Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்….

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தி யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம்….

October 5, 2019

 

gnasara-Protest.jpg?resize=660%2C371

முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05.10.19) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார்  ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்  அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில் மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனைய பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’, ‘தேசிய சண்டியனான ஞானசார தேரரைக் கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

72638662_2527512084144003_21814803499623

72583039_1817633325047145_25180733678320

72561870_442642576345858_882861550241579

72457411_402448557120638_173328046801236

72415712_679426982563196_664497855917981

72333835_390272581922736_383005083010334

72080793_477876652809026_517323091624748

72074541_929276057457042_860134668947265

71654269_452757982006021_551273043297566

71511933_664414997299478_409537923374697

71338478_724606988003606_216575450330169

71325055_493939871157259_916006119095979

 

 

http://globaltamilnews.net/2019/131581/

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (05.10.19) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது." 

இந்த ஆர்ப்பாட்டத்தின் தேவை புரிகின்றது.

ஆனால், நடாத்தப்பட்ட இடம் மற்றும் இறுதியில் கோரிக்கைகளை யாரிடத்திலும் சமர்ப்பிக்காத நிலைமை இதன் உண்மையான நோக்கம் கட்சியின் அரசியல் தேவையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.