Jump to content

திருக்குறள் பொது நூலா?


Recommended Posts

Posted

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்பது முதலிய திருக்குறள்களால் மனத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளால் வாக்காற் செய்யப்படும் வழிபட்டையும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின். 2

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை. 9

என்ற திருக்குறள்களாற் காயத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும் கூறுதலானும்,

  • Replies 130
  • Created
  • Last Reply
Posted

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

என்ற திருக்குறள்களால் பிறவி(பெத்த) நீக்கமும் முத்திப் பயனுங் கூறுதலானும்,

Posted

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்

முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

என்ற திருக்குறளால் முத்தியிலும் முப்பொருளும் முதல்வன் உபகாரமும் உண்டென்று கூறுதலானும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், 'திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்' என்பது தேற்றம்.

முற்றும்

திருச்சிற்றம்பலம்

thiruvana.jpg

  • 2 years later...
  • 2 months later...
Posted

திருக்குறள் பொது நூலா?

ஆதியறிய முடியாத மிகத் தொன்மையான சைவ (இந்து) சமயத்தின், நீதி நூலகில் ஓன்று தான் - திருக்குறள்.

சில அந்நிய மத சதிகாரர்கள், அவர்களின் கைக்கூலிகள், கொலைஞர் கருணாநிதி போன்ற போலித் திராவிடர்கள் இந்த நூலை சர்ச்சைக்கு உள்ளாக முற்பட்டு வந்துள்ளனர்.

இது உலக மக்கள் அனைவருக்குமான போது நீதியைக் கூறும் இந்து சமய நூல்.

  • 9 years later...
Posted
On 6/1/2007 at 5:03 PM, ArumugaNavalar said:

இனி வள்ளுவரை வைணவர் எனலாமோ எனின் அதுவும் பொருந்தாது. ஏனெனில் வைணவ ஆகமங்களில் விண்டுவிற்கு எட்டுக் குணங்கள் கூறப்படவில்லை. அன்றியும் வள்ளுவர் காமத்துப் பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்துள்

 

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்

தாமரைக் கண்ணா னுலகு (1103)

 

என்று வைகுண்டத்தைக் காட்டிலும் மொன்றொட்டுயில் இனிது என்று கூறுமாற்றான் வைகுண்டத்தைத் தாழ்த்திக் காட்டினார். வைணவராயின் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். எனவே வள்ளுவர் வைணவராகார் என்பது பெறப்படும்.

 

இனி எண்குணம் என்பதை அணிமாவை முதலாக வுடையன வெனவும் உரைபாருமுளர் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். அணிமா முதலிய எட்டாவன:- அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா முதலியன மக்களாலும் முயன்று பெறப்படுதலின் குணமாக முடியாது. ஏனெனில் குணமாவது குணியோடு ஒற்றித்து. நிற்பதாகலின் அவ்வாறு ஒற்றித்து நில்லாது முயன்று பெறப்படும் சித்தியாகலின் அவற்றைக் குணமெனக் கொள்ள இயலாது.

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்
தாமரைக் கண்ணா னுலகு

இந்தக் குறளின் பொருள் பலரும் சரியாக புரியாது மெலெழுந்தவாரியாகச் சொல்லிச் செல்கின்றனர்.

வள்ளுவர் தமிழில் தோய்ந்தவரும் தாமரைக் கண்ணனை பல இடங்களிலு சுட்டுவதாலும், அதன் பொருள் இவ்வாறு கொள்ள வேண்டும் என்பதே சரியாக இருக்கும்.

ஏன் எனில் இந்த குறள் பால் அதிகாரத்தில் வருகிறது. புணர்ச்சியில் துய்த்தால் அது சிற்றின்பமேயன்றி பேரின்பமாக இருக்காது. இருக்க முடியாது. வள்ளுவன் சிற்றின்பத்தை தூக்கிப் பிடிப்பவன் அல்ல. அவன் நோக்கும் அதுவல்ல என்பது சாலத் தெரிந்த ஒன்று.

அப்படி இருக்க இதன் பொருள் தாழ்வீழ்வார் என்பது வைகுண்டத்தை அடைந்த ஒரு ஆத்மா(இங்கே ஆத்மா என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றாலும், தாமரைக் கண்ணனின் தாளை அடைந்தார்க்கு வைகுண்டப் ப்ராப்தியே மிகும் என்பதால் ஆத்மா என கொள்ளப்பட்டது) எப்படி பேரின்பத்தில் துய்க்குமோ அதைப் போல என கலவியற்கு சிற்றின்பம் எனச் சொல்கிறார் எனப் பொருள் கொள்வதே சாலச் சிறந்ததாகும். அதாவது கலவியற்கு சிற்றின்பமே பேரின்பம் என்றாகும் எனக் குறிப்பிடுகிறார் இங்கே. எனவே அவர் திருமாலை குறைத்து மதிப்பிட்டார் எனவே வைணவர் சம்மந்தம் இல்லைனெக் கொள்வது சரியான நோக்காகது.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.