Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

The Lamp Of Truth - பொய்யா விளக்கு - London, Montreal - Today (Nov 16) at 3 PM, Ottawa Nov 17 at 3 PM

Featured Replies

பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம்.  அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது  இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல 
முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்..  
 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

 
 
 
Ottawa_Poster1.jpg

 

UzpfSTgyOTU2NTU2MToxMDE2MjQyMTc5MTU5NTU2

பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser
பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா
Singer: Bamba Bakya
இசை : ஜிதின் ரோஷன்
Music: Jiththin Roshan
வரிகள்: சுவாமிநாதன், தனேஸ் கோபால்
Lyricists: Swaminathan, Thanesh Gopal
படம்: பொய்யா விளக்கு
Movie: The Lamp of Truth

  • தொடங்கியவர்

ஒட்டாவா திரையரங்கு பொய்யாவிளக்கு ஆதரவாளர்களால் நிறைந்ததால், வந்தவர்களை திருப்பியனுப்பாமல் இரண்டாவது திரையரங்கையும் ஒருங்கமைப்பாளர்களால் உடனடியாக ஏற்பாடு செய்தனர். இப்பொழுது அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் வரதராஜாவின் வாழ்வில் 2009 ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து இயக்குனர் தனேஷ் இயக்கிய பொய்யா விளக்கு பார்த்தவர்களின் பலத்த ஆதரவை பெற்றது.

ஈழ தமிழர் இனப்படுகொலை வரலாற்றை வைத்தியர் வரதராஜாவின் கதை ஊடாக உலகத்திற்கு சொல்லும் திரைப்படமாக இது இருக்கும். யதார்த்தமான நடிப்பில், இனிய பாடல்களுடன், வழமையான தமிழ் படங்களில் வரும் வன்முறை காட்சிகள் அளவுக்கு கூட இல்லாமல் சிறப்பாக படமாக்க பட்டுள்ளதாக பார்த்தவர்கள் தெரிவித்தனர். குடும்பத்துடன் எதிர்கால தலைமுறை தமிழர்களும் தமிழர் வரலாற்றை அறிய இந்த திரைப்படம் வழிசெய்கிறது. வைத்தியர் வரதராஜா இந்த படத்தில் தன பாத்திரத்தை தானே ஏற்று நடித்ததை இளையோர் முதல் முதியோர் வரை நன்றியுடன் பாராட்டினர்.

மிக ஆழமான தமிழர்களின் உணர்வு ரீதியான வரலாற்றை சிறப்பாக திரைக்கதை ஊடாக திரையில் கொண்டு வந்த தனேஷ் பார்வையாளர்களின் மிகுந்த பாராட்டினை பெற்றார்..
பொய்யாவிளக்கு ஒட்டாவா, மொன்றியல் கனடா, லண்டன் ஐக்கிய இராச்சியம் ஆகிய நகரங்களில் வாரஇறுதியில் ஆதரவாளர்களுக்கான பிரத்தியேக காட்சிகளாக திரையிடப்பட்டது. இந்த மாத இறுதியில் டொரோண்டோவில் திரையிடப்படுகிறது, அடுத்த மாதத்தில் அமெரிக்காவிலும் பின்னர் ஏனைய உலக நாடுகளின் நகரங்களிலும் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோருக்கு திரைக்குழுவின் நன்றிகள்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், உட்புறம்
 
?__tn__=kC-R&eid=ARCfqz3L7VE2r9xKK_K_Hq5
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.