Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள நாட்டின் மிச்சம் மீதியையும் பிடுங்கிச் செல்லப்போகும் மஹிந்த குடும்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள நாட்டின் மிச்சம் மீதியையும் பிடுங்கிச்

செல்லப்போகும் மஹிந்த குடும்பம்

-குயின்ரஸ் துரைசிங்கம் (கனடா)-

கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி, தன் சிறகையும் விரித்தாடி, தானும் மயில் என்று கற்பனையில் மகிழ்வடைந்த இலக்கியக் கதைபோல், இலங்கையை ஒரு இஸ்ரேல் நாடு என்று கற்பனை பண்ணிக்கொண்டு, தன்னை பிறிதொரு துட்டகைமுனு என்று தானே புகழ்பாடிக்கொண்டு, எழுந்தமானத்திற்கு தமிழர் தாயகத்தைத் துவம்சம் பண்ணப் புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப சோதரர்களும், கனவு கலைந்து நிஜவுலகிற்குள் இடது காலை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் தமிழ் நாகரீகத்தையும் தமிழ் விழுமியங்களையும் மட்டுமல்லாது, தமிழ் உணர்வுகளையும் தமிழரிடமிருந்து அப்புறப்படுத்தி, ஒட்டுமொத்த பௌத்த சிங்கள நாட்டை உருவாக்கி, புலிகளை ஓரம்கட்டி விடுகிறேன் பார் என்று சில மாதங்களுக்கு முன்னர் சொல்லிவிட்டு, தனக்கே உரிய மிடுக்கு நடையுடன் ~ரஜினி ஸ்டைலில்| சால்வையை கழுத்தில் தொங்கவிட்டு தொங்கிச் சென்ற மகிந்த, ~மிஹின் ஏயர்| ஐ காட்டுக்குள் இறக்கி, சத்தமில்லாமல் வீட்டுக்கு வருவது பற்றி ஆராயும் நிலையில் தலைகுனிந்து நிற்கிறார்.

சிறீலங்கா என்ற ~வெல்பஃயர் ஸ்ரேற்|றை (றுநடகயசந ளுவயவந), வெளிநாட்டு மாதாந்த உதவிப் பணத்தில் (பிச்சைப் பணத்தில்) நகர்த்திவரும் சிங்கள அரசுகள், கள்ள நோட்டு அடித்து, கள்ள வோட்டு எடுத்து, கள்ளப் பொய்களை நயமாக உரைத்து, தமது மக்களை தாமே ஏமாற்றி காலம் தள்ளும் நிலை கடந்த பல வருடங்களாக நீடிக்கிறது. இருந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதையாக, போட்ட குண்டு வெடிக்கவில்லை, பறந்த விமானம் பகலில் வர முடியாது, பலாலிக்கு மேலால் பத்து நிமிடம்தான் பறந்தது என்று பாட்டி கதை சொல்லி தப்பிக்கும் பரிதாப நிலை வந்திருக்கிறது.

எரிகிற வீட்டில் பிடுங்கின கொள்ளி மிச்சம் என்ற கதையாக, கட்சி தாவியும் கட்சியிலிருந்தும் ஒட்டுப் படையாகவும் பச்சைப் பரதேசிகளாகவும் சுயத்தை விற்ற கோடரிக் காம்புகளாகவும், பல வடிவங்களில் பலரும், மகிந்த மேசையிலிருந்து கீழே விழும் எச்சில் எலும்புகளைக் கடித்தபடி, வாழாவென்றிருக்கிறார்கள்.

தங்களுக்கு வாக்களித்த அல்லது தங்களை நம்பிய மக்களுக்கு ஆகக்குறைந்த சிலவற்றையாவது செய்ய வேண்டுமென்ற எந்த எண்ணமும் இல்லாது சிவனே என்று தங்கள் பைகளை நிறைப்பது, கொழும்பின் தற்போதைய அரசியல் நாகரீகமாக மாறியிருக்கிறது.

