Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் 


External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”.

இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிடம் கூறி உள்ளார்.

மஹிந்த ராயபக்ச ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கு கூறி வந்தார் ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வில் தான் 13 வது சரக்கு மேல் கொடுப்பதாக கூறி இருந்தார்.தற்போது இவர் பிரதமர் ஆகவும் இவரது தம்பி கோத்தபாய ராயபக்ச ஜனாதிபதி ஆகவும் பதவி ஏற்றுள்ளார்கள்.

இலங்கை ஜனாதிபதியின் வெற்றியை சிறு பான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்கும் என்ற கணிப்பை எல்லாம் உடைத்து எறிந்து ஒரு பெரும் சிங்கள பெரும் தேசியமும் இனவாதமும் மீண்டும் வெற்றி அடைந்திரிக்கிறது.இது எங்கள் தேசம் எமக்கான எங்கள் தலைவரையும் நாமே தீர்மானிப்போம் நீங்கள் வேறு நாங்கள் வேறு என்பது போல் தேர்தல் முடிவு சொல்லி நிற்கிறது .இப்படி இருக்கும் நிலையில் சிறுபான்மையிரனுக்கான தீர்வு என்பது எந்தளவுக்கு இப்போ சாத்தியமாகும் என்பது பிரச்சினையான ஒரு இடியப்ப சிக்கலான விடியமாகவே பார்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டு அரசம்,சர்வதேசமும் ,நிலத்திலும் புலத்திலும் இருக்கும் எல்லா தமிழர் தலைமை அமைப்புகளும் சேர்ந்து இந்திய அரசுக்குக்கு மேல் மேலும் அழுத்தம் கொடுத்து இந்தியா மூலமாக இலங்கை அரசை முழுமையான ஒரு அதிகார பகிர்வுக்கு வலியுறுத்தவேண்டும்.இதை விட வேறு வழி இப்போதைக்கு ஈழத்தமிழருக்கு திறப்பதாக இல்லை.சிறி லங்கா அரசு இறங்கி வருமா இல்லை  தமிழர் பகுதிக்கான அபிவிருத்தி என்ற பணியோடு மீண்டும் ஒர் ஏமாற்றத்தோடும் காலம் கடத்தலோடும் தமிழருக்கான தீர்வை தட்டிக் கழிக்குமோ காலம் தான் பதில் சொல்லவேண்டும்.முன்பு இருந்த பேரம் பேசும் வலுவோடு இன்று ஈழத் தமிழர் இல்லை.இந்தியா வேண்டாம் சர்வதேசம் வேண்டாம் எமது பிரச்சனையை நாமே தீர்ப்போம் என்ற நிலையில் நாம் இப்போ இல்லை.நடப்பது நமது மக்களுக்கு நல்லதாக ஒரு விடிவு வருமானால் வரவேற்போம்.

சாத்மீக வழியிலும் ஆயத போராட்ட வழியிலும் 50 வருடங்களுக்கு மேல் போராடியும் இறங்கி வராத சிங்கள பெரும் தேசியம் எந்த அம்ச கோரிக்கைகளுக்கும் இறங்கி வராது.இந்தியாவோ சர்வதேசமோ மாறிவரும் உலக ஒழுங்கிற்கு அமைய பெரும் அழுத்தம் கொடுக்காமல் அசையாது சிங்கள தேசியம்.இந்து சமுத்திர பூகோள அரசியல் மாற்றத்துக்கு  ஏற்ப இந்திய வெளிஉறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பது போல் தெரிகிறது.இலங்கையின் போருக்கு பின்னான அரசியல் மாற்றங்களோடு தமிழர்களின் அரசியல் தீர்வில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.ஈழ தமிழரும் இந்தியாவும் மறக்க முடியாத காயங்களுடன் இருந்த போதிலும் எங்கள் வெற்றியிலும் தோல்வியிலும் பங்கு கொண்ட தமிழ் நாட்டுக்கும் டெல்கிக்கும் தார்மீகக்  கடமை இருக்கிறது ஈழ தமிழருக்கு ஒரு  நியாயமான அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு.

