதிகள் ,தேசியவாதிகள் ,புதிய பொருளாதார கொள்கைகளை கொண்டொர்.நாங்கள் (we) அவர்கள் (they ).
என்று புலம் பெயர்ந்து வாழுவோர் மீதான வெறுப்பு இப்படி பல காரணிகளாலும் அதே போல் தாங்கள் ஜனநாயக பண்புகளோடு கூடிய எந்த கருத்தையும் சொல்லுவதற்கும் கட்சி தலைவர்களின் சர்வாதிகார போக்கை எதிர்த்தும் தனித்து முடிவுகளை 
எடுப்பதினால் பல தலைவர்களால் தமது கட்சி உறுப்பினர்களை தமது கட்டுப்பாடில் வைத்திருக்கு முடியாமல் போகலாம் .நீங்கள் சொல்லுவது போல் பிரித்து ஆளும் (divide and rule )கொள்கையில் பிரசித்தி பெற்றவர்கள்.இறைமை அதிகாரம் எப்போதுமே தம்மை விட்டு போகாமல் தமது கைகளில் எப்போதுமே அதிகாரம் இருக்கவேண்டும் என்றே அரைவாசி உலகையும் கட்டி ஆண்டவர்கள் .பிரித்து ஆளும் கொள்கையும் ஒரு காரணமாக அமையலாம் .இன்று ஐரோப்பிய யூனியனுக்கு பிரித்தானியாவுக்கு இடையில் ஒரு தேசிய நலன் சார்ந்த அரசியல் பொருளாதார யுத்தம் நடைப்பிருக்கிறது அதே வேளை வெளி நாட்டவர் மேல் கொண்ட வெறுப்பும் காரணமாக அமையலாம் .

உங்கள் கருத்துக்கு நன்றி Ampanai.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.