எதை எதையெல்லாம் சொல்லி வாக்கு வேட்டையில் இறங்கினார்களோ, அவற்றைத் தவிர மீதி அத்தனையையும் வெட்கமின்றிச் செய்வதே வாடிக்கையாகிவிட்ட வேடிக்கையை, இலங்கை அரசியல்வாதிகளிடம் அப்படியே பார்க்க முடிகிறது. கிழக்கு மக்களிடம் வாக்குவேட்டை நடத்தியவர்கள் எல்லோரும், இப்போது அந்த மக்கள் படும் மிக மோசமான இன்னல்களுக்கு எதுவிதத்திலும் சாந்தி செய்ய தயாராக இல்லை. தயாராக இல்லை என்பதைவிட, தங்கள் சுகபோக அமைச்சக வாழ்விலிருந்து வெளியேவந்து, அன்று மேடைகளில் புலம்பிய எதையும் சிந்தித்துப் பார்க்கும் நிலையில்கூட அவர்கள் இல்லை என்பதே உண்மை.

2002ல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தானதும், விடுதலைப் புலிகளிடம் இடைக்கால ஆட்சி அல்லது ஏதாவது அதிகார அலகு கையளிக்கப்பட்டால், அங்கிருந்தும் எதையாவது பெற்றுவிட வேண்டுமென்ற சுயநோக்கத்துடன், கிளிநொச்சிக்கும் வன்னிக்கும் அடுத்தடுத்து படையெடுத்த ஆறுமுகங்களும் ஹக்கீம்களும், இப்போது சத்தமில்லாமல் மகிந்த தாவணியில் தொங்குகிறார்கள். வன்னியில் அடுக்கிய உறுதிமொழிகளையும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களையும் அடிப்பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, மகிந்த அடுப்படியில் ஏப்பம் விடுகிறார்கள். விடுதலைப் புலிகளைப் பலமிழக்கச் செய்வதாக கோத்தபாய சொன்னபோது, சேர்ந்துபாடிய இவர்கள், வான்படைத் தாக்குதல்களால் தங்கள் குரலை மீண்டும் சரிசெய்துகொண்டு, சுரம்மாற்றி வாசிக்கத் தயாராகிறார்கள்.

மிக விரைவில் எரிக் சொல்ஹெய்ம் வன்னி சென்று, விடுதலைப் புலிகளின் தலைமையை நேரில் சந்திக்கும் சூழல் இருப்பதாக, தற்போது உத்தியோகப்பற்றற்ற தகவல் வெளியாகிவரும் நிலையில், அதே வேகத்தில் மீண்டும் கிளிநொச்சி சென்று புலித்தேவனையும் தமிழ்ச்செல்வனையும் சந்தித்து குசலம் விசாரிக்க, இவர்கள் தயாராவார்கள் என்பதில் ஐயமில்லை.

400-500 கிலோமீற்றர்கள் பறந்துசென்று பக்குவமாக தெரிந்தெடுத்த நிலைகளைத் தாக்கிவிட்டு, பத்திரமாகத் தளம் திரும்பும் வான்பறவைகளைப் பார்த்து மலைத்துப்போயிருக்கும் சிங்கள அரசை, புதிய கள யதார்த்தம் அச்சமடைய வைத்திருக்கிறது. நாய் கடித்தால் தொப்பிளைச் சுற்றி ஊசி போட்டு தப்பிக்கலாம் என்ற பாணியில், கடற்புலிகள் அடித்தாலும், கிபீரும் மிக் வகைகளும் மேலிருந்து அடித்து தப்பிக்கலாம் என்று சாவகாசமாக உறக்கத்திற்குச் சென்ற மகிந்தருக்கு, தனது மிஹின் விமானத்தில் கிரிக்கெட் பார்க்கப் போவதற்கே இரண்டு தடவை விமான நிலையம் செல்லும் நிலை தோன்றியிருக்கிறது. மகிந்த ஆட்சிக் காலத்தின் தேன்நிலவு நிறைவுபெற்றிருக்கிறது. அந்த சுகங்கள் இனி என்று வரும் என்று ஏங்கித் தவிக்கும் நிஜவுலகில் மனிதர் விக்கித்துக் கொண்டிருக்கிறார்.