ஈழ தமிழரின் பிரச்சினையில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.ஈழ தமிழருக்கு தமிழ் நாட்டுடன் இருக்கும் தொப்பிள் கொடி உறவு, இதனால் தமிழ் நாட்டில் ஏற்படும் அரசியல் குழப்ப நிலைமை,மற்றும் உள்நாட்டு அரசியலுடன் தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கு இடையிலான  அரசியல் உறவு,இறுதி யுத்தத்தில் பல ஆயிரம் மக்களை காப்பாற்ற முடியாமல் அமைதி காத்து இந்திய தேசத்தின் தார்மீக  கடமைகளையும் மனிதாபிமானத்தையும் மறந்து செயற்பட்டமை என்பன முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இலங்கையின் சமாதானம் தான் இந்தியாவினதும் இந்து சமுத்திர அரசியலின் சமாதானமுமாகும்.

இனியும் ஈழ தமிழர்கள் ஒரு கற்பனைவாத கனவுவாத அரசியல் செய்ய முடியாது.தமிழ் நாட்டு மக்களோடும் இந்தியாவோடும் ஏனைய சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச தொடர்புகளை (international relations)ஏற்படுத்த வேண்டும் .அரசியல் காய் நகர்த்தலில் நிரந்தரமான நண்பனும் இல்லை நிரந்தரமான எதிரியும் இல்லை.அகத்திலும் புலத்திலும் தமிழர் ஒரு பலம் வாய்ந்த ஜனநாயக அரசியல் சக்தியாக பேரம் பேசும் நிலைக்கு நாம் வரவேண்டும்.வெறுமனே ஈழ தமிழரின் தலைமையை குறை கூறுவதும் இந்திய வேண்டாம் சீன வேண்டாம் சர்வதேச நட்புறவு வேண்டாம் என்று எங்கள் தலையிலே நாம் மண் அள்ளி போடும் அரசியல் இனியும் செய்ய முடியாது.

புலம் பெயர் தமிழ் மக்கள் இன்று ஓர் பலமான சக்தியாக அரசியல் பொருளாதார ரீதியாக பலம் பெற்று வருகிறார்கள் இதை சரியான முறையில் இளைய சமுதாயம் நகர்த்த வேண்டும் இதுவே எமக்கு பேரம் பேசும் ஓர் ஜனநாயக அரசியல் சக்தியாக எதிர்காலத்தில்  திகழும் என்பதில் ஐயம் இல்லை .

எல்லா உலக சக்தி வாய்ந்த நாடுகளும் தத் தமது உள்நாட்டு அரசியல் பொருளாதார நலன் கருதியே செயல்ப்படுகின்றன இதில் இந்தியா  விதி விலக்கல்ல தமது நலனுடன் சேர்த்தே தமிழர் விடுதலையும் கையாளும் என்பதில் எந்த மாற்று கருத்துக்கும் இடமில்லை இதை தமிழர் தலைமை சரியான அரசியல் சாணக்கியதோடு நகர்த்துவதில் இருந்து தான் ஈழ தமிழரின் உரிமையை வென்றாக முடியும்.

எந்த போர் குற்றத்துக்காக எவரை தண்டிப்பதற்கு நாம் எல்லா சர்வதேசத்திடமும் ஐக்கிய நாட்டிடமும் நீதி கோரி நின்றோமோ அதே சர்வதேச தலைவர்கள் புதிய ஜனாதிபதிக்கு வரிசையாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.இன்றைய பூகோள அரசியலானது நீதி நியாயம் தர்மம் நோக்கி பயணிப்பதில்லை மாறாக சுரண்டல் பொருளாதார அவர் அவர் நலன்களோடு மட்டுமே பயணிக்கிறது .ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு மாறாக தங்கள் பொருளாதார நலன்களோடு ஒத்து வருபவர்களின் பாதையோடு மட்டுமே இந்த நாடுகளின் திறந்த பொருளாதார சித்தாந்தம் பயணிக்கிறது.இனி வரும் காலங்களில் இலங்கையுடனான பொருளாதர ஒப்பந்தங்களுடன் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஓர் பூகோள அரசியல் போட்டி ஆரம்பிக்கலாம்.

எது எப்படி இருப்பினும் ஈழ தமிழர்கள் சம உரிமையுடனும் நீதியாகவும் கண்ணியமாகவும் வாழ வேண்டி பல ஆயிரம் உயிர்களை தந்த விடுதலை போராளிகளினது தியாகம் வீண் போகாமல் நமக்குள் நாம் ஒரு ஐக்கியமான ஒற்றுமையுடன் பலமான ஒரு சக்தியுடன் எமது விடுதலையை நோக்கி தெளிவான ஓர் அரசியல் சித்தாந்தத்தோடு நகர அகமும் புறமும் ஒன்று இணைய வேண்டும் .

Oslo/22/11/19
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.