கிழக்கை முடித்துக்கொண்டு வடக்குக்குப் போகிறோம் என்று சீனாவில் சொல்லிவிட்டு வந்த மகிந்தரை, சட்டத்தின்படி ஆடுங்கள் என்ற ~அம்னஸ்ட்டி இன்ரர்நஷனல்| கோரிக்கை உசுப்பேத்தியது. நியூயோர்க் மனித உரிமை அமைப்பைச் சமாளிக்கலாம் என்று வெளிக்கிட்ட மகிந்தரை, போப் ஆண்டவர் உடனே வா என்று அழைப்புவிடுத்து பக்கத்தில் இருத்தி பாடம் நடத்தி, போனதும் பேச்சை ஆரம்பி என்று சட்டாம்பி பாணியில் எச்சரித்து அனுப்பியிருக்கிறார். இதற்குள் இங்கிலாந்து சட்டசபை பிரத்தியேகமாக ஒரு குழுவை உருவாக்கி, இலங்கைப் பிரச்சனையில் தலையிட அனுப்புகிறது. இவற்றைச் சரிசெய்வதற்குள், தொடர்ந்தும் வான் தாக்குதல் நடக்கும் என்று முறைத்துக்கொண்டே இளந்திரையன் சவால் விடுக்கிறார்.

ஒரு பக்கம் கேலிக்குரிய ரம்புட்டான்வெல உச்சந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுகிற மாதிரி, வாயில் வந்ததையெல்லாம் உளறிக்கொண்டிருக்க, பெர்னான்டோபுள்ளே மட்டும் ஏகமாய்க் குழம்பிப் போயிருக்கிறார். தான் அமைச்சர் என்றதையும் மறந்து, எங்க படை நூறு போட்டால் அவன்கள் படை இரண்டு தானே போட்டது என்றும், இயலுமென்றால் பகலில் வரட்டும் என்றும் முட்டாள்தனமாய்க் கத்துகிறார். 25 வருட போர்க்காலத்தில், உலகிலுள்ள அத்தனை தளபாடங்களையும் கடனுக்கு வாங்கி, எழுந்தமானத்திற்கு மக்கள் பகுதிகளில் குண்டுபோட்டு பாரிய அழிவுகளை உருவாக்கிவரும் சிங்கள விமானப் படைகூட, இதுவரை பகலில் வந்து குண்டுபோடப் பயப்படுகிறார்கள். அதை மறந்துபோன புள்ளே, புலிகளை பகலில் வரட்டும் என்று கோரியது, சிங்கள ஆய்வாளர்களிடம்கூட நகைப்பிற்குரிய பேச்சாக அலசப்படுகிறது.

மகிந்த அமைச்சரவையே கேலிக்குரிய ஒரு கூட்டமாக மாறியிருக்கிறது. யாப்பா புலம்பலும், பாலித அலம்பலும், பிரதமர் விக்கிரமர் விசும்பலும், போகல்லாகம பொய்களும் சர்வதேச பிரதிநிதிகளை ஏகமாகக் கோபப்பட வைத்திருக்கிறது. திடீரென தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி செயலாளர் பவுச்சர் கொழும்பு செல்வதற்கும் இதுவே காரணமாக அமைந்துள்ளது.

தொடர்ந்தும் இருளில் வாழும் சிங்கள மக்கள்

சிங்கள மக்களை இருளில் வைத்துக்கொண்டு, புலிகளை அழிப்பதாக சொல்லிச்சொல்லி சுயகட்சி ஆதரவு தேடிக்கொண்டு, மறுபக்கம் தமிழ் மக்களை அழித்து, தமிழர் பிரதேசங்களைச் சூறையாடும் சிங்களக் கட்சிகள், தமது மக்களிடமிருந்தே அந்நியப்படும் யதார்த்தம், புலிகளின் வான்படையால் புதுப்பிறப்பெடுத்திருக்கிற

''பிரகடனப்படுத்தப்படாத குடும்ப சர்வாதிகாரம்''

-நா.யோகேந்திரநாதன்-

சிறிலங்காவில் அரசியல் குடும்ப ஆதிக்கம் கோலோச்சி வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. சிறிலங்கா சுதந்திரம் பெற்ற காலத்தில் சேனநாயக்கா குடும்பத்தினரின் ஆதிக்கம் மேலோங்கியிருந்ததாகவும் 1956ன் பின்பு பண்டாரநாயக்கா குடும்பத்தினரின் அதிகாரம் மேலோங்கி இருந்ததாகவும் குரல்கள் எழுந்தன 1971ம் ஆண்டு ரோஹண விஜயவீர தலைமையில் ஒரு ஆயுதக் கிளர்ச்சி எழுச்சி பெற்ற போது குடும்ப ஆதிக்கங்களை ஒழிப்பது என்ற கோஷம் உரத்து ஒலித்தது. இதனால் ஏற்பட்ட பண்டார நாயக்கா சேனநாயக்கா குடும்ப ஆதிக்கங்களுக்கு எதிராக ஏற்பட்ட ஒரு அலையை நன்றாகவே பயன்படுத்திக் கொண்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1977ல் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார். அதையடுத்து 1995ல் ஆட்சியதிகாரத்தை மீண்டும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றிய பின்பு சந்திரிகா, அனுருத்த குடும்பம் மேலாதிக்க நிலை பெற்றது.

சந்திரிக்காவின் வீழ்ச்சியை அடுத்து தற்சமயம் தென்னிலங்கை ராஜபக்ச குடும்பத்தினரின் அதிகாரம் சிம்மாசனம் ஏறியுள்ளது. சிங்கள கலாசார பாரம்பரியத்தை பொறுத்தவரையில் இந்த குடும்ப ஆதிக்கம் அப்படியொன்றும் பெரிய ஆதிக்கம் அல்ல. ஒட்டு மொத்தத்தில் பெரும் நிலவுடமையாளர்களே சிறிலங்கா சமூகத்தின் மேலாதிக்க சக்திகளாக விளங்கி வருவதும் ஏனையோர் ஏதோ விதத்தில் அவர்களின் அதிகார இணைப்பில் இணைக்கப்பட்டவர்களாக இருப்பதும் அவதானிக்க வேண்டிய விடயங்களாகும். இத்தகைய நிலப்பிரபுத்துவக் குடும்பங்களுக்கும் ஏனையோருக்கும் உள்ள உறவு ஒரு புறம் ஒரு உரிமை சார்ந்ததாகவும் இன்னொரு புறம் ஒரு வழிபாட்டு முறைமை கலந்ததாகவும் அமைந்துள்ளது. இதற்கு இவ்வாதிக்கக் குடும்பங்களுக்கும் ஏனையோர்க்குமிடையே நிலவி வந்த பொருளாதார பிணைப்பு தற்சமயம் பலவீனப்படுத்தப்பட்டாலும் கூட இன்னமும் அதன் பாதிப்பு உள்ளமையும் ஒரு காரணமாகும்.

இவ்வகையில், மகிந்த ராஜபக்ச சனாதிபதியாக பதவியேற்றமையின் பின்பு சிறிலங்காவின் பாரம்பரியத்திற்கு அமைய ராஜபக்ஷ குடும்பத்தின் குடும்ப ஆட்சிகக்காலகட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஏற்கனவே இருந்து வந்த குடும்ப ஆட்சிகள் தங்கள் மேலாதிக்கங்களையும் ஒடுக்கு முறைகளையும் தேசிய அளவில் ஒரு புறம் மறைமுகமாகவும் தமிழ் மக்கள் மீது பகிரங்கமாகவும் மேற்கொண்டன. அதாவது தேசிய மட்டத்தில் ஒரு சனநாயக போக்கையும் தமிழ் மக்கள் மீது ஒரு சர்வதிகார போக்கையும் கையாண்டன.

அவர்கள் சிங்கள மக்கள் மீது மேற்கொண்ட ஒடுக்க முறைகள் வழமையான ஒரு முதலாளித்துவ நிலப்பிரபுவுத்துவ வரம்புகளுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட்டன சர்வதேச அளவிலும் கூட சனநாயக ஆட்சி மேலாதிக்கம் பெற்றதாகவும் பண்டாரநாயக்கா குடும்ப ஆட்சி ஒ நடுநிலைமையான நிலைப்பாட்டைக் கொண்டதாகவும் அமைந்திருந்தன. தமிழ் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளைக் கூட சர்வதேசத்தின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்காத வகையில் அவை இலாவகமாக அவை கையாண்டு வருகின்றன.

ஆனால் ராஜபக்ச குடும்ப ஆட்சியில் நிலைமை படு மோசமாக மாற்றமடைந்தள்ளது. ஒரு மூன்றாம் தரத்தில் சந்திச்சண்டித்தனம் என்கிற அளவிற்கு கீழிறங்கிவிட்டது.

அதாவது ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு எதிராக உள்ளுரிலும் சரி சர்வதேச அளவிலும் சரி வாய் திறப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது ஒடுக்குமுறையையும் காடைத்தனத்தையும் கட்டவிழ்த்து விடுதல் என்ற மட்டத்திற்கு நிலைமை கீழிறங்கிவிட்டது.

இப்போது இவர்களின் கோரக்கரங்கள் சிங்கள மக்கள் மீதும் பகிரங்கமாக விரிந்துவிட்டமை, இப்போ பத்திரிகைகள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தொடரும் படுமோசமான அடக்குமுறை நடவடிக்கைகள் மூலம் வெளிப்பட்டுள்ளன தமிழ் மகளையும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் தடுக்கவெனவும் தமிழ் மக்களின் சனநாயக உரிமைகளை இல்லாதொழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் இப்பொது சிங்கள மக்களின் சனநாயக உரிமைகளை பறிப்பதற்கு பயன்படுத்தப்பட ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடே மௌபிம ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரி கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்டமையாகும். அது மட்டுமன்றி அதன் நிதி முகாமையாளர் கைது செய்து விசாரிக்கப்பட்டதுடன் அப் பத்திரிகையின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன. அதையடுத்து இப்போது அதிகளவில் டெய்லிமிறர் பத்திரிகை மீதும் அதன் ஆசிரியர் சம்பிகா லியனாராச்சி மீதும் மிகக் கீழ்த்தரமான கொலை மிரட்டல் சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவினால் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது கருணா குழுவினால் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவ்விடயத்தில் அவருக்கு நாங்கள் பாதுகாப்புக்கு வழங்க முடியாது எனவும் கோதாபய தெரிவித்துள்ளார். ஒரு தேசத்தின் பாதுகாப்பு செயலாளரின் இப்படியான வார்த்தைகள் வியப்புக்குரியவை மட்டுமல்லாது அந்த நாட்டின் அரசியல் தராதரத்தையும் கேள்விக்குறியாக்குபவை. அது மட்டுமன்றி நாட்டின் தலைவர் எனக் கூறப்படும் சனாதிபதி மகிந்த ராஜபக்ச கூட இது தொடர்பாக விசாரணைகளை லியானாராச்சி மீது நடத்தப்போவதாக மிரட்டியுள்ளார்.

ஆனால் ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்பார்த்தது போல் இவ்விவகாரம் சந்திச் சண்டித்தனம் என்ற மட்டத்திற்குள் அடங்கிவிடல்லை.

இந்தப் பயமுறுத்தல் விவகாரம் சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பினால் பாப்பரசர் பெனடிக்ற் அவர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டதுடன் சிறிலங்கா சனாதிபதி பாப்பரசரைச் சந்திக்கும் போது இவ்விவகாரம் எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்கப்பட்டது.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாக டெய்லி மிறர் பத்திரிகைக்கு விஜயம் செய்த பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்பொட் அவர்கள் தனது ஆதரவை தெரிவித்தமைக்காக பாதுகாப்புச் செயலாளரின் அலுவலக்திற்கு உடனடியாக அழைக்கப்பட்டார் அது மட்டுமன்றி கோதாபய ராஜபக்ஷ பகிரங்கமாகவே வெளிநாட்டு ராஜதந்திரிகள் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாகவும் தாங்கள் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்தார்.

அதாவது கனநாயக மரபு எனப்படும். பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக இன்னொரு நாட்டின் ராஜதந்திரிக்குப் பேசும் உரிமை இல்லாம் இது அந்நியத் தலையீடாம்- இது சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்ப்பாடு.

இது தவிர இங்கு இடம் பெறும் ஆட்கடத்தல்கள் காணாமற் போதல்கள் படுகொலைகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையும் ஏனைய மனித உரிமை நிறுவனங்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தன இதில் ஒரு அம்சமாக சர்வதேச மன்னிப்புச் சபையால் மேற்கொள்ளப்பட்ட “சட்டப்படி விளையாடு” இயக்கம் சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை சர்வதெச அளவில் அம்பலப்படுத்தியிருந்தது. இதையடுத்து தற்சமயம் சிறிலங்கா அரசு சர்வதேச மன்னிப்புச்சபைப் பிரதிநிதிகளுக்கு சிறிலங்கா வருவதற்கான விசாவை வழங்க மறுத்துவிட்டது.

அது மட்டுமன்றி மிக் விமானங்கள் கொள்முதலில் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் 12 இலட்சம் மில்லியன் மோசடி தெடர்பான விடயங்களை வெளிட்டமை காரணமாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அது மட்டுமன்றி சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும் ஏனைய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர் என கொழும்புப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது உள்ளுரின் பத்திரிகையாளர்கள் என்றால் என்ன? அரசியல்வாதிகள் என்றால் என்ன? மகிந்தரின் குடும்ப ஆட்சிக்கு எதிராக வாயைத்திறந்தால் அவர்கள் மீதான ஒடுக்குமுறை கடுமையான முறையில் கட்டவிழ்த்து விடப்படும் என்பது நிதர்சனமாகியுள்ளது. இது இன்றும் துணை ஆயுதக் குழுக்கள் மூலம் படுகொலைகளை மேற்கொள்ளும் அளவிற்கு மூன்றாம் தர சந்திக் காடைத்தனமாக விரிவடைந்துள்ளது.

இதே போன்று சர்வதேச நிறுவனங்களையும் தங்களுக்கு துதிபாடும் ஒரு கூட்டமாக ராஜபக்ச குடும்ப ஆட்சி எதிர்பார்க்கிறது. அவர்களின் சனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாகவோ மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவோ எவராவது குரல் கொடுத்தால் அவர்கள் அதைக் கொடூரமாக எதிர்க்குமளவுக்கு அரசநிறுவனங்களக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமளவுக்கு கீழிறங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடே சர்வதேச மன்னிப்புச்சபை மீதும் பிரிட்டிஸ் தூதுவர் மீதும் கொண்ட கோபமாகும். எப்படியிருப்பினும் இன்று மேற்கொள்ளப்படும் மகிந்தரின் குடும்ப சர்வதிகாரம் நிச்சயமாக தம்மைத்தாமே தனிமைப்படுத்தவும் அமுக்கவுமே வழி கோலும் என்பதே வரலாற்று நிர்ப்பந்தமாகும் வரலாற்றின் நியாயத்திலிருந்து இவர்கள் மட்டும் தப்பி விடமுடியுமா?

http://www.tamils.info/

Edited by Iraivan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.